Thursday, September 27, 2018

புலவர் இறையிலி காணி

புலவர் இறையிலி  காணி

ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய - புறம் 201/14
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய் - புறம் 203/11

பாண் குடியை சேர்ந்த புலவருக்கு, வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள் ,வேளிர்கள் மற்றும் வேந்தர்கள்   புலவர் இறையிலி  காணி கொடுத்து கிழார் என்ற பட்ட பெயரையும் கொடுத்தார்கள் .

 ஒன்பதாம் பத்தில் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையை  பாண் குடியை சேர்ந்த ஒரு புலவர்  பாடியுள்ளார். அதற்குப் பரிசாக முப்பத்திரண்டாயிரம் பொற்காசுகளையும், ஊரும்(பெருங்குன்றூர் ,பாலக்காடு பகுதியில் இருக்கும் எயில் குன்றம் பகுதி ) மனையும் வாழ்வதற்கு மலையும், அணிகலனும் பெற்றார். இந்த புலவர்  கிழார் என்ற பட்ட பெயரையும் பெற்றார் .இவரை பெருங்குன்றூர்கிழார் என்று அழைக்க பட்டார்.இவரது  இயற்பெயரை அறிய முடியவில்லை.

  முல்லை நிலத்தில் வேட்டுவ குடியை சேர்ந்த  சீறூர்  ஊராளி  பாண் குடியினருக்கு புலவர் இறையிலி  காணி  கொடுத்தார்கள் .

பாசறை யீரே! பாசறை யீரே!
துடியன் கையது வேலே; அடிபுணர்
வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே; காண்வரக்
 கடுந்தெற்று மூடையின் ………..
வாடிய மாலை மலைந்த சென்னியன்
வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
மூரி வெண்டோள் ……..
 சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ!
மாறுசெறு நெடுவேல் மார்புளம் போக
நிணம்பொதி கழலொடு நிலஞ்சேர்ந் தனனே.
அதுகண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து
இறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
 அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.(புறநானூறு 285)

அருஞ்சொற்பொருள்:
1. பாசறை = படை தங்குமிடம். 2. துடியன் = துடி என்னும் பறையை அடிப்பவன்; புணர் = சேர்த்த. 3. வாங்கு = வளைவு; இரு = கரிய, மருப்பு = யாழின் தண்டு; தொடை = யாழின் நரம்பு. 4. தோல் = கேடயம். 5. கடுதல் = மிகுதல்; தெற்று = அடைப்பு; மூடை = மூட்டை. 6. மலைதல் = அணிதல்; சென்னி = தலை. 7. அயர்தல் = செய்தல். 8. மொசித்தல் = மொய்த்தல். 9. மூரி = வலிமை; 10. உகு = சொரி, உதிர். 11. செறுதல் = சினங்கொள்ளுதல். 13. பரந்தோர் = பரந்த அறிவுடைய சான்றோர். 14. இறைஞ்சுதல் = தாழ்தல், வணங்குதல், கவிழ்தல்; குருசில் = குரிசில் = தலைவன்; பிணங்குதல் = பின்னுதல். 15. அலமரல் = அசைதல்; தண்ணடை = மருத நிலத்தூர். 16. இலம்பாடு = வறுமை; ஒக்கல் = சுற்றம். 17. கரம்பை = சாகுபடி செய்யக்கூடிய நிலம்; நல்குதல் = அளித்தல்.

உரை:
 பாசறையில் உள்ளவர்களே! பாசறையில் உள்ளவர்களே! தலைவனின் வேல் துடியனின் கையில் உள்ளது; அவன் கேடயம், யாழின் அடியில் இணைக்கப்பட்ட வளைந்த கரிய தண்டோடு, இனிய இசையை எழுப்பும் நரம்புகளுடன் கூடிய சிறிய யாழையுடைய பாணனின் கையில் உள்ளது. மிகவும் நெருக்கமாக அடுக்கிய மூட்டைகள் போல … வாடிய மாலை அணிந்த தலைவன், வேந்தனுக்கு வேண்டிய செயல்களைச் செய்யும் அரிய சுற்றத்தாரோடு நெடிய அரண்மனைக்கு வந்தான். பகைவர்கள் எய்த அம்புகள் மொய்த்த வலிய தோள்…. நிலத்தைச் சேறாக்கும் குருதி சொரிந்தான். ஐயோ! பகைவர்கள் சினத்துடன் எறிந்த நெடிய வேல் அவன் மார்பை ஊடுருவிப் புதைந்து நின்றது. பிணங்களிடையே நின்று போர்புரிதலால், மாமிசம் படிந்த கழலுடன் நிலத்தில் வீழ்ந்தான். அவன் வீழ்ந்ததைக் கண்டு, அங்கிருந்த சான்றோரெல்லாம், “கதிர்கள் தம்முள் பின்னிக்கொண்டு அசையும் நெற்கழனிகளையுடைய மருதநிலத்தூர்களை முன்னே இரவலர்க்குக் கொடுத்தான். இரவலராகிய சுற்றத்தின் தலைவனுக்கு எஞ்சியிருந்த, சாகுபடி செய்யக்கூடிய நிலத்தைப் பரிசாகக் கொடுத்தான்.” என்று புகழ்ந்தார்கள். அதைக் கேட்ட தலைவன் நாணித் தலைகுனிந்தான்.

             ஒன்பதாம் பத்து(பதிற்று பத்து) - பதிகம்

குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்,
வெரு வரு தானையொடு வெய்துறச்செய்து சென்று,
இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து,
பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று,
வஞ்சி மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
மந்திர மரபின் தெய்வம் பேணி,
மெய் ஊர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரை அறு கேள்விப் புரோசு மயக்கி,
அருந் திறல் மரபின் பெருஞ் சதுக்கு அமர்ந்த
வெந் திறல் பூதரைத் தந்து, இவண் நிறீஇ,
ஆய்ந்த மரபின் சாந்தி வேட்டு,    
மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்
இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்

பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு.அவைதாம்:நிழல் விடு கட்டி, வினை நவில் யானை, பல்
தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடு காண் நெடு
வரை, வெந் திறல் தடக்கை, வெண் தலைச் செம் புனல்,
கல் கால் கவணை, துவராக் கூந்தல், வலி கெழு தடக் கை.
இவை பாட்டின் பதிகம்.


பாடிப் பெற்ற பரிசில்: 'மருள் இல்லார்க்கு மருளக்
கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம்
கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப்
படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு
ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட
வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ


குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு
வீற்றிருந்தான்.

No comments:

Post a Comment