Tuesday, October 16, 2018

நடுகல்

நடுகல்

நடுகல் பற்றிய குறிப்புடைய பாடல்கள்:
அகநானூறு – 35, 53, 67, 131, 289, 297, 343, 365, 387
புறநானூறு – 221, 222, 223, 232, 261, 306, 314, 329
ஐங்குறுநூறு – 352
பட்டினப்பாலை – line 79
மலைபடுகடாம் – lines 388, 395

சங்க காலத்தில் வீரர்களுக்கும் மன்னர்களுக்கும், அவர்கள் இறந்த பின், நடுகல் நட்டும் வழக்கம் இருந்தது.  கோப்பெருஞ்சோழன், அதியமான் நெடுமான் அஞ்சி ஆகிய இரு மன்னர்களுக்கு நடுகல் நட்டியதை பாடல்கள் மூலம் அறிகின்றோம். தங்கள் மன்னனின் ஆநிரைகளை பிறர் கவர்ந்துச் செல்லும் பொழுது அதைத் தடுத்து நிறுத்தி உயிர் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டன.   போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கும் நடுகற்கள் நட்டப்பட்டன.  நட்டிய கற்களில் இறந்தவர்களின் பெயர்களையும் அவர்களது மறச் செயல்களைப் பற்றிய விவரங்களையும் கூர்மையான உளியால் பொறித்தனர். ஆண்களுக்கு மட்டுமே இந்தக் கற்கள் நட்டப்பட்டன.  பெண்களுக்கு நடுகல் நட்டியதாக சங்க இலக்கியத்தில் குறிப்பு எதுவும் இல்லை.

புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய சங்க நூல்களில் நடுகல் பற்றிய குறிப்புகள் பல உள்ளன.  அக நூல்களான அகநானூறு ஐங்குறுநூறு ஆகியவற்றில் பாலைத் திணைப் பாடல்களில் மட்டுமே நடுகல் பற்றிய குறிப்புகள் உள்ளன.  இந்தத் திணையில் உள்ள நிலம் வறண்டுப் போனது. அங்குள்ள மரங்களும் செடிகளும் வாடிய நிலையில் இருக்கும்.  மிருகங்கள் குடிக்க நீர் இல்லாது தவிக்கும். பயணம் செய்பவர்களின் பொருட்களைக் கைப்பற்றி அவர்களைக் கொல்லும் கள்வர்கள் அங்கு உண்டு.  தலைவன் பொருள் சேர்க்க பாலை நிலம் வழியாகச் செல்வான்.  தலைவனும் தலைவியும் உடன்போக்கில் இந்த நிலத்தைக் கடந்து செல்வார்கள்.  அங்கு இறந்தவர்களுக்காக நாட்டிய நடுகற்கள் இருக்கும்.

பழந்தமிழர்கள் நடுகற்களை மிகவும் மதித்து, அவற்றை வழிபட்டனர்.  நடுகற்களைச் சுற்றி வேலை நட்டி அவற்றில் கேடயங்களைத் தொங்க விட்டார்கள்.  நடுகற்களை மயில் இறகுகளாலும் மலர்களாலும் அலங்கரித்து,  அவற்றின் மீது கள்ளை ஊற்றி சிறப்பத்தினர்.  துடி அடித்து ஆடுகளை அவற்றிற்குப் பலியாகக் கொடுத்தனர்.

    தமிழர்கள் நடுகல்லை எந்த அளவிற்குச் சிறப்பித்தார்கள் என்பதை இந்தப் பாடலின் மூலம் நாம் அறியலாம். மாங்குடி கிழார் மிக அருமையாக இங்கு விவரிக்கின்றார்,

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு 335, 9-12)

“ஒத்துப் போகாத பகைவர்களை (தெவ்வர் = பகைவர்) எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்டிய கல்லைத் தான் நாங்கள் வழிபடுவோம் (பரவும் = வழிபடும்). நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது.”

    நோய் பாடியார் என்ற பெயரையுடைய இந்தப் புலவர் பாலை நிலப் பாதையில் கண்டதைப் பற்றிக் கூறுகின்றார்,

அரம் போழ் நுதிய வாளி அம்பின்
நிரம்பா நோக்கின் நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை  (அகநானூறு 67, 5-11)

“அரத்தால் பிளக்கப்பட்ட நுண்ணிய முனையையுடைய அம்பினால், முழுப் பார்வையுடன் நோக்காது ஆநிரையைத் திருடுபவர்கள், நெல்லி மரங்களுடைய நீண்ட பாதையில், இரவு நேரத்தில் வந்து கொன்ற நல்ல போர்களில் ஈடுப்பட்ட வில்லின் அம்பை  கொண்ட வீரர்களின் பெயரும் புகழும் எழுதப்பட்ட மயில் இறகு சூட்டிய கேடயங்கள் (பலகை = கேடயம்) தொங்கும் ஊன்றிய வேல்களால் சூழப்பட்ட, விளங்கும் நடுகற்கள் இருக்கின்றன எல்லாப் பாதைகளிலும் (அதர் = பாதை).”

    பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தலைவன் பொருள் ஈட்ட போயுள்ளான். பிரிவினால் வருந்திய தலைவி தோழியிடம் பேசுகின்றாள்.  தலைவன் கடந்து சென்ற பாலை நிலத்தைப் பற்றி இந்தப் பாடலில் சீத்தலைச் சாத்தனார் விவரிக்கின்றார்,

கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடுங்கான் முருங்கை வெண் பூத் தாஅய்
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்
விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்  (அகநானூறு 53)

சூரியனின் கடுமையான கதிர்களின் வெட்பத்தால் ஏற்பட்ட நில பிளப்புகளில் பெரிய காட்டின் முருங்கை மரங்களின் வெள்ளை மலர்கள் கொட்டிக் கிடக்கும்.  ஆளில்லாத நீண்ட வறண்ட பாதையில் கூர்மையான பற்களையுடையச் ஆண் செந்நாய் வருத்தத்துடனும் பசியுடனும் தன் துணையுடன், தனிமையான பாதையில் (இயவு = பாதை) மறவர்களின் குறி தப்பாத வில்லிடம் வீழ்ந்தவர்களுக்காக நட்டிய எழுதுக்களையுடைய நடுக்கல்லின் இனிய நிழலில் வசிக்கும். அங்கு கள்ளிச் செடியும் வாகை மரங்களும் இருக்கும் (உழிஞ்சில் = வாகை). அங்கு உட்புறம் வாடிய வளைந்த மூக்கையுடைய நத்தை (நொள்ளை நத்தை) வாகை மரத்தின் சொர சொரப்பான அடியில் பொதிந்து இருக்கும்.

    இந்தப் பாடலில், நடுகல்லுக்கு அன்றைய தமிழர்கள் தந்த மரியாதையைப் பற்றிக் கூறுகின்றார் புலவர்,

இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடுகல்லின் நாள் பலி யூட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந் நறைக் கொளீஇய
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும்  (புறநானூறு 329, 1-4)

“வீடுகளில் கள்ளைச் செய்யும் சில குடிகளையுடைய சின்ன ஊரில், நடுகல்லிற்கு தினமும் படைத்து, நல்ல நீரால் அதைக் கழுவி, நறுமண எண்ணையைக் கொண்டு விளக்கு ஏற்றுவார்கள் (நெய் = எண்ணை, நெய்).  அதன் கருமையான பெரும் புகையானது நறுமணத்தோடு தெருக்களில் கமழும்.”

    தன்னுடைய அருமையான பெண், அவளுடைய தலைவனுடன் உடன்போக்கில் பாலை நிலத்தின் வழியே சென்றதால், வருந்தி, பாலை நிலத்தில் உள்ளவற்றைப் பற்றிக் கூறுகின்றாள் ஒரு தாய்,

நடுகல் பீலி சூட்டித் துடிப் படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம்  (அகநானூறு 35)

“நடுகற்கள் மயில் தோகையால் அலங்கரிக்கப்படும்.   துடி அடித்து அரிசிக் கள்ளை அவற்றின் மீது ஊற்றுவர்.  செம்மறி ஆடுகளைப் பலி கொடுப்பார்கள் (துரூ =  செம்மறி ஆடு).  போக்குவரத்து இல்லாத வளைந்த பாதைகளை உடையது இறைச்சி நாற்றம் அடிக்கும் அரிய பாலை நிலம்.”

    ஓதலாந்தையார் யானையின் தும்பிக்கைச் சொர சொரப்பை, எழுத்துக்கள் பொறித்த நடுகல்லுடன் ஒப்பிடுகின்றார்,

விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங்கை யானை  (ஐங்குறுநூறு 352, 1-3)

“கள்வர்களுடைய வில்லினால் செலுத்திய குறித்தப்பாத அம்புகளால் உயிர் இழந்தோர்களுக்கு நட்டிய எழுத்துக்களையுடைய நடுகற்களைப் போன்று உள்ளது, யானையின் தழும்புடைய பெரிய தும்பிக்கை.”

    மலைபடுகடாம் என்ற ஆற்றுப்படை நூலில் ஒரு பாணர் இன்னொரு பாணருக்கு நன்னன் என்ற குறுநில மன்னனின் நாட்டுக்கு செல்லும் வழியைப் பற்றி கூறும் பொழுது நடுகற்களை அவர் காண்பார் என்றுக் கூறுகின்றார்,



ஒன்னார்த் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா இல்இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே

இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக … 390

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின் (மலைபடுகடாம் 386 – 391)

புறமுதுகு இட்டவர்களை ஏசி நல்ல முறையில் தம் உயிரைக் கொடுத்த    வில்லின் அம்பை உடைய  வீரர்களின் நீங்காத பெரும் புகழுடைய பெயர்களோடு நடுகற்கள் பல உண்டு வளைந்த பாதையில்.  உங்களுடைய பாட்டு இன்பத்தைத் தரும் வகையில் தாளத்தோடு பாடுங்கள். தொன்றுத் தொட்டு வழங்கும் மரபு முறைப்படி உங்கள் யாழை இயக்கி, நடுகற்களை வணங்கி விட்டு நீங்கள் செல்லுங்கள்.

    தன்னுடைய நண்பனான மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தப்பின் ஔவையார் மிகவும் வருத்திப் பாடுகின்றார்,

இல்லாகியரோ காலை மாலை
அல்லாகியர் யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளாதோனே?  (புறநானூறு 232)

“காலையும் மாலையும் இல்லாமல் போகட்டும்!  என் வாழ் நாள் இல்லாமல் போகட்டும்!  தன் நடுகல்லில் மயில் தோகையைச் சூட்டி சிறிய கிண்ணத்தில் நாரால் வடித்த மதுவை கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானா, ஓங்கிய சிகரங்களையுடைய விளங்கும் மலைகள் நிறைந்த நாட்டையே பிறர் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளாதவன்?”

    கோபெருஞ்சோழன் இறந்தப் பின் அவனுக்கு நடுகல் நட்டினார்கள். மன்னனின் நண்பரான புலவர் பொத்தியார் அப்பொழுது வருந்திப் பாடுகின்றார்,

நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே   (புறநானூறு 221, 8-13)

“ஆராய்ந்துப் பார்க்காத கூற்றுவன் அவனது இனிய உயிரை எடுத்துக் கொண்டு விட்டான்.  வருந்தும் உங்கள் குடும்பத்தை அணைத்துக் கொண்டு வாருங்கள், உண்மையைப் பேசும் புலவர்களே! நாம் கூற்றுவனைத் திட்டுவோம்.  நம்முடைய புரவலன் இறந்ததால் இந்த பெரிய உலகம் வருந்துகின்றது (அரந்தை = துன்பம்). குறையில்லா நல்ல புகழையுடையவன் (நல்லிசை = நல்ல புகழ்) நடுகல்லாகி விட்டான்.”

    மதுரை மருதன் இளநாகனார் பாலை நிலத்தில் உடைந்த நடுகல் ஒன்றைப் பற்றி விவரிக்கின்றார் இந்தப் பாடலில்,

மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப்

புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்

கண்ணி வாடிய மண்ணா மருங்குல்

கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து  (அகநானூறு 343, 47)

“உப்பு வணிகரின் (உமண்மகன் = உப்பு வணிகர்) மர மாட்டு வண்டியின் சக்கரம் வலுவான நடுகல்லின் மெல்லிய மேல் பகுதியை சிதைத்து விட்டது.  இட்ட மாலை வாடி, நடுகல் கழுவப்படாமல் உள்ளது (மண்ணா = கழுவாது).  கூர்மையான உளியால் அதன் மீது செதுக்கிய எழுத்துக்கள் அழிந்து விட்டன.”

Thursday, October 4, 2018

நடுகல் மற்றும் கொற்றவை வழிபாடுகள்

நடுகல் மற்றும் கொற்றவை  வழிபாடுகள்

வேட்டுவ குடியினர் தமிழ் மண்ணில் முதன் முதலில் நடுகல் மற்றும் கொற்றவை  வழிபாடுகளை உருவாக்கி வழிபட்டவர்கள் .காலப்போக்கில் வேட்டுவ குடியினரின் நடுகல் மற்றும் கொற்றவை வழிபாடுகளின் பழக்க வழக்கங்களை மற்ற சாதியினரும்  பின்பற்றினார்கள் .
 கொற்றவை  கடவுளை முருகன் ,சிவன் ,காளி போன்ற கடவுள்களோடு  தொடர்புபடுத்தப்பட்டது.

                                                                   
                                                    மற்போர் வீரன்

மல்லன் என்ற சொல் சாதி பெயர் கிடையாது

  மல்லன் என்ற சொல் 'மற்போர் வீரன் ' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது என்பதை

மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி - புறம் 80/2
களம் புகு மல்லன் கடந்து அடு நிலையே - புறம் 80/9

என்ற அடிகள் உறுதிப்படுத்துகிறது .

மல்லல் என்ற சொல் 'வளமை' என்ற பொருளில்  பயன்படுத்தப்பட்டது என்பதை

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் - நெடு 29
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய - நற் 73/௩
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர - புறம் 174/9
‘குரூஉக்கெடிற்ற குண்டுஅகழி
‘வான்உட்கும் வடிநீண்மதில்
மல்லல்மூதூர் வயவேந்தே!’ puram 18\10-12

Thursday, September 27, 2018

புலவர் இறையிலி காணி

புலவர் இறையிலி  காணி

ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய - புறம் 201/14
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய் - புறம் 203/11

பாண் குடியை சேர்ந்த புலவருக்கு, வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள் ,வேளிர்கள் மற்றும் வேந்தர்கள்   புலவர் இறையிலி  காணி கொடுத்து கிழார் என்ற பட்ட பெயரையும் கொடுத்தார்கள் .

 ஒன்பதாம் பத்தில் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையை  பாண் குடியை சேர்ந்த ஒரு புலவர்  பாடியுள்ளார். அதற்குப் பரிசாக முப்பத்திரண்டாயிரம் பொற்காசுகளையும், ஊரும்(பெருங்குன்றூர் ,பாலக்காடு பகுதியில் இருக்கும் எயில் குன்றம் பகுதி ) மனையும் வாழ்வதற்கு மலையும், அணிகலனும் பெற்றார். இந்த புலவர்  கிழார் என்ற பட்ட பெயரையும் பெற்றார் .இவரை பெருங்குன்றூர்கிழார் என்று அழைக்க பட்டார்.இவரது  இயற்பெயரை அறிய முடியவில்லை.

  முல்லை நிலத்தில் வேட்டுவ குடியை சேர்ந்த  சீறூர்  ஊராளி  பாண் குடியினருக்கு புலவர் இறையிலி  காணி  கொடுத்தார்கள் .

பாசறை யீரே! பாசறை யீரே!
துடியன் கையது வேலே; அடிபுணர்
வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே; காண்வரக்
 கடுந்தெற்று மூடையின் ………..
வாடிய மாலை மலைந்த சென்னியன்
வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
மூரி வெண்டோள் ……..
 சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ!
மாறுசெறு நெடுவேல் மார்புளம் போக
நிணம்பொதி கழலொடு நிலஞ்சேர்ந் தனனே.
அதுகண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து
இறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
 அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.(புறநானூறு 285)

அருஞ்சொற்பொருள்:
1. பாசறை = படை தங்குமிடம். 2. துடியன் = துடி என்னும் பறையை அடிப்பவன்; புணர் = சேர்த்த. 3. வாங்கு = வளைவு; இரு = கரிய, மருப்பு = யாழின் தண்டு; தொடை = யாழின் நரம்பு. 4. தோல் = கேடயம். 5. கடுதல் = மிகுதல்; தெற்று = அடைப்பு; மூடை = மூட்டை. 6. மலைதல் = அணிதல்; சென்னி = தலை. 7. அயர்தல் = செய்தல். 8. மொசித்தல் = மொய்த்தல். 9. மூரி = வலிமை; 10. உகு = சொரி, உதிர். 11. செறுதல் = சினங்கொள்ளுதல். 13. பரந்தோர் = பரந்த அறிவுடைய சான்றோர். 14. இறைஞ்சுதல் = தாழ்தல், வணங்குதல், கவிழ்தல்; குருசில் = குரிசில் = தலைவன்; பிணங்குதல் = பின்னுதல். 15. அலமரல் = அசைதல்; தண்ணடை = மருத நிலத்தூர். 16. இலம்பாடு = வறுமை; ஒக்கல் = சுற்றம். 17. கரம்பை = சாகுபடி செய்யக்கூடிய நிலம்; நல்குதல் = அளித்தல்.

உரை:
 பாசறையில் உள்ளவர்களே! பாசறையில் உள்ளவர்களே! தலைவனின் வேல் துடியனின் கையில் உள்ளது; அவன் கேடயம், யாழின் அடியில் இணைக்கப்பட்ட வளைந்த கரிய தண்டோடு, இனிய இசையை எழுப்பும் நரம்புகளுடன் கூடிய சிறிய யாழையுடைய பாணனின் கையில் உள்ளது. மிகவும் நெருக்கமாக அடுக்கிய மூட்டைகள் போல … வாடிய மாலை அணிந்த தலைவன், வேந்தனுக்கு வேண்டிய செயல்களைச் செய்யும் அரிய சுற்றத்தாரோடு நெடிய அரண்மனைக்கு வந்தான். பகைவர்கள் எய்த அம்புகள் மொய்த்த வலிய தோள்…. நிலத்தைச் சேறாக்கும் குருதி சொரிந்தான். ஐயோ! பகைவர்கள் சினத்துடன் எறிந்த நெடிய வேல் அவன் மார்பை ஊடுருவிப் புதைந்து நின்றது. பிணங்களிடையே நின்று போர்புரிதலால், மாமிசம் படிந்த கழலுடன் நிலத்தில் வீழ்ந்தான். அவன் வீழ்ந்ததைக் கண்டு, அங்கிருந்த சான்றோரெல்லாம், “கதிர்கள் தம்முள் பின்னிக்கொண்டு அசையும் நெற்கழனிகளையுடைய மருதநிலத்தூர்களை முன்னே இரவலர்க்குக் கொடுத்தான். இரவலராகிய சுற்றத்தின் தலைவனுக்கு எஞ்சியிருந்த, சாகுபடி செய்யக்கூடிய நிலத்தைப் பரிசாகக் கொடுத்தான்.” என்று புகழ்ந்தார்கள். அதைக் கேட்ட தலைவன் நாணித் தலைகுனிந்தான்.

             ஒன்பதாம் பத்து(பதிற்று பத்து) - பதிகம்

குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்,
வெரு வரு தானையொடு வெய்துறச்செய்து சென்று,
இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து,
பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று,
வஞ்சி மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
மந்திர மரபின் தெய்வம் பேணி,
மெய் ஊர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரை அறு கேள்விப் புரோசு மயக்கி,
அருந் திறல் மரபின் பெருஞ் சதுக்கு அமர்ந்த
வெந் திறல் பூதரைத் தந்து, இவண் நிறீஇ,
ஆய்ந்த மரபின் சாந்தி வேட்டு,    
மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்
இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்

பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு.அவைதாம்:நிழல் விடு கட்டி, வினை நவில் யானை, பல்
தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடு காண் நெடு
வரை, வெந் திறல் தடக்கை, வெண் தலைச் செம் புனல்,
கல் கால் கவணை, துவராக் கூந்தல், வலி கெழு தடக் கை.
இவை பாட்டின் பதிகம்.


பாடிப் பெற்ற பரிசில்: 'மருள் இல்லார்க்கு மருளக்
கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம்
கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப்
படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு
ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட
வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ


குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு
வீற்றிருந்தான்.

வேர்ச்சொற்கள்

வேர்ச்சொற்கள்

1,வேட்டு=வேள்வி;விரும்பி;விருப்பம்;வேட்டுவர் குடி

வேட்டு என்ற வேர்ச்சொல்லில் இருந்து வேட்டுவர் என்ற சொல் உருவானது .போரை விரும்பி (போர் வேட்டு ) செய்தவர்களை வேட்டுவர் என்று அழைக்க பட்டது .தொல்காப்பியர் இவர்களை வேட்டுவ குடியினர் என்று அழைத்தார் .சங்க காலத்தில் வேட்டுவ குடியினரை நாண்(வில்லில் இருக்கும் கயிறு ) உடை மாக்கள் ,வேள் மாக்கள்,வேந்து மாக்கள் என்றழைக்கப் பட்டது .

காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு ஆங்கு - பெரும் 43
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு - பெரும் 449
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட - முல் 26
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு/வேறு பல் பூளையொடு உழிஞை சூடி - பட் 234,235
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு - நற் 111/5
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து - நற் 165/4
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர் - நற் 205/2
கொடும் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த - நற் 211/3
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் - நற் 252/10
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு/கடும் சூல் வயவொடு கானல் எய்தாது - நற் 263/4,5
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு/வயவர் மகளிர் என்றி ஆயின் - நற் 276/2,3
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட - நற் 285/6
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு - நற் 332/2
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி - குறு 154/3
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் - குறு 178/3
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி - பரி 5/41
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி - கலி 93/16
தொல்_வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல் - கலி 118/3
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை - அகம் 3/5
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை - அகம் 144/14
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர் - அகம் 157/4
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் - அகம் 187/22
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு/எயிறு தீ பிறப்ப திருகி - அகம் 217/18,19
இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த - அகம் 238/4
நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த - அகம் 249/15
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த - அகம் 276/1
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை - அகம் 285/11
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு - அகம் 361/12
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ - அகம் 387/9
வயவு_உறு மகளிர் வேட்டு உணின் அல்லது - புறம் 20/14
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு - புறம் 52/4
வழு இன்று எய்தியும் அமையாய் செரு வேட்டு/இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி - புறம் 99/8,9
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து - புறம் 190/8
கடும் தெறல் செம் தீ வேட்டு/புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே புறம் 251/6,7
மண் நாண புகழ் வேட்டு/நீர் நாண நெய் வழங்கி - புறம் 384/15,16
வேட்டும் (1)
எண் நாண பல வேட்டும்/மண் நாண புகழ் பரப்பியும் - புறம் 166/22,23

2,வேட்டம்=வேட்டை

வேட்டம்(வேட்டை ) என்ற சொல் வேட்டை தொழிலை குறிக்கும் சொல் .
வேட்டம் என்ற வேர் சொல்லில் இருந்து  வேட ,வேடர் ,வேடுவர் போன்ற சொற்கள் பிறந்தது .
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு - பொரு 142
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் - பெரும் 111
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து - நெடு 129
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாது - பட் 92
வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்ப - நற் 38/1
கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து - நற் 49/5
எமரும் வேட்டம் புக்கனர் அதனால் - நற் 67/9
மாயா வேட்டம் போகிய கணவன் - நற் 103/7
வேட்டம் வாயாது எமர் வாரலரே - நற் 215/12
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் - நற் 331/7
நடுநாள் வேட்டம் போகி வைகறை - நற் 388/5
வீ அகம் புலம்ப வேட்டம் போகிய - கலி 46/1
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என - அகம் 70/1
கோட்டு_மீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் - அகம் 170/11
வேட்டம் போகிய குறவன் காட்ட - அகம் 182/6
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த - அகம் 193/3
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி - அகம் 196/4
பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய - அகம் 282/1
விசைத்த வில்லர் வேட்டம் போகி - அகம் 284/9
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே - அகம் 388/26
அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர் - அகம் 389/13
நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர் - புறம் 31/5
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் - புறம் 152/6

வேட்டல்=வேள்வி
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் - பதி 24/6
கபிலை கண்ணிய வேள்வி நிலையும் - பொருள். புறத்:35/6

Saturday, September 22, 2018

வேட்டு குடியினரின் வரலாறு:

வேட்டுகுடியினர் வரலாறு:

-----------☆☆☆☆☆☆☆☆☆----------

வேட்டுவ கவுண்டர் (பூலுவ வேட்டுவ குலம்,மாவலி வேட்டுவ குலம் ,காவல வேட்டுவ குலம் ,வேட வேட்டுவ குலம்,வேட்டுவ குலம்) இனத்தை பற்றிய இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள்:
ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப் பெயர். ஆ வயின் வரூஉம் கிழவரும் உளரே. (தொல்காப்பியம் 21) கி மு 300 -400 களில் தோன்றிய தொல்காப்பியத்தில் வேட்டுவ இனத்தை பற்றி கூறப்பட்டுள்ளது . கிபி 100,200,300,400 களில் தோன்றிய இலக்கியத்தில் (அகம் ,புறம் ,நற்றிணை ,ஆற்றுபடை ) வேட்டுவர் இனத்தை பற்றி கூறப்பட்டுள்ளது . கிபி 5ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் ,கிபி 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தோன்றிய சிலம்பு -வேட்டுவ வரி வேட்டுவ இனத்தை பற்றி கூறுகிறது . தமிழ் மண்ணில் கிபி 500,600,700,800,900,1000,1100,1200,1300,1400,1500,1600,1700,1800,1900 களில் கிடைத்த கல்வெட்டுகள் ,நடுகற்கள் ,பட்டயங்களில் வேட்டுவர் இனத்தை பற்றி கூறப்பட்டுள்ளது . சங்ககாலத்தில் வேட்டுவர் இனத்தை வில்லர் ,எய்னர் போன்ற சிறப்பு பெயர்களில் அழைக்கபட்டதை இலக்கியங்கள் உறுதிபடுத்துகிறது .வேட்டுவ இனத்தினர் படைதொழில் செய்ததால் வேட்டுவ போர்வீரரை மறவர் ,மழவர் ,இளையர் ,வயவர் என அழைக்கபட்டது . சில வேட்டுவ குலங்களை காவலன் என்றும் ,சில வேட்டுவ குலங்களை பூலுவர் என்றும் ,சில வேட்டுவ குலங்களை மாவலியர் என்றும் ,சில வேட்டுவ குலங்களை வேடர் அல்லது வில்வேடுவர் என்றும் அழைக்கபட்டதை கல்வெட்டுகள் மற்றும் பட்டயங்கள் உறுதிபடுத்துகிறது .
உதாரணம் : வேடர் வேட்டுவர் '..கொடுமுடிநகர் கடந்து வெஞ்சமாக் கூடத்திற்கு வந்து வேடர் வேட்டுவராகிய கம்பழத்தவரை விட்டு செடி கொடி வெட்டி வேலி பண்ணி வைத்து ..' வேடர் வேட்டுவர் -வேட வேட்டுவ குலம் . கம்பழம்-படைவீரர் குழுக்கள் '..சேரன் அந்த பூம்பாறை கோட்டை நகர் ஊர் அதிகாரத்திற்கு வேடர் குண்ணவரில் நாகப்ப மண்ணாடியை வைத்தார் ..' குண்ண -குண்ண வேட்டுவ குலம் .
(சோழன் பூர்வ பட்டயம் ). வேட்டுவர் கலிவெண்பா வேடர் வேட்டுவ குலத்தை பற்றி கூறுகிறது . வேடர் வேட்டுவரின் உட்பிரிவுகள் (குண்ண வேட்டுவ குலம்) பற்றி சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . பூலுவ வேட்டுவர் '....காசிப கோத்திரத்து பெரியசெட்டி பிள்ளனுக்கும் செட்டி கேசவனுக்கும் செட்டி சிறுகேசவனுக்கு மற்றொன்றும் ஊராள்மை பூலுவ வேட்டுவரில் கேச கன்னனுக்கொன்றும் கண்ணன் பாண்ட வதறையனுக்கும் கோவன் கள்ளைக்கும் ஊராள்மை ஓன்று ..' (1915:99,கிபி 13,திருமுருகன் பூண்டி ) '...அமர மயங்கற மன்னரையில் பூலுவர் காத்தூண் காணியில் நிலம் இரண்டு மாவும் ..' (S.I.I Vol-V,No-260, கோவை ,பேரூர் ,கிபி 13) '.... பெரும்பழனில் இருக்கும் பூலுவன் மேற்செரி வெள்ளைகளில் ராசன் நிறை உடையானான தொண்டைமான் ...' (S.I.I Vol-1,No-338,கிபி 12,பெருமா நல்லூர் )
வெள்ளை (வெள்ளாடு )- வெள்ளை வேட்டுவ குலம் 'ஆய் அம்மன் ' இன்று வெள்ளை வேட்டுவ குலத்தினரின் குல தெய்வம் ஆகும் . பல்லடம் ,பொங்கலூர் கல்வெட்டு 'பூலுவ குடுமரில் பெரிய பிளியனான கண்டிமுடையார் 'என்பவரை பற்றி கூறுகிறது . (பொங்கலூர் கல்வெட்டு, வீர பாண்டியர்,கிபி 13). குடுமி (குடுமர்)-குடுமி வேட்டுவ குலம் '...பூலுவன் சோழன் மனைக்கு வடக்கு மேற்பக்கெல்லை குடுமி சிறுவன் ..' (கரூர் ,வேட்டமங்கலம் கல்வெட்டு(South Indian Temple Inscription,Vol-2,No-736),பாண்டியர்,கிபி 13 ). சோழர் -சோழ வேட்டுவ குலம் . குடுமி -குடுமி வேட்டுவ குலம் குடுமி சிறுவன் பூலுவ வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் என்பதை இந்த கல்வெட்டுகள் மூலம் அறியலாம். .கொங்கு மற்றும் கோனாட்டு பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகளில் குடும,குடுமி என்ற சொல் குடுமி வேட்டுவ குலத்தை குறிக்கும் .
வேட்டுவர் கலிவெண்பா பூலுவ வேட்டுவ குலத்தை பற்றி கூறுகிறது . பூலுவ வேட்டுவரின் உட்பிரிவுகள் (சோழ குலம் ,குடுமி குலம் ,செய்யர் குலம் ,முட்டை குலம் ,பெரும்பற்றார் குலம் ,மயில் குலம் ,வெள்ளை குலம் ,குடதியர் குலம் ,உத்திரர் குலம் ) பற்றி கல்வெட்டுகள் கூறுகிறது . காவல வேட்டுவர் '...உத்தமசோழ சதுவேதி மங்கலத்து இருக்கும் காவலன் கரையரில் செய கங்கனான தம்பிரான் தோழன் ...' (ஈரோடு பெருந்துறை கல்வெட்டு ,கிபி 13) கரையர் -கரைய வேட்டுவ குலம் . வேட்டுவர் கலிவெண்பா காவல வேட்டுவ குலத்தை பற்றி கூறுகிறது . காவல வேட்டுவரின் உட்பிரிவுகள் (கரைய குலம் ,பட்டாலி குலம் (கள்ளிபிலர்,குறும்பிலர்),வேந்த குலம் (வளவர் ),மண்ணடி குலம் ) பற்றி கல்வெட்டுகள் மற்றும் பட்டயங்கள் கூறுகிறது . மாவலி வேட்டுவர் '...இராகுத்த மிண்டன் சொரிவன்னியர் சூரியன் புவனேக வீரன் பதினெட்டு வன்னியரை முதுகு புரங்கண்டான் காங்கேயனை வென்று கடையில் விலை கொண்டான் வேட்டு மாவலிக்கு விரிந்திடோம் பாண்டியன் ..' ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-758,திருமெய்யம் ,கி பி 15 )
வேட்டுமாவலிக்கு -வேட்டுவமாவலிக்கு. 'ஸ்ரீ மாவலி வாணகோ வலங்கை மீ .ம ..' (தமபுரி ,அரூர் ,கிபி 8) ஆனைமங்கலம் என்னும் ஊரை ஆண்ட 'வேட்டுவதி வாணகோவரையார் 'பற்றி கல்வெட்டு (செங்கம் நடுகற்கள் 1971/39) கூறுகிறது . வேட்டுவர் கலிவெண்பா மாவலி வேட்டுவ குலத்தை பற்றி கூறுகிறது . மாவலி வேட்டுவரில் உட்பிரிவுகள்( புன்னம் குலம் ,புன்னாடி குலம் ,புன்னகர் குலம் ,புன்னம்குடி குலம் ,பெருமாள் குலம் ,வெங்காஞ்சி குலம் ,இலங்கை குலம் ,உரிமைப்படை குலம் ,நல்வாள் குலம் ) பற்றி கல்வெட்டுகள் கூறுகிறது . பூலுவ வேட்டுவர்(பூலுவர்) ,காவல வேட்டுவர் (காவலன் ), மாவலி வேட்டுவர் (மாவலியர்), வேட வேட்டுவர் (வேடர் ) போன்றோர்கள் வேட்டுவர் இனத்தின் உட்பிரிவுகளாக பட்டயம் மற்றும் கல்வெட்டுகளில் கூறப்பட்டு உள்ளது . தொழில்கள் அடிப்படையில் தமிழ் மண்ணில் சாதிகள் உருவானது .கி மு 300 களில் வேட்டு தொழில் செய்தததால் வேட்டுவ சாதி உருவானது .இதனால்தான் வேட்டுவ சாதியை தொல்குடி என்று இலக்கியங்கள் கூறுகிறது . வேட்டு தொழில் (குடிகாவல் ,போர் தொழில் ) செய்தவர்கள் தங்களது உணவுக்காக மான் ,முயல் ,காட்டு கோழி போன்ற விலங்குகளையும் ,பறவைகளைவும் வேட்டையாடினார்கள் .இதனால் வேட்டுவ இனத்தவர்களை வேட்டவர் அல்லது வேடுவர் அல்லது வேடர் என அழைக்கபட்டது . தமிழ் இலக்கணம் :
வேட்டுவர் - இன பெயர் வேட்டுவன் -ஒருமை ; வேட்டுவர் -பன்மை வெ -குறில் ; வே-நெடில் வ -குறில் ;வா -நெடில் கல்வெட்டுகள் ,செப்பேடுகள் ,ஓலை சுவடிகளில் நெடிலுக்கு (வே ) பதிலாக குறில் (வெ) எழுத்தை பயன்படுத்தினார்கள். உதாரணம் : சேலம் ,ஆத்தூர் கல்வெட்டு (கிபி 13) நில வாளை வேட்டுவ கூட்டத்தை சேர்ந்த ராமன் சோழகோன் என்பவர் நீர் பாசனத்தை பெருக்க கிணறு வெட்டியதை பற்றி கூறுகிறது . அவன் திருச்சி முசிறி கல்வெட்டுகளில் (கிபி 13) 'நிலவாளை வேட்டுவார்' என்று கூறபடுகிறான் .இவன் பாண அரசரின் படை தலைவனாக இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது . முசிறி கல்வெட்டில் குறிலுக்கு (வ ) பதிலாக நெடில் (வா ) பயன்படுத்தபட்டுள்ளது . குடுமி வேட்டுவ குலத்தை 'குடுமியார் ' என்று அழைக்கபட்டதை கோனாட்டு கல்வெட்டுகள் கூறுகிறது . வில்லி வேட்டுவ குலத்தை 'வில்லியர் 'என்று அழைக்கபட்டதை கரூர் கல்வெட்டுகள் கூறுகிறது
நடுகற்கள் ,கல்வெட்டுகள் ,சோழன் பூர்வ பட்டயம் ,அப்பிச்சிமார் காவியம் ,வேட்டுவ கலிவெண்பா ,வேட்டுவ செப்பேடுகள் போன்ற ஆவணம்களில் பேசபட்ட வேட்டுவ குலத்தவர்கள் சங்க இலக்கியத்தில் பேசப்பட்டவர்கள் .சங்க இலக்கியத்தில் பேசப்பட்ட வேட்டுவ குலத்தவர்களை 'பூலுவர்' என்றும் 'காவலன் ' என்றும் 'மாவலியர்' என்றும் 'வில்வேடுவர்' என்றும் அழைக்கபட்டது. சங்க இலக்கியத்தில் பேசப்பட்ட வேட்டுவ குலத்தவர்கள் இன்று வேட்டுவ கவுண்டர் ,புன்னம் வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அறிக்கைகள் (ஆங்கிலேயர் காலத்தில் கிபி 1931 வரை சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தபட்டது . கிபி 1985 ஆம் ஆண்டு அம்பாசங்கர் அறிக்கை சாதிகள் பற்றிய பட்டியலை தருகிறது .) கூறுகிறது .

Thursday, September 20, 2018

மறவர் = வீரர்

வேட்டுவர் குடியைச் சேர்ந்த வீரருக்கும்(மறவர்), தற்கால மறவர் என அழைக்கப்பட்ட சாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை:

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சியில் பாண்டியர்களால் மறகுடி என அழைக்கப்பட்டு உருவான சாதி வரலாறு.

ஆதாரம்.

---------------☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆---------------

பாளையபட்டுகளின் வரலாறு

தொகுதி-3

தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறை.

சென்னை 1981

பொருளாசிரியர் : டாக்டர்.இரா.நாகசாமி.

பதிப்பாசிரியர் : க.குழந்தைவேலன்.

மருதப்பதேவன் வம்சாவளி டி.2847

ஊத்துமலை பாளையப்பட்டு

வங்கீஸ் வழக்கும் மறக்குல பூருவெத்திரத்துக்கும் கைபீது.

ஆதி ஆரத்தியம் எங்கள் மறகுலம் உண்டானது மலையத்துவச பாண்டியனுக்கு வெகுநாள் குழந்தை இல்லாமல் அநேக தவசுகள் யன்னி பார்வதி தேவி மும்முலைத் தடக்கை யாயி மலையத்துவச பாண்டியனுக்கு குமாரத்தியா இருந்து ராஜ்ஜிய பாரஞ் செய்து கொண்டிருக்கு நாளையில் திக்கு விசயஞ்செய்ய வேண்டிய காரணத்துக்காக பராக்கிரம வீரத்துடனே சிறிது சைனீயிங்கள் வேனுமென்று அம்மனுட திருவுள்ளதிலே தோன்றி அம்மனோட விழா பொறத்திலிருந்து அனேக சைனீயங்கள் பிறக்கிற போதே அவளை தடியும் கையுமாக வெகு பராக்கிரமாய் பிறந்தார்கள்.உடனே அவர்கள் எங்களுக்கு பணிவிடை என்னவென்று அம்மனுடனே கேட்டதற்க்கு திக்கு விசயார்த்த மாக சிருஷ்டிசோம் உங்கள் ஜாதி மறவுக்கு மறம் என்று பேர் இருக்கட்டும். நாம் சிருஷ்டித்தபடியினாலே தேவன் என்றும் பட்டப்பெயர்ஆயி அனேகம்பேருக்கு சேனாதிபத்தியமுங் கட்டளையிட்டு அந்த சுத்த வீரம் பொருந்திய மறசைனீயத்துடனே அம்மன் திக்கு விசயத்துக்கு எழுந்தருளினால் ...............................................................

..............

.............

............ அப்படிபட்ட மற வம்சத்தில் நாகராஜாவின்  மகன் திண்ணராசா ராஜ்ஜியபரபாலம் செய்யும் நாளையில் வேட்டை மார்க்கத்தில் திரு காளகஸ்தி பருவத சார்பில் வரும்போது சைனீயங்களை  விட்டு பிரிந்து மறக்குல திண்ணராஜா மட்டும் தனித்து வேட்டை ஆடுகிற போது.....................

.....................

....................அப்போதிருந்த பாண்டியராஜா இந்த பெண்ணை கேட்டு திருமுகம் அனுப்பிவிச் நாகராஜாவுடைய மனுதாரரையும் அனுப்பி விச்சார்கள்.நான் குடுக்கிறதில்லையென்று உங்கள் சூரிய வம்சத்துக்கும் எங்கள் மச்ச வம்சத்துக்கும் ஒருநாளும் சம்மந்தம்இல்லை ............
..............நாங்கள் இப்படி கொத்த மறஜாதி எங்கள் இடத்தில் தானே பாண்டியன் தானே பெண் கேட்டது என்று மாத்தரம் சொல்லி அனுப்பி விட்டார்கள்.

(கொற்றவன் தன் திருமுகத்தை கொணர்ந்த தூத குறையுடனு கோ மறவர் கொம்பை கோட்டையும் அற்றவர்சேர் திருவருங்க பெருமான் தோழன் அவதரித்த திருக்குலமென்று அறியார் போல)

........வேடுவரிடத்தில் இருக்கிற ராஜா மனுடால் திருமுகம் கொணர்ந்து குடுத்து நடந்த செய்தியை பாண்டிய ராஜாவிடத்தில் போய் கண்டு சொன்னார்கள்.

Wednesday, September 19, 2018

அகம்படி பிள்ளைகள்

#அகம்படி #பிள்ளைகள்:

(வேட்டுவரின் கோட்டை கொத்தளத்தில் அகம்படி செய்பவர்கள்)

-------------☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆--------------

பிள்ளை வாணகோவறையர்

வாணகோவறையர்,வாணதிராயர் என்பன ஒருபொருட் பெயர்களாகும்.
மாவலி வேட்டுவ மன்னனின் பட்டத்தரசி அல்லாத மற்ற மனைவியரிடத்து பிறந்தவர்களை 'பிள்ளை வாணகோவறையர்','பிள்ளை மாவலி வாணதிராயர்' என்ற அடைமொழி கொடுத்து அழைக்கபட்டது .இவர்கள் மாவலி வேட்டுவ மன்னனுக்கும் மற்ற குறுநில தலைவர்களுக்குக் இடையேய் நடந்த மணவினையால் பிறத்தவர்களாக இருக்க வேண்டும் .இவர்கள் நாட்டில் அமைதியை ஏற்படுத்த ஆங்காங்கே இருந்த சிற்றூர்களுக்கும் ,பேரூர்களுக்கும் தலைவர்களாக(பெரியான் உய்யவந்தானான விக்கிரமசிங்க தேவன்,பின்முடி தாங்கினார்,காரையூர் வேளார்,பிறவிக்கு நல்லறன அரசுவழிகண்ட தேவர்,ஏகவாசகன் குலோத்துங்கன் ) பணியாற்றினார்கள் .
மதுரை ,திருமங்கலம் ஆனையூர் கல்வெட்டு (கிபி 13) ஒன்று 'பிள்ளை மாவலிவாணதிராயர் அகம்படி முதலிகளில் பெரியான் உய்யவந்தானான விக்கிரமசிங்க தேவன் ' என்பவரை பற்றி கூறுகிறது .(அகம்படியார் என்றால் அரசகுலதினருக்கு அகம்படி செய்பவர்(சேவை செய்பவர் அதிலிருந்து வந்த சொல்லே "சேர்வை") , அகம்படியார்களுக்கு மேலும் கோட்டையை பாதுகாக்கும் பணிகளும் இருந்தன.)

கோனாடு கல்வெட்டு(கிபி 1470;PSI-715) ஒன்று 'தென்கோனாடு ஒல்லையூர் கூற்றத்து காரையூர் கிழாண்டறானான காரையூர் வேளார் னேன் பிள்ளை மாவலி வாணதிராயர் பிள்ளைகளில் ராசகெம்பிர வளநாட்டு வயலூர் காங்கையர் பிறவிக்கு நல்லறன அரசுவழிகண்ட தேவர் ' என்பவர்களை பற்றி கூறுகிறது .

கோனாடு கல்வெட்டு(கிபி 1470;PSI-815) ஒன்று 'பின்முடி தாங்கினார் ' என்பவரை பற்றி கூறுகிறது .

கோனாடு கல்வெட்டு(கிபி 13;1907:430) ஒன்று 'பிள்ளை குலசேகர மாவலிவாணதிராயர்'என்பவரை பற்றி கூறுகிறது .

பெரம்பலூர் ,கோயில்பாளையம் கல்வெட்டு (கிபி 1180:1992-93:443) ஒன்று 'துண்ட நாடுடையான் ஏகவாசகன் குலோத்து ங்கநானா பிள்ளை வாணகோவறையர்'என்பவரை பற்றி கூறுகிறது.