" உமண் சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து"
(அகம்- 119/8-10).
உப்பு வணிகர் கூட்டம் விட்டுபோன கல் அடுப்பில் வலிய வில்லையுடைய மழவர்கள்(கொல்லி மழவர்கள்), நாற்றங் கொண்ட இறைச்சியை புழுக்கி உண்ணும் இடங்கையுடைய பாலை நிலமானது (சுரம்), பெண்டிரோடு இயங்குதற்கு உரியதல்ல என்பது இதன் பொருள்.
பாலை நிலத்தைச் சேர்ந்த வல் எயினர்கள் "சிலை மறவர்" என்றழைக்கப்பட்டது. சிலை மழவர் (வில்லினையுடைய வீரர்கள்) பாலை நிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று இச்செய்யுள் கூறுகிறது.
"............................ கறுத்தோர்
தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலை நாள் அன்ன" -( அகம் 187/5-8)
சினந்தெழுந்த பகைவரது வெம்மையான முனையை அழித்த, கடிய செலவினையுடைய குதிரைகளையும் நீண்ட கழலால் பொலிவுற்ற கால்களையும் , தறுகண்மையினையும் உடைய மழவர்கள் (கொல்லி மழவர்கள்) செய்யும் பூந்தொடை விழா என்னும் விழாவின் முதல்நாளை யொத்த பொலிவினையுடைய என்பது இதன் பொருள்.
செய்யுளில் பேசப்பட்ட மழவர்கள் பாலை நிலத்தை சேர்ந்தவர்கள்.
தொடை - அம்பு.
பூந்தொடை விழவு- படைகலம் பயின்ற வேட்டுவ குடியை சேர்ந்த வில் வீரரை அரங்கேற்றுவிக்கும் விழா.
இன்று மழகொங்கு பகுதியில் வாழ்ந்து வரும் வேட்டுவ குடியினர் வருடந்தோரும் வில்விழா எடுத்து வருகிறார்கள்...
No comments:
Post a Comment