#தொல்குடி #வேட்டுவர் #வரலாறு:
*********************************************
சங்க காலங்களில் வேட்டுவர் குடியினரை வில் எயினர்,வில் கானவர்,வில்லர் போன்ற சிறப்புப் பெயர்களில் அழைக்கப்பட்டனர்.சங்க காலங்களில் வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்களை நாணுடை மறவர்,விழுத்தொடை மறவர்,விழுத்தொடை மழவர்,சிலை மழவர்,வில் கூளியர்,இளையர்,வயவர் போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டனர்.மேலும் வேட்டுவ குடியைச் சேர்ந்த மன்னர்களை (அகம் 13,நற் 52) மழவன், மறவன் என்றழைக்கப்பட்டனர்.வேட்டுவ குடியைச் சேர்ந்த மன்னர்களின் பெயர்களை (குமரன் மறவன்,மறவன் கண்டன் ,கண்டன் மறவன்,மறவன் பூதியார்,கொல்லி மழவன்) கி.பி.9,10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் (S.I.I. VOL -13,NO- 298,208; S.I.I. VOL-19,NO-378;EP.Rep.272/1903;S.I.I. VOL-3,part -4,NO-212,213) அழைக்கப்பட்டனர்.இந்த கல்வெட்டுக்களில் மறம்,மறவன்,மழவன் சொற்கள் வீரத்தையும், வீரனையும்,கொலைதொழில் புரிபவனை சுட்டுமே அன்றி மறவன் மற்றும் மழவன் என்ற ஒரு இனம் அல்லது மரபைச் சுட்டவில்லை.
கரந்தை போரில் இறந்த வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரனின்(இளையர்) புகழை நிலைநாட்டுவதற்க்காக அந்த வீரனின் உருவத்தை கல்லில் செதுக்கிய பிறகு அந்நடுக்கல்லை நீராட்டி ,மணமுள்ள மஞ்சள் அவற்றின் ஈரிய புறத்தில் விளங்குமாறு பூசி ,அம்பினால் அறுத்தெடுத்த ஆத்தியின் பட்டையாகிய நாரினால்(ஆர் நார்) சிவந்த கரந்தை பூவை தொடுத்த மாலையை அந்நடுக்கல்லில் சூட்டி பாலை நிலத்தைச் சேர்ந்த வேட்டுவ குடியினர் வழிபட்டனர் (அகம்-269).
இளையர் என்ற சொல் வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்களைச் சுட்டும். (அகம்-152/15,74/2).
இரவிகோதை செப்பேட்டில் (கி.பி.10) இளமகன் என்ற சொல் வேட்டுவ குடியைச் சேர்ந்த போர்வீரர்களைச் சுட்டும்.(இளையர்=இளமகன்=இளமக்கள்).
சேலம் ஆத்தூர் கல்வெட்டு (1913:420; கி.பி.1505) ஒன்று "ஆற்றூர் காணி உடை முளை வேட்டுவரி அல்லாள நாத இளையர் நாயக்கரும்" இவ்வாறு கூறுகிறது.
சங்க இலக்கியங்களில் வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்களை இளையர் என்று அழைக்கப்பட்டவர்களை கல்வெட்டுகளிலும் இளையர் என்றும் அழைக்கப்பட்டது.
அதியமான் வெற்றிநடை விளங்கும் களிப்பினால் அயலார் நாட்டிலிருக்கும் ஆநிரைகளை கவரும் படி அள்ளனைப் பணிந்தான்.(அகம் -325)
அள்ளன் என்பவனின் வம்சாவழியினரை கல்வெட்டுகளிலும் அள்ளாலன்(அ) அல்லாளன் என அழைக்கப்பட்டனர்.
சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்களில் வேட்டுவர் என அழைக்கப்பட்டவர்களை கல்வெட்டுகளில் வேட்டுவர் என்றும் காவலன் என்றும் மாவலியர் என்றும் பூலுவர் என்றும் வேடர்(அ) வேட்டைக்காரன்(அ) வேடுவர்(அ) வேட்டைவிச்சாதி என்றும் அழைக்கப்பட்டனர்.மேலும் வேட்டுவ குடியைச் சேர்ந்த மன்னர்களை நிஷதராஜன் என்றும் வேட்டரையர் என்றும் அழைக்கப்பட்டனர்.மேலும் செம்பிய வேட்டுவகுடியைச் சேர்ந்த மன்னரை செம்பியர்கோன் என்றும் முன்னை வேட்டுவகுடியை சேர்ந்த மன்னரை முனையர்கோன் என்றும் அழைக்கப்பட்டனர்.மற்றும் இதுபோல இதுபோல பல வேட்டுவகுடியைச் சேர்ந்த மன்னர்கள் இருந்தார்கள்.
வேட்டுவர் என்ற சொல் குடி(குலம்,சாதி) பெயர் என்பதனை சங்க,காப்பிய கால இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகிறது.ஆகவே வேட்டுவர் என்ற சொல் குடிபெயர் என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சங்க காலங்களில் மன்னர்களை காவலர்,காவலன்,காவல் மன்னர் என்று அழைக்கப்பட்டனர் (சிறு-47,63,79;புறம்-225,331,208;சிலம்பு-23:81)
வேட்டுவகுடியை சேர்ந்த மன்னர்களும் ,போர்வீரர்களும் குடிமக்களை களவு,கொலை,கொள்ளை போன்றவற்றில் இருந்து பாதுகாத்தனர் மேலும் ஊரையும் நாட்டையும் பாதுகாத்தனர் .இதனால் வேட்டுவ குடியினரை காவலன் என்று கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டனர்.செம்ப(வளவர்,செம்பியர்) வேட்டுவகுடியினர்,பட்டாலி வேட்டுவ குடியினர் (குறும்பில்லர்),கரைய வேட்டுவ குடியினர் ,கிளாசி(காச) வேட்டுவ குடியினர் வேந்த வேட்டுவ குடியினர் மற்றும் பல வேட்டுவ குடியினரை காவலன் என்று அழைக்கப்பட்டனர்.
சங்க காலங்களில் வேட்டுவ குடியினரை காவலன் என்று அழைக்கப்பட்டனர் என்பதை உறுதிபடுத்துகிறது.
தமிழ் மண்ணில் வடபகுதியில் வாழ்ந்த வேட்டுவ குடியினரை பாணர்கள்(பாணம்(அம்பு) என்ற சொல்லில் இருந்து வந்த சொல்) என்றழைக்கப்பட்டனர் .இவர்கள் தமிழ் மண்ணின் வடபகுதிகளை (பாணநாடு) ஆண்டார்கள் (அகம்-113). இவர்கள் நான்கு வித படைகளிலும் மூர்க்கதனமாக போர்புரியும் மா வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் . இதனால் இவர்களை மாவலியர் என்று கல்வெட்டுகளிலில் (கி.பி8) அழைக்கப்பட்டனர்.சாந்தபடை வேட்டுவ குடியினர் ,உரிமைபடை வேட்டுவ குடியினர் ,வன்னி வேட்டுவ குடியினர் ,பெருமாள் வேட்டுவ குடியினர்,பூளை வேட்டுவகுடியினர்,புன்ன வேட்டுவ குடியினர் இவர்களை பாணர்கள் என்று அழைக்கப்பட்டதை கல்வெட்டுகளும் ,செப்பேடுகளும் உறுதிப்படுத்துகிறது.
சங்க காலங்களில் தமிழ் மண்ணின் வடபகுதியை (பாணநாடு) ஆண்ட வேட்டுவ குடியினரை பாணர்கள் (மாவலியர்) என்றழைக்கப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
வேட்டுவ குடியினர் தங்களது உணவுக்காக மான்,முயல் மற்றும் பறவைகளை வேட்டையாடி பிடித்தனர் .இதனால் வேட்டுவ குடியினரை வேடர்(அ) வேட்டைக்காரன்(அ)வேட்டம் புரிபவர்(அ) வேடுவர் என்றழைக்கப்பட்டனர்.
சிலம்பு வேட்டுவ வரியில் (ஏறக்குறைய கி.பி.475-கி.பி.-550) வேட்டுவ குடியினரை வேடர்குலம் என்றும் எயினர் குலம் என்றும் தொல்குடி என்றும் கூறப்பட்டுள்ளது.
சங்க காலங்களில் வேட்டுவ குடியினர் வேட்டம்(வேட்டை) புரிந்தார்கள் .இதனால் அவர்கள் வாழ்ந்த ஊரை வேட்ட சிறூர் என்றும் அவர்களின் சிறுவர்களை வேட்டச் சிறா அர் என்றும் அவர்களின் வீட்டை வேட்டகுடி என்றும் அழைக்கப்பட்டனர்.வேட்டுவ குடியினர் வாழ்ந்த ஊர்களை வேட்டவூர்,வேட்டமங்களம் என்று கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டது.
"புன்பொதுவர் வழிபொன்ற
இருங்கோ வேள் மருங்கு சாய"
(பட்டினபாலை 282-282)
#அருஞ்சொற்பொருள்:
புன் பொதுவர்=முல்லை நிலத்தையுடைய மன்னர்
வழி பொன்ற= அவர்களின் வாரிசுகளை அழித்து
இருங்கோ வேள் மருங்கு சாய= இருங்கோ மன்னனின் வாரிசுகள் அழிக்கப்பட்டது.
வேட்டுவ குடியினர் பாலை நிலத்தை (காடு(முல்லை)மற்றும் அடிவாரம்(குறிஞ்சி) சேர்ந்தவர்கள்.வறண்ட பகுதி (பாலை நிலம்) மழைக் காலங்களில் முல்லை நிலமாக மாறும்.(சிலம்பு காடுகாண் காதை 64-66).
கள்ளி காடுகளையுடைய கடத்திடை(பாலைநிலம்) கூர் எயிற்றுச் செந்நாய் விருந்து பசிப்பிணியுடன் நடுகல் நிழலில் தங்கும்(அகம் 53:6-11)
கள்ளிச் செடிகளை கொண்ட கடத்திடை கூர் எயிற்றுச் செந்நாய் தன் வயாநோயுற்ற பிணவுக்கு உணவாக பன்றியைப் பார்க்கும் (ஐக்.323:1-2)
வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் பெயர் "கள்ளிபில்லர்"என்று இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது.இங்கு கள்ளி என்ற சொல் கள்ளி செடியைச் சுட்டும் .ஆகவே கள்ளிபில்லர் குலமரபு குழுவினர் பாலை நிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகிறது.இதுபோல "குறும்பிலர்" என்றொரு உட்குழு இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது.இங்கு குறும்பிலர் என்ற சொல் எயினரின் குறும்பை (அரண்) சுட்டும்.
புன்புலம்,புன்செய் சொற்கள் கல்வெட்டுகளிலும் பயண்படுத்தப்பட்டது.இங்கு புன் என்ற சொல் மேட்டு நிலம் (நீர் பாயாத நிலம்) மற்றும் காடுகளை(முல்லை) சுட்டும்.
பட்டினபாலை வரி 281 -ல் வரும் 'புன்' என்ற சொல் முல்லை நிலத்தை (காட்டுப்பகுதிள்) சுட்டும்.முல்லை நிலத்தை ஆண்ட வேட்டுவ குடியினரை புன்பொதுவர்,புவிதுவர் ,பொலுவர்,பூலுவர் என்று கல்வெட்டுகள் மற்றும் பட்டையங்களில் அழைக்கப்பட்டனர் .இவர்கள் வாழ்ந்த ஊரை பொலுவாம்பட்டி,பூலுவபட்டி,பூலுவ ஊர் என்றழைக்கப்படுகிறது.
வெள்ளை வேட்டுவகுடி ,குடுமி வேட்டுவ குடி மற்றும் பல வேட்டுவ குடிகளை பூலுவர் என்றழைக்கப்பட்டதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.இன்று வெள்ளை வேட்டுவ குடியினர் ஆய் அம்மனை தங்களது குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள்.
வேட்டுவ குடிகளை சேர்ந்தவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொத்தன்,பொத்தி என்று கூறப்பட்டுள்ளது.பொத்தன்,பொத்தி சொற்கள் புன்பொதுவர் என்ற சொல்லுடன் தொடர்புடையது.
புன் பொதுவர்= புதுவர் =பொலுவர் =பூலுவர்
சங்க காலங்களில் முல்லை நிலத்தை ஆண்ட வேட்டுவ குடியினரை கல்வெட்டுகளில் பூலுவர் என்றழைக்கப்பட்டனர்.சங்க காலங்களில் முல்லை நிலத்தை ஆண்ட குறுநில மன்னர்களை ஆய் எயினன்(அகம் 148:7,181:7,208:5,396:4) மற்றும் ஆய் அண்டிரன் (புறம் 135:13) என அழைக்கப்பட்டனர். இங்கு ஆய் என்ற சொல் முல்லை நிலத்தை குறிக்கும். எயினன் என்ற சொல் வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் தலைவன் பெயரை சுட்டும்.அண்டிரன் என்ற சொல் வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் தலைவன் பெயரைச் சுட்டும்.

SIR, CAN YOU FURTHER BRIEF YOUR FOLLOWING STATEMENT WITH EVIDENCES IF ANY? ON ACADEMIC INTEREST I ASK THIS QUESTION.
ReplyDelete'இதனால் வேட்டுவ குடியினரை காவலன் என்று கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டனர்.செம்ப(வளவர்,செம்பியர்) வேட்டுவகுடியினர்,பட்டாலி வேட்டுவ குடியினர் (குறும்பில்லர்),கரைய வேட்டுவ குடியினர் ,கிளாசி(காச) வேட்டுவ குடியினர் வேந்த வேட்டுவ குடியினர் மற்றும் பல வேட்டுவ குடியினரை காவலன் என்று அழைக்கப்பட்டனர்.