Wednesday, August 15, 2018

தொல்குடி வேட்டுவர் இனம்

"ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப் பெயர்
ஆவயின் வருஉங் கிழவரும் உளரே"
(தொல்.பொருள்.அக-21)

#அருஞ்சொற்பொருள்:

ஆயர்= முல்லை நிலமக்கள் பெயர்(நிலப்பெயர்)

வேட்டுவர்= முல்லை நிலத்தின் வேட்டு தொழில்(மிருக வேட்டவினை,குடிகாவல் வினை,போர்வினை) செய்வார்(வினைப்பெயர்-தொழில் பெயர்)

ஆடுஉத்= ஆண்பால் (உயர்திணை ஆண்பால்)

திணைப்பெயர்=குடி(இனக்குழு) பெயர்

ஆ வயின்=அவ்விடத்து (முல்லை நிலம்)

வருஉங்= வரும்

கிழவர்= உரியவர்(முல்லை நிலத்தில் ஆட்சி பெற்றோர்;அந்நிலத்து உள்ளோர் என 2 வகை)

உளர்= உள்ளனர்.

#உரை:

  ஆயர் குடியைச் சேர்ந்த ஆண் பெயர்  ஆயர்,வேட்டுவர் குடியைச் சேர்ந்த ஆண் பெயர் வேட்டுவர்.முல்லை நிலத்தில் ஆட்சி பெற்றோரும்(வேட்டுவர்),ஆட்சி பெறாதவர்களும் (ஆயர்) உள்ளனர்.

 வேட்டுவர் குடியினர் இனக்குழு மக்கள் என்பதனை ஆற்றுபடை நூல்களும் கி.பி5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் ஆறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தோன்றிய  சிலப்பதிகாரம் வேட்டுவர் வரியும் உறுதிப்படுத்துகிறது.

ஆயர் குடியினர் இனக்குழு மக்கள் என்பதனை சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை மற்றும் கலித்தொகையும் உறுதிபடுத்துகிறது.

ஆகவே ,திணை(தொல்,பொருள்,அக-21) என்ற சொல்லின் பொருள் குடி என்ற பொருளில் பயன்படுத்தப்பட வேண்டும்.

முல்லை நிலத்தில் ஆட்சி பெற்றோரும் (வேட்டுவர்),ஆட்சி பெறாதவர்களும் (ஆயர்) தலைமக்களாக இருந்தனர்.

#எடுத்துக்காட்டு:

#ஆட்சி #பெற்றோர்:

 முல்லை நிலத்தை ஆளும் வேட்டுவ குடியைச் சேர்ந்த மன்னர்களை தோன்றல்,அண்ணல்,குறும்பொறை நாடன் என்று அழைக்கப்பட்டனர்.(புறம் 150/7,129/5,201/12,13,202/13,14)

முல்லை நிலத்தை ஆண்ட வேட்டுவ குடியினர் மருத நிலத்தை ஆண்டார்கள் என்பதை புறம் -353 வது செய்யுள் உறுதிப்படுத்துகிறது.

சோழன் நலங்கிள்ளியை "தோன்றல்" என அழைக்கப்பட்டான்(புறம்382/16)

சேரன் நான்கு நிலங்களை (குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்) ஆண்டதால் நாடன்,குறும்பொறை நாடன்,அண்ணல்,ஊரன் ,சேர்ப்பன் என்று அழைக்கப்பட்டான்.(புறம் -49).

பாண்டியனை புனல் ஊரன் என்று அழைக்கப்பட்டான்(கலி.67/5,6).

#ஆட்சி #பெறாதவர்கள் :

முல்லை நிலத்தில் ஆயர் குடியைச் சேர்ந்த தலைவர்களை அண்ணல் என்றழைக்கப்பட்டனர்.

மருத நிலத்தில் ,'தொண்டியன்ன என் நலம் தந்து கொண்டனை சென்மோ மகிழ்க நின் சூளே'  உழவு குடியினர் தலைவராய் வருதல் காண்க .(குறுந்-238)

நெய்தல் நிலத்தில் 'நுண்வலை பரதவர் மடமகள்(குறுந்-184) தலைவியாதல் அறிக.

குறிஞ்சி நிலத்தில் 'குறவன் குறுமகளை' தலைவியாக்கும் குறுந்தொகை 95 ஆம் பாடல் காண்க.

#மன்னன் #பாசறை #அமைத்தல் :

கான்யாறு தழிஇய அகல்நெடும் புறவில்
சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி
வேட்டுப்புழை அருப்பம் மாட்டி காட்ட
இடுமுட் புரிசை ஏமுற வளைஇ
படுநீர்ப் புணரியின் பரந்த பாடி

#அருஞ்சொற்பொருள்:

கான்யாறு=காட்டாறு; தழீஇய=சூழ்ந்த; அகல்நெடும்=அகன்று நீண்ட ; புறவு=முல்லை நிலக்காடு; சேண்=தொலைவு;நாறு=மணம் வீசும்; பிடவமொடு=பிடவச்செடிகளோடு;பைம்=பசுமையான;புதல்=புதர்;எருக்கி=அழித்து;வேட்டு=வேட்டுவர்;புழை=சிறுவாயில்;அருப்பம்=அரண்;மாட்டி=அழித்து ;காட்ட=காட்டிலுள்ள; இடுமுள்=முள்ளால் இடப்பட்ட;புரிசை=மதில்;ஏமுற=காவலாக;வளைஇ=வளைந்த;படுநீர்=ஒலிக்கும் நீர்;புணரி=கடல்;பரந்த= அகன்ற ;பாடி=பாசறை.

#உரை:

 காட்டாறு சூழ்ந்த அகன்ற நீண்ட முல்லை நிலக்காட்டில் நெடுந்தொலைவிற்க்கு மணம் வீசும பிடவ செடிகளையும் ,பசுமையான புதர்களையும் வெட்டி,வேட்டுவர் குடியினரின் சிறுவாயில் அமைந்த அரண்களையும் அழித்து காவலுக்காக காட்டிலுள்ள முள்ளால்  மதிலை வளைத்து கட்டிய இடத்தில் ஒலிக்கின்ற நிரையுடைய கடல் போல் பரந்த பாசறையை மன்னன் (வேட்டுவர் குடியைச் சேர்ந்த மன்னன்) அமைத்தான்.

வேட்டுவர் குடியினர் முல்லை நிலத்தை ஆண்டார்கள் என்பதை இச்செய்யுள் உறுதிப்படுத்துகிறது.

புறவே புல்லருந்து பல்லாயத்தான்
வில் இருந்த வெங்குறும்பின்று

(புறம்-386)

காடு,புல் மேயும் ஆநிரைகள் நிறைந்ததாகவும் ,வில்லர்(வேட்டுவர் குடியினர்) காவல் இருந்த இடமாகவும் இருந்தது.

No comments:

Post a Comment