Friday, April 20, 2018

மாவிலி வாணதிராயர்



மாவலி வாணர் ,வாணகோ அரசர்கள் மாவலி வேட்டுவ குலத்தை சேர்ந்த மன்னர்கள் .

'..காங்கேயனை வென்று கடையனை வித்திடோம் வேட்டு மாவலிக்கு விருந்திடோம் பாண்டியன் ..'
(புதுகோட்டை கல்வெட்டு எண்-787)
வேட்டு மாவலி -வேட்டுவ மாவலி .

வேட்டுவர்களை பாணர் (மாவலியர்) என அழைக்க பட்டதை வேட்டுவ பாளையக்காரர் வரலாறு கூறுகிறது
கல்வெட்டுகள் ,பட்டயங்கள் 'மாவலியர்' வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறது .

மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய வேட்டுவன் விக்கிரம சோழ மகதை நாடாழ்வாரின் கி.பி.1210 இன் கல்வெட்டு இடம் - அரியலூர் மாவட்டம்,அரியலூர் வட்டம் பெரியமறை சுவேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபக் கிழக்குச்சுவர் காலம் - மூன்றாம் குலோத்துங்கன்,யா.32,கி.பி.1210 .

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமும் கருவூரும்பாண்டியன்முடித்தலையும் கொன்உ வீரா அபிஷேகமும் லிஜையா அபிஷேகமு பண்ணி அருளிய திரிபுவ வீரதேவற்கு யாண்டு முப்பத்திரண்டாவதுன அகளங்கபுரத்து உடையார் திருப்பார்பதீஸ்வரமுடைய நாயனார்க்கு ஆறகளூருடைய பொன் பரப்பினான வேட்டும் இராஜா ராஜா தேவனாரான விக்கிரம சோழ மகதை நாடாழ்வார் திருநாமஞ் சாத்தி செய்த திருவோலக்க மண்டபம் எடுத்து வலிய பெருமானென்று இது செய்வித்தான் சென்னிவலக்கூற்றத்து ஆற்றூருடையான் பட்டன் பொன்பரப்பினான சித்திரராயன் ஸ்ரீமாயேஸ்வர ரக்‌ஷை .

வேட்டும்-வேட்டுவன்

 வேலூர் குடியாத்தம் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு ஆண்ட மாவலி வாணாதிராயர்கள்:
சங்க காலத்தில் பாணர் ( மாவலி வாணாதிராயர்கள்)  இப் பகுதிகளை ஆண்டார்கள் . பிறகு இவர் வழியில் வந்தவர்கள் கிபி 4 முதல் கிபி 10 வரை  கல்வெட்டுகளிலும் ,செப்பேடுகளிலும் பேசபடுகிறார்கள் .
பிறகு சோழர்  மன்னர்களுக்கு கீழ் படைதலைவராகவும் ,அமைச்சர்களாகவும் இருந்தவர்கள்:

முதலாம் பரந்த சோழனின் ஆட்சியில் (கிபி 913) கும்பகோணம் கல்வெட்டு ஒரு மாவலி வாணாதிராயர்கள் பற்றி கூறப் பட்டுள்ளது .
சுந்தர சோழனின்  படை தலைவனாக ஒரு மாவலி வாணாதிராயர்கள்   இலங்கை போரில்(கிபி 965) கலந்து கொண்டு உயிர் துறந்ததை பற்றி  கும்பகோணம் கல்வெட்டு கூறுகிறது .
முதலாம் ராசா ராசா சோழனின் கல்வெட்டில் ஒரு 'ராசா ராசா வாணகோவரையர்' பற்றி கூறப்பட்டு உள்ளது .

முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் ஒரு 'ராஜேந்திர சோழ மாவலி வாணாதிராயர்கள்' பற்றி திருவண்ணாமலை கல்வெட்டு கூறுகிறது .
முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில்  இலங்கேஷ்சுவர  வாணகோவரையர் பற்றி அரியலூர் கல்வெட்டு கூறுகிறது .விக்கிரம சோழ ஆட்சியில்  'விருதபயங்கர  சுத்த மல்லனான  வாணகோவரையர்' பற்றி கூறப் பட்டு உள்ளது .
பிறகு

சேலம் ஆத்தூரை தலைமை இடமாக கொண்டு ஆண்ட வாணகோவரையர்கள் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள்.

1.ராசா ராசா வாணகோவரையர்
2.மகத நாடாள்வான்
3.குலோத்துங்க வாணகோவரையர்
4.வன்நெஞ்ச வாணகோவரையர்

 மதுரை அலங்காநல்லூர் பகுதியை தலைமை இடமாக கொண்டு ஆண்ட வாணகோவரையர்கள் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள்
1.திருமாலிருஞ்சோலை மாவலி வாணாதிராயர் (கிபி 15)
2. சுந்தரதோள்உடையான்  மாவலி வாணாதிராயர் (கிபி 15,16)
3. இறந்தகாலம் எடுத்த சுந்தரதோள்உடையான்  மாவலி வாணாதிராயர் (கிபி 16)-இவர் மதுரை நாயக்க மன்னரோடு போர் செய்து தோற்ற பிறகு ஆட்சி அதிகாரத்தை இழந்தவர் .

மணலி வாணாதிராயர்(இவர் மதுரை நாயக்க மன்னரோடு சண்டை செய்தவர் ),காளை வாணாதிராயர் போன்றோர் மதுரை நாயக்கர் ஆட்சியில் இருந்த குறுநில தலைவர்கள் .

வேட்டுவ குலத்தை காவலியர்,மாவலியர்,பூவலியர்,வில் வேடுவர் என அழைக்கபட்டதை பற்றி கல்வெட்டுகள் ,செபெடுகள் மற்றும் ஓலை சுவடிகள் கூறுகிறது .

'வாணகோ வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டு ( ARE 241/1979-80) கூறுகிறது .
ஆனைமங்கலம் என்னும் ஊரை ஆண்ட 'வேட்டுவதி வாணகோவரையார் 'பற்றி கல்வெட்டு (செங்கம் நடுகற்கள் 1971/39) கூறுகிறது .
மேற்கொவலூர் நாட்டை ஆண்ட 'வாணகோவரையார் வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டுகள் (செங்கம் ...நடுகற்கள் 1971/45) கூறுகிறது .

'கரும்புறதார்க் கெல்லாம் அரசரான மாவலி வாணா' என்று காளமேகபுலவர் கூறுகிறார் .( காளமேக புலவர் ,தனிப்பாடல் திரட்டு ,508).
கரும்புறத்தார் -வேடர் .

மணிமேகலை காலத்துச் சோழ வேந்தனாகிய நெடுமுடிக் கிள்ளியின் தேவி சீர்த்தி யென்பவள் மாவலி மரபில் தோன்றிய ஓர் அரசன் மகள் என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார்.
'நீரிற் பெய்த மூரிவார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு,
(மணிமேகலை 19. 51 - 116).

'மூத்தஅரைசர்,இளவரைசர் என்ற இரு துணை பெயர்கள் வருகின்றது .இவற்றில் மூத்தஅரைசர் என்பது மூத்த அரையர் பரம்பரை யை குறித்து வந்தது என்று கருதபடுகிறது .உண்மையில் இந்த சொல் ஒரு குலத்திலே மூத்த (senior lineage) குலம் என்பதை குறித்து வந்தது .பெரும்பாண மூத்தஅரைசர் , பெரும்பாண இளவரைசர் என்று கூறுவதில்

Thursday, April 19, 2018

பூலுவ வேட்டுவர் (கவுண்டர்)

பூலுவ வேட்டுவர் (கவுண்டர்)


இடம்: கரூர் மாவட்டம்,கரூர் வட்டம்,வேட்டமங்கலம்,புட்பவன முடையார் கோயில் முன்மண்டப மேல்புறச்சுவர்.

 காலம்: விக்கிரம சோழ தேவனின் 4 ஆம் ஆட்சியாண்டு; கி.பி. 1287.

செய்தி: தென்சேரிப் பூலுவவேட்டுவர் சிலம்பன் செஞ்சிருபிள்ளை என்பவர் வேட்டமங்கலம் கோயிலில் சந்தியா தீபம் வைத்தார்.

 கல்வெட்டு

 1. ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சோழ தேவர்க்கு யா

 2. ண்டு 4 வது கிழங்க நாட்டு வேட்டமங்கலத்

 3. து தென்சேரிப் பூலுவ வேட்டுவரில் சிலம்பன் செஞ்

 4. சிறுபிள்ளையேன் வேட்டமங்கலத்தில் நாயனார் புட்

 5. பவனமுடையார்க்கு சந்தியாதீப விளக்கொன்றுக்

 6. கு நான் இக்கோயிலில் பிராமணர்க்குக் குடுத்த ப

 7. ழஞ்சலாகை அச்சு ஒன்றுக்குச் சந்திராதித்தவ

 8. ரை குடங்கொடு கோயில் புகுவான் எரிக்கக் கட

 9. வான் இது பன்மாகேசுவரர் ரட்சை.

Monday, April 16, 2018

தொல்தமிழ்குடி வேட்டுவர் வரலாறு(வேட்டுவர் என்பது ஓர் குடி பெயர்)

தமிழ் வேட்டுவ குடியினர் (வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் ) வரலாறு.




   தமிழ் வேட்டுவ குடியினர்(வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் )வரலாறு.


சங்க காலங்களில் வேட்டுவ குடியினரை வில் எயினர் ,வில் கானவர்,வில்லர் போன்ற சிறப்பு பெயர்களில் அழைக்க பட்டனர் .

சங்க காலங்களில் வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரர்களை மழவர் ,மறவர் ,வயவர் ,கூளியர் போன்ற பெயர்களில் அழைக்க பட்டனர் .

சங்க இலக்கியங்களில் 'வேட்டுவர் ' என அழைக்கபட்டவர்களை கல்வெட்டுகளில் 'பூலுவர்என்றும் 'காவலன் ' என்றும் 'வேட்டுவர் ' என்றும் 'மாவலியர்என்றும் 'வேடர் ' அல்லது 'வேட்டைக்காரன் 'என்றும் அழைக்கபட்டனர்.

வேட்டுவர் என்ற சொல் ஒரு குடி பெயர்.

வேட்டுவ குடியினர் குடிமக்களை களவு .கொலை  ,கொள்ளை போன்றவற்றில் இருந்து பாதுகாத்தனர் மேலும் ஊரையும் ,நாட்டையும் பாதுகாத்தனர் .இதனால் வேட்டுவ குடியினரை காவலன் என்று அழைக்கபட்டனர்.பட்டாலி வேட்டுவ குடியினர் ,கரைய  வேட்டுவ குடியினர்,செம்ப(செம்பிய ) வேட்டுவ குடியினர் போன்ற வேட்டுவ குடிகளை காவலன் என்று அழைக்க பட்டதை கல்வெட்டுகள் கூறுகிறது .

தமிழ் மண்ணின் வட பகுதியில் வாழ்ந்த வேட்டுவ குடியினரை பாணர்கள் (பாணம்(அம்பு ) என்ற சொல்லில் இருந்து வந்த சொல் ) என்று அழைக்கபட்டனர் .இவர்கள் நான்கு வித படைகளிலும் மூர்க்கத்தனமாக போர் புரியும் மா வலிமை படைத்தவர்களாக இருந்தார்கள் .இவர்களை மாவலியர் என்று கல்வெட்டுகளில் அழைக்கபட்டனர்.சாந்தபடை வேட்டுவ குடியினர் ,உரிமைபடை வேட்டுவ குடியினர்,வன்னி வேட்டுவ குடியினர்,பூளை வேட்டுவ குடியினர்,புன்னை வேட்டுவ குடியினர்,வேங்கை வேட்டுவ குடியினர் போன்ற வேட்டுவ குடியினரை பாணர்கள் என்று அழைக்க பட்டதை கல்வெட்டுகளும் ,செப்பேடுகளும் உறுதிப்படுத்துகிறது .

வேட்டுவ குடியினர் தங்களது உணவுக்காக மான் ,முயல்  மற்றும் பறவைகளை  வேட்டையாடி பிடித்தனர் .இதனால் வேட்டுவ குடியினரை வேடர் அல்லது வேட்டைக்காரன் அல்லது வேட்டை சாதி அல்லது வேடுவர் என்று அழைக்கபட்டனர்.

பூமியை ஆளும் வேட்டுவ குடியினரை பூலுவர் என்று அழைக்க பட்டது .குடுமி வேட்டுவ குடியினர் ,வெள்ளை வேட்டுவ குடியினர் போன்ற வேட்டுவ குடிகளை பூலுவர் என்று அழைக்க பட்டது .
பொதுவர் என்ற சொல்லில் இருந்து பூலுவர்  என்ற சொல் வந்ததாக சில ஆய்வாளர்களால் கூறப்படுகிறது .(பொதுவர் -பொலுவர்-பூலுவர்  ).

வேட்டுவ குடியினரை இந்த ஐந்து பெயர்களால் அழைக்கபட்டதால் புராணங்கள் வேட்டுவ குடியில் ஐந்து சாதிகள் இருந்ததாக கூறப்படுகிறது .

வேட்டுவர் இனத்தை பற்றிய கல்வெட்டுகள் :

சங்க இலக்கியங்களில் 'வேட்டுவர் ' என அழைக்கபட்டவர்களை கல்வெட்டுகளில் 'பூலுவர்என்றும் 'காவலன் ' என்றும் 'வேட்டுவர் ' என்றும் 'மாவலியர்என்றும் 'வேடர் ' என்றும் அழைக்கபட்டது.

'....காசிப கோத்திரத்து பெரியசெட்டி பிள்ளனுக்கும் செட்டி கேசவனுக்கும் செட்டி சிறுகேசவனுக்கு மற்றொன்றும் ஊராள்மை பூலுவ வேட்டுவரில் கேச கன்னனுக்கொன்றும் கண்ணன் பாண்ட வதறையனுக்கும் கோவன் கள்ளைக்கும் ஊராள்மை ஓன்று ..'
(1915:99,கிபி 13,திருமுருகன் பூண்டி )

'...அமர மயங்கற மன்னரையில் பூலுவர் காத்தூண் காணியில் நிலம் இரண்டு மாவும் ..'
(S.I.I Vol-V,No-260, கோவை ,பேரூர் ,கிபி 13)

'.... பெரும்பழனில் இருக்கும் பூலுவன் மேற்செரி வெள்ளைகளில் ராசன் நிறை உடையானான தொண்டைமான் ...'
(S.I.I Vol-1,No-338,கிபி 12,பெருமாநல்லூர் )
வெள்ளை (வெள்ளாடு )- வெள்ளை வேட்டுவ கூட்டம்
'ஆய் அம்மன் ' இன்று வெள்ளை வேட்டுவ குலத்தினரின் குல தெய்வம் ஆகும் .

 பல்லடம் ,பொங்கலூர் கல்வெட்டு 'பூலுவ தென் குடும 'என்று கூறுகிறது .
 (கோயமுத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2, பொங்கலூர் கல்வெட்டுபாண்டியர்,கிபி 13).

'...பூலுவன் சோழன் மனைக்கு வடக்கு மேற்பக்கெல்லை குடுமி சிறுவன் ..'
 (கரூர் ,வேட்டமங்கலம் கல்வெட்டு,பாண்டியர்,கிபி 13 ).

பூலுவ வேட்டுவ குலத்தை சேர்ந்த சோழன் என்பவனின் நில எல்லைகளும் ,குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்த சிறுவன் என்பவனின் நில எல்லைகளும் கூறப்பட்டுள்ளது .கொங்கு மற்றும் கோனாட்டு பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகளில் குடும,குடுமி என்ற சொல் குடுமி வேட்டுவ குலத்தை குறிக்கும் .


'...உத்தமசோழ சதுவேதி மங்கலத்து இருக்கும் காவலன் கரையரில் செய கங்கனான தம்பிரான் தோழன் ...'
(ஈரோடு பெருந்துறை கல்வெட்டு ,கிபி 13)
கரையர் -கரைய வேட்டுவ கூட்டம்

'ஸ்ரீ மாவலி வாணகோ வலங்கை மீ .ம ..'
(தமபுரி ,அரூர் ,கிபி 8)
'வாணகோ வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டு ( ARE 241/1979-80) கூறுகிறது .
ஆனைமங்கலம் என்னும் ஊரை ஆண்ட 'வேட்டுவதி வாணகோவரையார் 'பற்றி கல்வெட்டு (செங்கம் நடுகற்கள் 1971/39) கூறுகிறது .
மேற்கொவலூர் நாட்டை ஆண்ட 'வாணகோவரையார் வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டுகள் (செங்கம் ...நடுகற்கள் 1971/45) கூறுகிறது .
'கரும்புறதார்க் கெல்லாம் அரசரான மாவலி வாணாஎன்று காளமேகபுலவர் கூறுகிறார் .( காளமேக புலவர் ,தனிப்பாடல் திரட்டு ,508).
கரும்புறத்தார் -வேடர் .
'...இராகுத்த மிண்டன் சொரிவன்னியர் சூரியன் புவனேக வீரன் பதினெட்டு வன்னியரை முதுகு புரங்கண்டான் காங்கேயனை வென்று கடையில் விலை கொண்டான் வேட்டுமாவலிக்கு விரிந்திடோம் பாண்டியன் ..'
புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-758,திருமெய்யம் ,கி பி 15 )
வேட்டுமாவலிக்கு -வேட்டுவமாவலிக்கு

களப்பிரர் ஆட்சியை நீக்குவதற்காக வேட்டுவ பாளையகாரர்கள் (வெங்கல நாடு ,மணலூர் நாடு ,தலையூர் நாடு ,டி .2967,3074,3039,3037) பெரும் பாணபாடி நாட்டில் இருந்து கரூர் பகுதிக்கு வந்த மாவலியர் பிரிவை சேர்ந்த வேட்டுவ குலத்தவர்கள் (புன்னாடி வேட்டுவ குலம்சாந்தப்படை வேட்டுவ குலம் ) ஆவார்கள் .மேலும் உரிமை படை வேட்டுவ குலத்தவரும் மாவலியர் பிரிவை சேர்ந்தவர்கள் என்று திருவெஞ்சமாகூடல் கல்வெட்டுகள் கூறுகிறது .

'..சோழியன் கரை ஒன்றுக்கும் அந்துவ வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் மேற்படி நச்சுளி வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் குறுங்காடை வேட்டுவரில் சின்னன் கரை ஒன்றுக்கும் ..'
(ARE No-226 of 1968, ஈரோடு கல்வெட்டு ,கிபி 1538,திருமலை நாயக்கர் )

அந்துவ வேட்டுவர் -அந்துவ வேட்டுவ கூட்டம்
நச்சுளி வேட்டுவர் - நச்சுளி வேட்டுவ கூட்டம்
குறுங் காடை வேட்டுவர் - காடை வேட்டுவ கூட்டம் (குறும்பூழ் -காடை)
போன்ற கூட்ட பெயர்களை கூறுகிறது .
வேட்டுவர் - இன பெயர்

தமிழ் இலக்கணம் :

வேட்டுவர் - இன பெயர்
வேட்டுவன் -ஒருமை ; வேட்டுவர் -பன்மை
வெ -குறில் ; வே-நெடில்
 -குறில் ;வா -நெடில்

கல்வெட்டுகள் ,செப்பேடுகள் ,ஓலை சுவடிகளில் நெடிலுக்கு (வே) பதிலாக குறில் (வெ) எழுத்தை பயன்படுத்தினார்கள்.
உதாரணம் :

சேலம் ,ஆத்தூர் கல்வெட்டு (கிபி 13) நில வாளை வேட்டுவ கூட்டத்தை சேர்ந்த ராமன் சோழகோன் என்பவர் நீர் பாசனத்தை பெருக்க கிணறு வெட்டியதை பற்றி கூறுகிறது .

அவன் திருச்சி முசிறி கல்வெட்டுகளில் (கிபி 13) 'நிலவாளை வேட்டுவார்என்று கூறபடுகிறான் .இவன் பாண அரசரின் படை தலைவனாக இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது .
முசிறி கல்வெட்டில் குறிலுக்கு (வ ) பதிலாக நெடில் (வா ) பயன்படுத்தபட்டுள்ளது .

குடுமி வேட்டுவ குலத்தை 'குடுமியார் ' என்று அழைக்கபட்டதை கோனாட்டு கல்வெட்டுகள் கூறுகிறது .
வில்லி வேட்டுவ குலத்தை 'வில்லியர் 'என்று அழைக்கபட்டதை கரூர் கல்வெட்டுகள் கூறுகிறது .