Friday, August 31, 2018

திணை (இனக்குழு)

#திணை=#இனக்குழு=#குடி=#குலம்=#சாதி

நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகெள் பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே
இன்றியவர் என்னும் எண்ணியற் பெயரோ-
டன்றி அனைத்தும் அவற்றியல் பினவே

(தொல்க்காப்பியம்,சொல்லதிகாரம் 162)

#பொருள்:

நிலப்பெயர்சொல்,குடிப்பெயர்சொல்,குழுப்பெயர்ச் சொல்,வினைப் பெயர்ச்சொல்,உடைப் பெயர்சொல்,பண்புகொள் பெயர்சொல்,பலரைக் குறிக்கும் நிலையான முறைப்பெயர்ச் சொல்,பலரைக் குறிக்கும் நிலையான சினைப் பெயர்ச்சொல்,பலரைக் குறிக்கும் நிலையான திணைப் பெயர் சொல்,கூடி வருகின்ற பழக்கமுடைய ஆடும் இயல்புடையவர் பெயர்ச்சொல்,இவையன்றி,எண் இயல்புடைய பெயர்சொல்லுடன்,அவற்றை போன்ற பிற அணைத்தும் மேற்குறிய இயல்பை உடையன. அதாவது உயர்திணை பால்களான ஆண்பால்,பெண்பால்,பொதுபால் ஆகிய மூன்றில் ஒன்றைக் குறிக்கும்.

#எடுத்துக்காட்டு:

#நிலப்பெயர்ச் #சொல்:

கால்நடைக் கூட்டத்தை குறிப்பதற்க்கு பழந்தமிழில் "ஆயம்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.(Tamil lexicon,Vol-IV,223,Vol-IV,P-2104,2272)

ஆயம் (புறம் -230/1) என்ற சொல் சங்க இலக்கியத்திலேயே பயன்படுத்தப்பட்டது.நிலத்தை அடிப்படையாக வைத்து உருவான பெயர் "நிலப்பெயர்".

கால்நடைக் கூட்டங்கள் (ஆயம்) முல்லை நிலத்தில் இருந்தது.இதனால் முல்லை நிலத்தில் வாழ்ந்த மனிதர்களை ஆயர் என்றழைக்கப்பட்டனர்.

இது போலப் பல பெயர்கள் உருவானது.

#குடிப்பெயர்ச்சொல்:

சங்க காலத்தில் வினைப்பெயர் தொழில்பெயராக உருவானது .தொழில்பெயர் குடிபெயராக (இனக்குழு) உருவானது.

#உதாரணம்:

தொல்க்காப்பியர் காலத்துக்கு முன்பு தமிழ் மண்ணில் ஒரு மக்கள் குழுவினர் (வில்லர்) வேட்டைவினை,குடிகாவல்வினை,போர்வினை போன்ற வினைகளை (செயல்கள்) செய்தார்கள்.இந்த செயல்கள் அந்த மக்கள் குழுவினர் தினமும் செய்யகூடிய வேலையாக மாறியது(தொழில்).தொல்க்காப்பியர் அந்த மக்கள் குழுவை வேட்டுவர் என்றழைத்தார்.வேட்டுவர் என்பது திணைப்பெயர் (இனக்குழு(அ)குடிப்பெயர்) என்றே தொல்க்காப்பியர் கூறியுள்ளார்.(தொல்க்காப்பியம்,பொருள்,அகத்திணை-21).இப்படித்தான் சங்க காலத்தில் வேட்டுவர் குடி உருவானது.சங்க மற்றும் காப்பிய கால இலக்கியத்தில் வேட்டுவர்களை தொல்குடி,மூத்தகுடி,வாள்குடி,மறக்குடி,வேடர்குலம்,எயினர் குலம் என்றழைக்கப்பட்டனர்.

ஒரு மக்கள் குழு உயிர்களை கொல்லும் கருவிகளை செய்தார்கள் (வினை).இந்த செயல்கள் அந்த மக்கள் குழுவினர் தினமும் செய்யகூடிய வேலையாக மாறியது(தொழில்).அந்த மக்கள் குழுவினரை கொல்லன் என்றழைக்கப்பட்டனர்.இப்படித்தான் கொல்லர் குடி உருவானது.

ஒரு மக்கள் குழுவினர் பறை அடிக்கும் வினைகளை(செயல்) செய்தார்கள்.இது அந்த மக்கள் குழுவினர் தினமும் செய்யக்கூடிய வேலையாக மாறியது(தொழில்).அந்த மக்கள் குழுவினரை "பறையன்" என்றழைக்கப்பட்டது.இப்படித்தான் பறையர் குடி உருவானது.

குறவர் குடி,வலைபரதவர் குடி,கள்வர் குடி,உழவுக்குடி (வேளாண்மாந்தர்),வாணிககுடி,பாணன்குடி,புலையர் குடி, இதுபோல பல குடிப்பெயர்கள் உருவானது.

வேட்டுவர் குடியினர் முடிமன்னர் பரம்பரையினர்.ஆயர் குடியினரும் உயர்ந்த குடியினர். இதனால் தொல்க்காப்பியர் உயர்ந்தோர்களை(ஆயர்குடி,வேட்டுவர் குடி) மட்டும் கூறியுள்ளார்.(தொல்பொருள்,அகத்திணை -21).ஆயர்குடி மற்றும் வேட்டுவர் குடி தவிர மற்ற அனைத்து குடிகளையும் தொல்க்காப்பியர் பொருள் அகத்திணையில் 22,23,24 செய்யுளில் கூறியுள்ளார்.திணை(தொல்,பொருள் அகம் 21)என்ற சொல் குடியை (இனக்குழு) சுட்டும்.இங்கு திணை என்ற சொல் நிலம் எனப் பொருள் கொள்ளக்கூடாது.

Saturday, August 25, 2018

தொல்குடி வேட்டுவர்

வேட்டுவ குடியினர் பாலை நிலத்தில் (முல்லை ,குறிஞ்சி ) வாழ்ந்தவர்கள் .

"காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர்
செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட
மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன்புல வைப்பும்" (பதி 30/ 9-13)

#உரை :
காந்தள் பூவால் தொடுக்கப்பட்ட தலைமாலையினையும், கொலைபுரியும் வில்லினையும் கொண்ட வேட்டுவ குடியினர்
செம்மையான கொம்பினையுடைய காட்டுப்பசுவின் இறைச்சியோடு, காட்டிலுள்ள  வலிமையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களையும் எடுத்துக்கொண்டு, அவற்றைப்  பொன்னை உடைய கடைத்தெருக்களில் கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும் குன்றுகள் கூடிக்கிடக்கும் புன்புலமாகிய பாலைநில ஊர்களின் மக்களும் .

சங்க இலக்கியத்தில் தலைவர் மற்றும் தலைவியர் பெயர்கள்(#பொது #பெயர்கள்):

#குறிஞ்சி :வெற்பன் ,சிலம்பன் ,பொருநர் ,கொடிச்சி,மலை நாடன்
#முல்லை :கான நாடன்,குறும்பொறை நாடன் ,அண்ணல் ,தோன்றல்,மனைவி
#மருதம் :ஊரன் ,மகிழ்நன்
#நெய்தல் :புலம்பன் ,சேர்ப்பன் ,துறைவன் ,

சங்க இலக்கியத்தில் மக்கள் பெயர்கள் (#பொது #பெயர்கள் ):

#குறிஞ்சி :குன்றவர் ,குறவர் ,குறத்தி ,கானவர்
#முல்லை :ஆயர் ,கோவலர் ,இடையர் ,பொதுவர் ,அண்டர் ,கோபாலர்,

#பாலை :எயினர் ,எயிற்றி ,கானவர் ,ஆறலை கள்வர் , ,வம்பலர் ,வன்சொல் இளைஞர்,மீளி

#மருதம் :உழவர் ,உழத்தி,களமர்,வினைவலர்,கடையர்

#நெய்தல் :பரதவர் ,நுளையர் ,உமணர்,அளவர்

படை வீரர்களை மறவர் ,மழவர் ,வயவர்,இளையர் என அழைக்க பட்டது .

#சங்க #இலக்கியத்தில் #பேசப்பட்ட #இனங்கள்:

வேட்டுவர் இனம் (வேட்டுவ கவுண்டர் ,புன்னம் வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் ),மலையன் இனம் ( மலையமான் ,நந்தமான் ,சுரதிமான் ), இடையர் (கோனார் )இனம் ,பறையர் இனம் ,திரையர் இனம் ,கள்வர் இனம் (கள்ளர் ) மற்றும் வேளாண் இனம் ( வெள்ளாளர் ),குறவர் இனம் ,கொல்லர் இனம் ,வண்ணன் இனம் ,குயவர் இனம் மற்றும் பல

சங்க உவமைகள்(பாலை நில வேட்டுவர் குடியினர்)

புலவர் உலேச்சனார் புன்னை மரத்தின் கரிய கிளைகளுக்கு இரும்பினையும்,அதன் பசிய இலைகள் நீலத்திற்க்கும் ,மலர்களுக்கு வெள்ளையையும் ,மலரின் மகரந்த துகள்களுக்கு பொன்னையும் உவமையாக உவமிக்கிறார் .(நற் -249/1-4)

காட்டில் வாழும் கானவரின் (வேட்டுவரின்) உரம் பெற்ற கைகள் வடித்த இரும்புக்கு உவமைப்படுத்தப்பட்டுள்ளது.(அகம்-172/6)

ஒரு நிலத்தில் காணப்படும் பொருள் மற்றொரு நிலத்துக்கு உவமையாதல் இல்லை என்பது கிடையாது.காட்டில் வேட்டையாடும் தொழில் கடலில் மீன் பிடித்தலுக்கு உவமிக்கப்படுகிறது.

மரன்மேற் கொண்டுமான் கணம் தகைமார்
வேந்திறல் இளையவர் வேட்டெழுந்து தாங்குத்
திமிழ்மேற் கொண்டு வரைச்சுரம் நீந்தி.(நற்-111/4-6)

எனத் திணை மாறி வந்துள்ளது.பாலை நில மக்களின் வேட்டுவ வாழ்வு கடற்கரை வாழ்வாரோடு உவமிக்கப்பட்டுள்ளது.

சங்க இலக்கியத்தில் உவமைகள் எனும் நூலில் பேராசிரியர் டாக்டர் .ரா. சீனிவாசன் எம்.ஏ.,எம்.லிட்.,பிஎச்.டி.,இடர்சார்பொடு பொருந்திய உவமைகள் பற்றி தனது நூலில் கூறியுள்ளார்.

இது போல பாலை நிலத்தைச் சேர்ந்த வேட்டுவ குடியினரின் வாழ்வு நெய்தல் நிலத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வோடு உவமைப்படுத்தப்பட்டுள்ளது.(மதுரைக்காஞ்சி 116,அகம்-36/6,270/3)

தொல்குடி வேட்டுவர் வரலாறு

#தொல்குடி #வேட்டுவர் #வரலாறு:

**************************************************

ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த
வேல்கெழு தானை வெருவெரு தோன்றல்
ஆனிரைகளையுடைய  கொங்கரது நாட்டை
தன் நாட்டோடு அகப்படுத்திக் கொண்ட
(பதி.22/15-16)

வில் வேட்டுவ குடியைச் சேர்ந்த சேர மன்னன் ஆநிரைகளையுடைய வெங்கச்சி வேட்டுவ குடியைச் சேர்ந்த தலைவனின் (#கொங்கர்) நாட்டை வென்று மழ கொங்கு நாட்டை ஆண்ட புல்லை வேட்டுவ குடியைச் சேர்ந்த கொல்லிமழவனை வென்று சேர கொங்கு நாட்டோடு இணைக்கப்பட்டு இருக்கிறது.

முல்லை நிலத்தில் ஆயர்கள் ஆடு மாடுகளை வளர்த்தல்,மேய்த்தல்,பால் கறத்தல் போன்ற தொழில்களை செய்தனர்.அப்பகுதிகளை ஆண்ட வேட்டுவ குடியைச் சேர்ந்த மன்னனுக்குத் தான் அந்த முல்லை நிலப்பகுதிகளும் ,கால்நடைகளும் சொந்தம்.

சங்க இலக்கியத்தில் வேட்டுவர் என்று அழைக்கப்பட்டவர்கள் கல்வெட்டுகளில் வேட்டுவர் என்று அழைக்கப்பட்டனர்.

சங்க இலக்கியத்தில் காவலர்(அ) காவலன் என்று அழைக்கப்பட்ட வேட்டுவ குடியினரை கல்வெட்டுகளில் காவலன் என்று அழைக்கப்பட்டனர்.

வேட்டுவ குடியினர் வேட்டம்(வேட்டை) புரிந்ததை சங்க இலக்கியங்கள் கூறுகிறது.இதனால் இவர்களை கல்வெட்டுகளில் வேட்டைக்காரன்(அ) வேடர்(அ)வேடுவர் என்று அழைக்கப்பட்டனர்.

முல்லை நிலத்தை ஆண்ட வேட்டுவ குடியினரைப் பற்றி புறப்பொருள் வெண்பாமாலை ,வாகைப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.

செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல்
இருநிலம் காவலன் இயல்பு உரைத்தன்று
(171.#அரச #முல்லை)

#உரை:
பெரும் பகையை வருத்தும் சிவந்த சோதியாற் பொலிந்த நெடிய வேலினையுடைய பெரிய நிலத்தை (#முல்லை) ஆளுகிற காவலன்(#வேட்டுவன்) தன்மையை கூறியது.

தவழ்திரை முழங்குந் தண்கடல் வேலிச்
கமழ்தார் மன்னவன் காவன் மிகுத்தன்று
(178.#காவன் #முல்லை)

#உரை:

ஊருந்திரை ஆரவாரிக்கும் குளிர்ந்த கடலை வேலியாக உடைய நிலத்து கமழ்தார்யுடைய மன்னன் பாதுகாத்தலை சிறப்பித்தது.

அடல்வேல் ஆடவர்க்கு அன்றியும் ,அவ் இல்
மடவரால் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று
(175.#மூதில் #முல்லை)

#உரை:

மூதில் முல்லை என்பது புறத்திணைக்குரிய ஒரு துறையாகும் .புறத்திணையில் ஒன்றான வாகைதிணையில் வரும் துறை.மூதில் என்பது மூத்தகுடி .மூத்த முல்லை குடி .அது மேம்பட்ட குடி.

வேட்டுவ குடியைச் சேர்ந்த பெண்களை (#வேட்டுவச்சி) சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்களில் "#மூதிற் #பெண்டிர்" "#மூதில் #மகளிர்" என அழைக்கப்பட்டனர் (புறம் 19/15,279/2)

மூதில் மகளிரைப் பற்றி புறநானூறு கூறுகிறது.(புறம்.326,333)

முல்லை நிலத்தில் "சிலைவில் பகழிச் செந்துவர் ஆடைக்  கொலைவில் எயினர் தங்கை" (ஐங் -363) தலைவியாக கூறப்படுகிறது.

முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினியர்
(#சிலம்பு #காடுகாண் #காதை ,64-66)

முல்லையும் ,குறிஞ்சியும் பாலை வடிவத்தை (படிவம்) எடுத்துள்ளன என சிலப்பதிகாரம் கூறுகிறது. மழை பெய்ததும் இப்பாலை வடிவம் முல்லை,குறிஞ்சி வடிவமாக மாறும்.

முல்லை பாலையாக மாறும் (அகம்-111).குறிஞ்சி பாலையாக மாறும் (கலித்தொகை 2 வது பாடல்) .பாலை வீரர்களின் #கொற்றவை நிலை,துடிநிலை என்பன குறிஞ்சியின் ஒரு பகுதியாக குறிப்பிடப்படுகின்றன(புறத்திணையில் -4)

திருமுருகாற்றுப்படையில் #முருகனை #கொற்றவை #சிறுவ (258),#பழையோள் #குழவி (259) என்னும் தொடர்களால் குறிப்பிடப்படுகிறது.

தொல்குடி வேட்டுவ வேளிர்

வேளிர்:

***********************************************

வேட்டு மாந்தர்=வேள் மாந்தர்                       வேட்டு என்ற வேர் சொல்லில் இருந்து வேள் என்ற சொல் பிறந்தது.                        வேள் என்பது ஒருமை வேளிர் என்பது பன்மை சொல்                           சங்க காலத்தில் போர் தொழில்
 செய்தவர்களை வேட்டுவர் என்று அழைக்கப்பட்டனர் .வேளிர்கள் வேட்டுவ குடியை சேர்ந்தவர்கள்.

வேட்டுவர் =வேளிர்

சங்க காலத்தில்  வில்லர் (வில் எயினர் ) என்று அழைக்கபட்ட குலகுழுக்கள் (இனக்குழு ) மண்ணையும் ,மக்களையும் பாதுகாக்க  போரை விரும்பி (போர் வேட்டு வினை ) செய்தார்கள் .இவர்களை தொல்காப்பியர் வேட்டுவர் என்று அழைத்தார் .வேட்டுவர் என்ற சொல்லில் இருந்து வேள் என்ற சொல் பிறந்தது .வேட்டுவர் என்ற சொல் போர் வினையை(போர் தொழில் ) சுட்டும் சொல் .வேட்டுவர்  போர் தொழில்  செய்தவர்கள் .வேட்டுவ குடியில் இருந்துதான் வேளிர்களும் ,வேந்தர்களும் உருவானார்கள் .

                          வேட்டு =வேள்
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை - அகம் 144/14
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர் - அகம் 157/4
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு/வேறு பல் பூளையொடு உழிஞை சூடி - பட் 234,235

அரும் படை தானை அமர் வேட்டு கலித்த - வஞ்சி 26/48
செரு வேட்டு புகன்று எழுந்து - வஞ்சி 29/14
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் - கலி 23/9

                       வேட்டு =வேட்டுவர்
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட - முல் 26
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு/வயவர் மகளிர் என்றி ஆயின் - நற் 276/2,3
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ - அகம் 387/9
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு/வேய் பயில் அழுவத்து பிரிந்த நின் - அகம் 318/13,14
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர் - அகம் 208/15
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த - அகம் 372/4

                   வேட்டம் =வேட்டை

சங்க காலத்தில்  வேட்டை தொழிலை குறிக்க வேட்டம் ,வேட்டை போன்ற சொற்கள் பயன்படுத்தபட்டது .

பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே - குறு 123/5
பெரும் கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர் - அகம் 140/1
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் - பெரும் 111
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து - நெடு 129
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாது - பட் 92
வேட்டம் போகிய குறவன் காட்ட - அகம் 182/6
விசைத்த வில்லர் வேட்டம் போகி - அகம் 284/9
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் - புறம் 152/6
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என - அகம் 70/1
வேட்ட கள்வர் விசி உறு கடும் கண் - அகம் 63/17
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என - மணி 18/168

                                                                        வேட்டவர்=விரும்பியவர்                  


வேட்டவர் பெறாது வீதி வெறு நிலம் கிடந்த அன்றே - சிந்தா:13 2972/4
நிலை இலா உலகில் நின்ற வண் புகழை வேட்டவன் நிதியமே போன்றும் - சிந்தா:10 2107/1

Thursday, August 16, 2018

தொல்குடி வேட்டுவர் இன வரலாறு

#தொல்குடி #வேட்டுவர் #வரலாறு:

*********************************************

சங்க காலங்களில் வேட்டுவர் குடியினரை வில் எயினர்,வில் கானவர்,வில்லர் போன்ற சிறப்புப் பெயர்களில் அழைக்கப்பட்டனர்.சங்க காலங்களில் வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்களை நாணுடை மறவர்,விழுத்தொடை மறவர்,விழுத்தொடை மழவர்,சிலை மழவர்,வில் கூளியர்,இளையர்,வயவர் போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டனர்.மேலும் வேட்டுவ குடியைச் சேர்ந்த மன்னர்களை (அகம் 13,நற் 52) மழவன், மறவன் என்றழைக்கப்பட்டனர்.வேட்டுவ குடியைச் சேர்ந்த மன்னர்களின் பெயர்களை (குமரன் மறவன்,மறவன் கண்டன் ,கண்டன் மறவன்,மறவன் பூதியார்,கொல்லி மழவன்) கி.பி.9,10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் (S.I.I. VOL -13,NO- 298,208; S.I.I. VOL-19,NO-378;EP.Rep.272/1903;S.I.I. VOL-3,part -4,NO-212,213) அழைக்கப்பட்டனர்.இந்த கல்வெட்டுக்களில் மறம்,மறவன்,மழவன் சொற்கள் வீரத்தையும், வீரனையும்,கொலைதொழில் புரிபவனை  சுட்டுமே அன்றி மறவன் மற்றும் மழவன் என்ற ஒரு இனம் அல்லது மரபைச் சுட்டவில்லை.

கரந்தை போரில் இறந்த வேட்டுவ குடியைச் சேர்ந்த  போர் வீரனின்(இளையர்) புகழை நிலைநாட்டுவதற்க்காக அந்த வீரனின் உருவத்தை கல்லில் செதுக்கிய பிறகு  அந்நடுக்கல்லை நீராட்டி ,மணமுள்ள மஞ்சள் அவற்றின் ஈரிய புறத்தில் விளங்குமாறு  பூசி ,அம்பினால் அறுத்தெடுத்த ஆத்தியின் பட்டையாகிய நாரினால்(ஆர் நார்) சிவந்த கரந்தை பூவை தொடுத்த மாலையை அந்நடுக்கல்லில் சூட்டி பாலை நிலத்தைச் சேர்ந்த வேட்டுவ குடியினர் வழிபட்டனர் (அகம்-269).

இளையர் என்ற சொல் வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்களைச் சுட்டும். (அகம்-152/15,74/2).

இரவிகோதை செப்பேட்டில் (கி.பி.10)  இளமகன் என்ற சொல் வேட்டுவ குடியைச் சேர்ந்த போர்வீரர்களைச் சுட்டும்.(இளையர்=இளமகன்=இளமக்கள்).

சேலம் ஆத்தூர் கல்வெட்டு (1913:420; கி.பி.1505) ஒன்று "ஆற்றூர் காணி உடை முளை வேட்டுவரி அல்லாள நாத இளையர் நாயக்கரும்" இவ்வாறு கூறுகிறது.

சங்க இலக்கியங்களில் வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்களை இளையர் என்று அழைக்கப்பட்டவர்களை கல்வெட்டுகளிலும் இளையர் என்றும் அழைக்கப்பட்டது.

அதியமான் வெற்றிநடை விளங்கும் களிப்பினால் அயலார் நாட்டிலிருக்கும் ஆநிரைகளை கவரும் படி அள்ளனைப் பணிந்தான்.(அகம் -325)

அள்ளன் என்பவனின் வம்சாவழியினரை கல்வெட்டுகளிலும் அள்ளாலன்(அ) அல்லாளன் என அழைக்கப்பட்டனர்.

சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்களில் வேட்டுவர் என அழைக்கப்பட்டவர்களை கல்வெட்டுகளில் வேட்டுவர் என்றும் காவலன் என்றும் மாவலியர் என்றும் பூலுவர் என்றும் வேடர்(அ) வேட்டைக்காரன்(அ) வேடுவர்(அ) வேட்டைவிச்சாதி என்றும் அழைக்கப்பட்டனர்.மேலும் வேட்டுவ குடியைச்  சேர்ந்த மன்னர்களை நிஷதராஜன் என்றும் வேட்டரையர் என்றும் அழைக்கப்பட்டனர்.மேலும் செம்பிய வேட்டுவகுடியைச் சேர்ந்த மன்னரை செம்பியர்கோன் என்றும் முன்னை வேட்டுவகுடியை சேர்ந்த மன்னரை முனையர்கோன் என்றும் அழைக்கப்பட்டனர்.மற்றும் இதுபோல இதுபோல பல வேட்டுவகுடியைச் சேர்ந்த மன்னர்கள் இருந்தார்கள்.

வேட்டுவர் என்ற சொல் குடி(குலம்,சாதி)  பெயர் என்பதனை சங்க,காப்பிய கால இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகிறது.ஆகவே வேட்டுவர் என்ற சொல் குடிபெயர் என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சங்க காலங்களில் மன்னர்களை காவலர்,காவலன்,காவல் மன்னர் என்று அழைக்கப்பட்டனர் (சிறு-47,63,79;புறம்-225,331,208;சிலம்பு-23:81)

வேட்டுவகுடியை சேர்ந்த மன்னர்களும் ,போர்வீரர்களும் குடிமக்களை களவு,கொலை,கொள்ளை போன்றவற்றில் இருந்து பாதுகாத்தனர் மேலும் ஊரையும் நாட்டையும் பாதுகாத்தனர் .இதனால் வேட்டுவ குடியினரை காவலன் என்று கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டனர்.செம்ப(வளவர்,செம்பியர்)  வேட்டுவகுடியினர்,பட்டாலி வேட்டுவ குடியினர் (குறும்பில்லர்),கரைய வேட்டுவ குடியினர் ,கிளாசி(காச) வேட்டுவ குடியினர் வேந்த வேட்டுவ குடியினர் மற்றும் பல வேட்டுவ குடியினரை காவலன் என்று அழைக்கப்பட்டனர்.

சங்க காலங்களில் வேட்டுவ குடியினரை காவலன் என்று அழைக்கப்பட்டனர் என்பதை  உறுதிபடுத்துகிறது.

தமிழ் மண்ணில் வடபகுதியில் வாழ்ந்த வேட்டுவ குடியினரை பாணர்கள்(பாணம்(அம்பு) என்ற சொல்லில் இருந்து வந்த சொல்) என்றழைக்கப்பட்டனர் .இவர்கள் தமிழ் மண்ணின் வடபகுதிகளை (பாணநாடு) ஆண்டார்கள் (அகம்-113). இவர்கள் நான்கு வித படைகளிலும் மூர்க்கதனமாக போர்புரியும் மா வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் . இதனால் இவர்களை மாவலியர் என்று கல்வெட்டுகளிலில் (கி.பி8) அழைக்கப்பட்டனர்.சாந்தபடை வேட்டுவ குடியினர் ,உரிமைபடை வேட்டுவ குடியினர் ,வன்னி வேட்டுவ குடியினர் ,பெருமாள் வேட்டுவ குடியினர்,பூளை வேட்டுவகுடியினர்,புன்ன வேட்டுவ குடியினர் இவர்களை பாணர்கள் என்று அழைக்கப்பட்டதை கல்வெட்டுகளும் ,செப்பேடுகளும்  உறுதிப்படுத்துகிறது.

சங்க காலங்களில் தமிழ் மண்ணின்  வடபகுதியை (பாணநாடு) ஆண்ட வேட்டுவ குடியினரை பாணர்கள் (மாவலியர்) என்றழைக்கப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

வேட்டுவ குடியினர் தங்களது உணவுக்காக மான்,முயல் மற்றும் பறவைகளை வேட்டையாடி பிடித்தனர் .இதனால் வேட்டுவ குடியினரை வேடர்(அ) வேட்டைக்காரன்(அ)வேட்டம் புரிபவர்(அ) வேடுவர் என்றழைக்கப்பட்டனர்.

சிலம்பு வேட்டுவ வரியில் (ஏறக்குறைய கி.பி.475-கி.பி.-550) வேட்டுவ குடியினரை வேடர்குலம் என்றும் எயினர் குலம் என்றும் தொல்குடி என்றும் கூறப்பட்டுள்ளது.

சங்க காலங்களில் வேட்டுவ குடியினர் வேட்டம்(வேட்டை) புரிந்தார்கள் .இதனால் அவர்கள் வாழ்ந்த ஊரை வேட்ட சிறூர் என்றும் அவர்களின் சிறுவர்களை வேட்டச் சிறா அர் என்றும் அவர்களின் வீட்டை வேட்டகுடி என்றும் அழைக்கப்பட்டனர்.வேட்டுவ குடியினர் வாழ்ந்த ஊர்களை வேட்டவூர்,வேட்டமங்களம் என்று கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டது.

"புன்பொதுவர் வழிபொன்ற
இருங்கோ வேள் மருங்கு சாய"

(பட்டினபாலை 282-282)

#அருஞ்சொற்பொருள்:

புன் பொதுவர்=முல்லை நிலத்தையுடைய மன்னர்
வழி பொன்ற= அவர்களின் வாரிசுகளை அழித்து
இருங்கோ வேள் மருங்கு சாய= இருங்கோ மன்னனின் வாரிசுகள் அழிக்கப்பட்டது.

வேட்டுவ குடியினர் பாலை நிலத்தை (காடு(முல்லை)மற்றும் அடிவாரம்(குறிஞ்சி) சேர்ந்தவர்கள்.வறண்ட பகுதி (பாலை நிலம்) மழைக் காலங்களில் முல்லை நிலமாக மாறும்.(சிலம்பு காடுகாண் காதை 64-66).

கள்ளி காடுகளையுடைய கடத்திடை(பாலைநிலம்) கூர் எயிற்றுச்  செந்நாய் விருந்து பசிப்பிணியுடன் நடுகல் நிழலில் தங்கும்(அகம் 53:6-11)

கள்ளிச் செடிகளை கொண்ட கடத்திடை கூர் எயிற்றுச் செந்நாய் தன் வயாநோயுற்ற பிணவுக்கு உணவாக பன்றியைப் பார்க்கும் (ஐக்.323:1-2)

வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் பெயர் "கள்ளிபில்லர்"என்று இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது.இங்கு கள்ளி என்ற சொல் கள்ளி செடியைச் சுட்டும் .ஆகவே கள்ளிபில்லர் குலமரபு குழுவினர் பாலை நிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகிறது.இதுபோல "குறும்பிலர்" என்றொரு உட்குழு இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது.இங்கு குறும்பிலர் என்ற சொல் எயினரின் குறும்பை (அரண்) சுட்டும்.

புன்புலம்,புன்செய் சொற்கள் கல்வெட்டுகளிலும் பயண்படுத்தப்பட்டது.இங்கு புன் என்ற சொல் மேட்டு நிலம் (நீர் பாயாத நிலம்) மற்றும் காடுகளை(முல்லை) சுட்டும்.

பட்டினபாலை வரி 281 -ல் வரும் 'புன்' என்ற சொல் முல்லை நிலத்தை (காட்டுப்பகுதிள்) சுட்டும்.முல்லை நிலத்தை ஆண்ட வேட்டுவ குடியினரை புன்பொதுவர்,புவிதுவர் ,பொலுவர்,பூலுவர் என்று கல்வெட்டுகள் மற்றும் பட்டையங்களில் அழைக்கப்பட்டனர் .இவர்கள் வாழ்ந்த ஊரை பொலுவாம்பட்டி,பூலுவபட்டி,பூலுவ ஊர் என்றழைக்கப்படுகிறது.

வெள்ளை வேட்டுவகுடி ,குடுமி வேட்டுவ குடி மற்றும் பல வேட்டுவ குடிகளை பூலுவர் என்றழைக்கப்பட்டதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.இன்று வெள்ளை வேட்டுவ குடியினர் ஆய் அம்மனை தங்களது குலதெய்வமாக  வணங்கி வருகிறார்கள்.

வேட்டுவ குடிகளை சேர்ந்தவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொத்தன்,பொத்தி என்று கூறப்பட்டுள்ளது.பொத்தன்,பொத்தி சொற்கள் புன்பொதுவர் என்ற சொல்லுடன் தொடர்புடையது.

புன் பொதுவர்= புதுவர் =பொலுவர் =பூலுவர்

சங்க காலங்களில் முல்லை நிலத்தை ஆண்ட வேட்டுவ குடியினரை கல்வெட்டுகளில் பூலுவர் என்றழைக்கப்பட்டனர்.சங்க காலங்களில் முல்லை நிலத்தை ஆண்ட குறுநில மன்னர்களை ஆய் எயினன்(அகம் 148:7,181:7,208:5,396:4) மற்றும் ஆய் அண்டிரன் (புறம் 135:13) என அழைக்கப்பட்டனர். இங்கு ஆய் என்ற சொல் முல்லை நிலத்தை குறிக்கும். எயினன் என்ற சொல் வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் தலைவன் பெயரை சுட்டும்.அண்டிரன் என்ற சொல் வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் தலைவன் பெயரைச் சுட்டும்.

Wednesday, August 15, 2018

தொல்குடி வேட்டுவர் இனம்

"ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப் பெயர்
ஆவயின் வருஉங் கிழவரும் உளரே"
(தொல்.பொருள்.அக-21)

#அருஞ்சொற்பொருள்:

ஆயர்= முல்லை நிலமக்கள் பெயர்(நிலப்பெயர்)

வேட்டுவர்= முல்லை நிலத்தின் வேட்டு தொழில்(மிருக வேட்டவினை,குடிகாவல் வினை,போர்வினை) செய்வார்(வினைப்பெயர்-தொழில் பெயர்)

ஆடுஉத்= ஆண்பால் (உயர்திணை ஆண்பால்)

திணைப்பெயர்=குடி(இனக்குழு) பெயர்

ஆ வயின்=அவ்விடத்து (முல்லை நிலம்)

வருஉங்= வரும்

கிழவர்= உரியவர்(முல்லை நிலத்தில் ஆட்சி பெற்றோர்;அந்நிலத்து உள்ளோர் என 2 வகை)

உளர்= உள்ளனர்.

#உரை:

  ஆயர் குடியைச் சேர்ந்த ஆண் பெயர்  ஆயர்,வேட்டுவர் குடியைச் சேர்ந்த ஆண் பெயர் வேட்டுவர்.முல்லை நிலத்தில் ஆட்சி பெற்றோரும்(வேட்டுவர்),ஆட்சி பெறாதவர்களும் (ஆயர்) உள்ளனர்.

 வேட்டுவர் குடியினர் இனக்குழு மக்கள் என்பதனை ஆற்றுபடை நூல்களும் கி.பி5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் ஆறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தோன்றிய  சிலப்பதிகாரம் வேட்டுவர் வரியும் உறுதிப்படுத்துகிறது.

ஆயர் குடியினர் இனக்குழு மக்கள் என்பதனை சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை மற்றும் கலித்தொகையும் உறுதிபடுத்துகிறது.

ஆகவே ,திணை(தொல்,பொருள்,அக-21) என்ற சொல்லின் பொருள் குடி என்ற பொருளில் பயன்படுத்தப்பட வேண்டும்.

முல்லை நிலத்தில் ஆட்சி பெற்றோரும் (வேட்டுவர்),ஆட்சி பெறாதவர்களும் (ஆயர்) தலைமக்களாக இருந்தனர்.

#எடுத்துக்காட்டு:

#ஆட்சி #பெற்றோர்:

 முல்லை நிலத்தை ஆளும் வேட்டுவ குடியைச் சேர்ந்த மன்னர்களை தோன்றல்,அண்ணல்,குறும்பொறை நாடன் என்று அழைக்கப்பட்டனர்.(புறம் 150/7,129/5,201/12,13,202/13,14)

முல்லை நிலத்தை ஆண்ட வேட்டுவ குடியினர் மருத நிலத்தை ஆண்டார்கள் என்பதை புறம் -353 வது செய்யுள் உறுதிப்படுத்துகிறது.

சோழன் நலங்கிள்ளியை "தோன்றல்" என அழைக்கப்பட்டான்(புறம்382/16)

சேரன் நான்கு நிலங்களை (குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்) ஆண்டதால் நாடன்,குறும்பொறை நாடன்,அண்ணல்,ஊரன் ,சேர்ப்பன் என்று அழைக்கப்பட்டான்.(புறம் -49).

பாண்டியனை புனல் ஊரன் என்று அழைக்கப்பட்டான்(கலி.67/5,6).

#ஆட்சி #பெறாதவர்கள் :

முல்லை நிலத்தில் ஆயர் குடியைச் சேர்ந்த தலைவர்களை அண்ணல் என்றழைக்கப்பட்டனர்.

மருத நிலத்தில் ,'தொண்டியன்ன என் நலம் தந்து கொண்டனை சென்மோ மகிழ்க நின் சூளே'  உழவு குடியினர் தலைவராய் வருதல் காண்க .(குறுந்-238)

நெய்தல் நிலத்தில் 'நுண்வலை பரதவர் மடமகள்(குறுந்-184) தலைவியாதல் அறிக.

குறிஞ்சி நிலத்தில் 'குறவன் குறுமகளை' தலைவியாக்கும் குறுந்தொகை 95 ஆம் பாடல் காண்க.

#மன்னன் #பாசறை #அமைத்தல் :

கான்யாறு தழிஇய அகல்நெடும் புறவில்
சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி
வேட்டுப்புழை அருப்பம் மாட்டி காட்ட
இடுமுட் புரிசை ஏமுற வளைஇ
படுநீர்ப் புணரியின் பரந்த பாடி

#அருஞ்சொற்பொருள்:

கான்யாறு=காட்டாறு; தழீஇய=சூழ்ந்த; அகல்நெடும்=அகன்று நீண்ட ; புறவு=முல்லை நிலக்காடு; சேண்=தொலைவு;நாறு=மணம் வீசும்; பிடவமொடு=பிடவச்செடிகளோடு;பைம்=பசுமையான;புதல்=புதர்;எருக்கி=அழித்து;வேட்டு=வேட்டுவர்;புழை=சிறுவாயில்;அருப்பம்=அரண்;மாட்டி=அழித்து ;காட்ட=காட்டிலுள்ள; இடுமுள்=முள்ளால் இடப்பட்ட;புரிசை=மதில்;ஏமுற=காவலாக;வளைஇ=வளைந்த;படுநீர்=ஒலிக்கும் நீர்;புணரி=கடல்;பரந்த= அகன்ற ;பாடி=பாசறை.

#உரை:

 காட்டாறு சூழ்ந்த அகன்ற நீண்ட முல்லை நிலக்காட்டில் நெடுந்தொலைவிற்க்கு மணம் வீசும பிடவ செடிகளையும் ,பசுமையான புதர்களையும் வெட்டி,வேட்டுவர் குடியினரின் சிறுவாயில் அமைந்த அரண்களையும் அழித்து காவலுக்காக காட்டிலுள்ள முள்ளால்  மதிலை வளைத்து கட்டிய இடத்தில் ஒலிக்கின்ற நிரையுடைய கடல் போல் பரந்த பாசறையை மன்னன் (வேட்டுவர் குடியைச் சேர்ந்த மன்னன்) அமைத்தான்.

வேட்டுவர் குடியினர் முல்லை நிலத்தை ஆண்டார்கள் என்பதை இச்செய்யுள் உறுதிப்படுத்துகிறது.

புறவே புல்லருந்து பல்லாயத்தான்
வில் இருந்த வெங்குறும்பின்று

(புறம்-386)

காடு,புல் மேயும் ஆநிரைகள் நிறைந்ததாகவும் ,வில்லர்(வேட்டுவர் குடியினர்) காவல் இருந்த இடமாகவும் இருந்தது.

Tuesday, August 14, 2018

தீரன் சின்னமலை வரலாறு!

#தீரன் #சின்னமலை:

  பாளையக்காரர்களுடன் போர் என்பது திருநெல்வேலியிலும் ,சிவகங்கை பகுதியில்  மட்டுமே நடைபெற்றது.கொங்கு பகுதியில் ஒரு சண்டையும் நடைபெறவில்லை..

"The choronology of modern india" நூலில் தீரன்சின்னமலை என்ற ஒருவர் திப்புவுடன் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டை போட்டதாக சொல்லும் வருடம் எதுவும் கொடுக்கப்படவில்லை.(கி.பி.1790-1805;பக் . 261-289)

புக்கானன் எழுதிய "A journey from madras through the countries of Mysore ,canara and malabar" நூலில் கொங்கு பகுதியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.அவர் அதற்க்காக பயணம் செய்த காலம் 28 அக்டோபர் 1800 முதல் 29 நவம்பர் 1800 வரை கொங்கு பகுதி முழுவதும் பயணம் செய்துள்ளார் .தீரன் சின்னமலை என்ற ஒரு வீரன் இருக்கும் செய்தியை எங்கும் பதிவிடவில்லை.

"A manual of salem district in the presidency of Madras" நூலில் சேலம் பகுதியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.தீரன் சின்னமலை என்ற ஒரு வீரன் இருக்கும் செய்தியை எங்கும் பதிவிடப்படவில்லை.மேலும் கி.பி.1805 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம் தேதி சங்ககிரி மலைக் கோட்டையில் தூக்கில் போடப்பட்ட செய்தியை எங்கும் பதிவிடப்படவில்லை.

"The dispatches of field marshal the duke of wellington"நூலில் மேக்ஸ்வெல் இரண்டாம் மராட்டியப் போரில் கி.பி.1803 -ல் இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

    ஹாரிஸ் 1799 -ல் இங்கிலாந்து சென்றவர் இந்தியா திரும்பி வரவில்லை.ஆங்கிலேயர்களின் போர்க் குறிப்புகளில் எந்த ஒரு இடத்திலும் தீரன் சின்னமலை என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.ஆகவே தீரன் சின்னமலை ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் என்பது உறுதிபடுகிறது.