Sunday, September 2, 2018

வரலாற்றில் புனையபட்ட கற்பனை புனைவுகள்

#போருக்கு #உரிய #மலர்கள்:

#வெட்சி #பூ : ஆநிரைகளை பகைவர் நாட்டில் கவரும் போது வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

#கரந்தை #பூ : பகைவர் கவர்ந்த ஆநிரைகளை மீட்கும் போது வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

#வஞ்சி #பூ : குடியிருப்புகளைப் பாதுகாக்கும் போதும்,அழிக்கும் போதும் வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

#நொச்சி #பூ : கோட்டையை (அரண்) பாதுகாக்கும் போது வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

#உழிஞை #பூ : கோட்டையை(அரண்) அழிக்கும் போது வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

#தூம்பைப் #பூ : போர்களத்தில் பகைவரோடு போர்புரியும் போது வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

#வாகைப் #பூ : பகைவரைப் போரில் வென்றபோது வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

போருக்கு உரிய பூக்கள் போர்வீரர்களுக்கு வழங்கப்படுவதை பறம்- 289 கூறுகிறது.

மேலே சொல்லப்பட்ட அனைத்துப் போர்களையும் வேட்டுவ குடியினர் செய்தனர் என்பதைக் கல்வெட்டுகள் மற்றும் சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகிறது.

திருஞானசம்பந்தர் (கி.பி.650-கி.பி 750),சுந்தரர் (கி.பி.780-கி.பி.870), மாணிக்கவாசகர் (கி.பி.9) ,கல்லாடதேவநாயனார் (கி.பி.10) மற்றும் சேக்கிழார் (கி.பி.12) ஆகியோர் ஏறக்குறைய இந்த காலங்களில் வாழ்ந்தவர்கள்.இவர்கள் கண்ணப்ப நாயனாரைப் பற்றி கூறியுள்ளார்கள்.கண்ணப்ப நாயனார் கி.பி.7 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்.

தமிழ் மண்ணில் களப்பிரர்கள் ஆட்சி ஏறக்குறைய கி.பி.300 -கி.பி 550 வரை நடந்ததாக வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

உண்மை வரலாறுகளோடு கற்பனை புனைவுகளும் கலந்து இருப்பதுதான் புராணக்கதை.

கி.பி.10 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் கண்ணப்ப நாயனார் வரலாறு புடைப்பு சிற்ப்பங்களாக செதுக்கப்பட்டுள்ளதுதான் உண்மை வரலாறு.இந்த உண்மை வரலாறுகளோடு சேக்கிழார் தனது கற்பனைப் புனைவுகளையும் சேர்த்து கண்ணப்ப நாயனார் வரலாறுகளை கூறியுள்ளார்.

குருகுல காவியம் ,அப்பிச்சிமார் காவியம்,கொங்கு மண்டல பூர்வ வரலாறு,பஞ்சவர்ண ராஜகதை போன்ற கதைகள் புராணக் கதைகளாகும்.இந்த புராணக் கதைகள் விஜயநகர மற்றும் மதுரை நாயக்கர் ஆட்சியில் தோன்றிய புராணக் கதைகளாகும்.

வேட்டுவ குடியினரை ஐந்து பெயர்களில் சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டனர்.இதனால் புராணங்கள் வேட்டுவ குடியில் 5 சாதிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

விசயநகரம் ஆனைகுந்தி கண்ணப்ப கோத்திரத்தை வரவழைத்து என்று வடகரை நாட்டு செப்பேடு (கி.பி.14) கூறுகிறது.ஆகவே, விசயநகர வேந்தர்கள் தங்களை ஆனைகுந்தி கண்ணப்ப கோத்திரம் என்று அழைத்துக் கொண்டதை இச்செப்பேடு கூறுகிறது.

கி.பி.1529 ல் விசுவநாத நாயக்கர் ஆனைகுந்தி பகுதியைச் சேர்ந்த வேடகம்பளத்தவர்களை (தெழுங்கு பேசுபவர்கள்) தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்தான்.இவர்கள் தங்களை கண்ணப்பர் காளகஸ்தி சாதி என்று தங்களை அழைத்துக் கொண்டார்கள்.(டி.3118,3256,2851).

இதுபோல தமிழ்நாட்டை ஆண்ட தமிழ் வேட்டுவ குடியினரும் தங்களை கண்ணப்ப கோத்திரம் என்று விசயநகர மற்றும் மதுரை நாயக்கர் ஆட்சியில் அழைத்துக் கொண்டார்கள்.

வேடர் குடிகளில் கண்ணப்ப நாயனார் மிகவும் புகழ் பெற்றவர்.இதனால் வேட்டுவ குடியினர் அனைவரும் தங்களை கண்ணப்ப கோத்திரம் என்று கூறிக்கொண்டார்கள்.

கி.பி.1808 களில் கோப்பண மன்றாடியார் வம்சாவழியினர் மெக்கன்சியிடம் கொடுத்த கைபியதுகள் (கொங்கு மண்டல பூர்வ வரலாறு (டி .3133) மற்றும் பரிவிபாளையம் வரலாறு(டி.2964))

இந்த கைபியதுகளில் கூறப்பட்ட வரலாறுகளை கல்வெட்டுகள்,செப்பேடுகள்,சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்கள் ஆகிய சான்றுகளில் கூறப்பட்ட வரலாறுகளோடு ஒப்பீடு செய்து கற்பனை புனைவுகள் மற்றும் தற்புகழ்ச்சிகளை நீக்கிவிட வேண்டும்.இதுதான் உண்மையான வரலாற்று ஆய்வு.

கண்ணப்ப நாயனார் கி.பி7 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்.கி.பி.7 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு வேட்டுவ குடியினரை வேட்டுவர் என்றும் காவலன் என்றும் பாணர்கள்(மாவலியர்) என்றும் புன் பொதுவர் (பூலுவர்) என்றும் வேட்டம்(வேட்டை) புரிபவர்கள் என்றும் இந்த ஐந்து பெயர்களில் சங்க இலக்கியங்களில் அழைக்கப்பட்டனர்.சேர மன்னன் கண்ணப்ப நாயனார் செய்த செயல்களை (கி.பி. 7) கண்டு உடுப்பூருக்கு சென்று புலி வேடர்களை(வேட்டுவர்,காவலன்,மாவலியர்,பூலுவர்,வேடர்(அ)வேட்டைக்காரர்(அ)வேட்டம் புரிபவர்) கொங்கு நாட்டுக்கு அழைத்து வந்தான் என கொங்குமண்டல பூர்வ வரலாறு மற்றும் புரவிபாளையம் வரலாறுகளில் கூறியிருப்பது கற்பனைப் புனைவுகளாகும்.

கண்ணப்பர் உடுப்பூரை சேர்ந்தவராக புராணங்கள் கூறுகிறது.விசயநகர மற்றும் மதுரை நாயக்கர் ஆட்சியில் தமிழ் வேட்டுவ குடிகள் தங்களை கண்ணப்ப கோத்திரம் என்று அழைத்துக் கொண்டார்கள்.இதனால் கோப்பண மன்றாடியார் வம்சாவழியினர் தங்களது அஞ்சு சாதியும் உடுப்பூரில் இருந்து கொங்கு நாட்டுக்கு வந்தார்கள் என்று ஒரு கற்பனை புனைவுகளை உருவாக்கி உண்மை வரலாறுகளோடு சேர்த்து எழுதிக் கொண்டார்கள்.

1 comment:

  1. ஏப்பா புரவிபாளைய ஜமீன் கோபண்ணமன்றாடியார் பொய்யெல்லாம் சொல்லவில்லை அவர் உண்மையைத்தான் கூறியுள்ளார்...

    அவர் பொய்சொல்கிறார் என்று நினைத்தால் சுந்தரனார் காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட குருகுல காவியம் என்ற பாடலை படியுங்க..
    அந்த ஓலைச்சுவடி தற்போது தமிழக அரசு ஆவண காப்பகத்தில் உள்ளது..

    புலவர் செ.ராசு அவர்கள் அதற்கு நூல்வடிவம் கொடுத்துள்ளார் அதனையாவது படிக்கவும்.

    வரலாற்றை பொய்யாக்க வேண்டாம்..

    ReplyDelete