
இடம்: கரூர் மாவட்டம்,கரூர் வட்டம்,வேட்டமங்கலம்,புட்பவன முடையார் கோயில் முன்மண்டப மேல்புறச்சுவர்.
காலம்: விக்கிரம சோழ தேவனின் 4 ஆம் ஆட்சியாண்டு; கி.பி. 1287.
செய்தி: தென்சேரிப் பூலுவவேட்டுவர் சிலம்பன் செஞ்சிருபிள்ளை என்பவர் வேட்டமங்கலம் கோயிலில் சந்தியா தீபம் வைத்தார்.
கல்வெட்டு
1. ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சோழ தேவர்க்கு யா
2. ண்டு 4 வது கிழங்க நாட்டு வேட்டமங்கலத்
3. து தென்சேரிப் பூலுவ வேட்டுவரில் சிலம்பன் செஞ்
4. சிறுபிள்ளையேன் வேட்டமங்கலத்தில் நாயனார் புட்
5. பவனமுடையார்க்கு சந்தியாதீப விளக்கொன்றுக்
6. கு நான் இக்கோயிலில் பிராமணர்க்குக் குடுத்த ப
7. ழஞ்சலாகை அச்சு ஒன்றுக்குச் சந்திராதித்தவ
8. ரை குடங்கொடு கோயில் புகுவான் எரிக்கக் கட
9. வான் இது பன்மாகேசுவரர் ரட்சை.
No comments:
Post a Comment