வரலாற்றில் புனையப்பட்ட கற்பனை புனைவுகள்:
**************************************************
"வங்க கடலொலி கைவர கைமாலையு யத்தோர்" என்று செப்பேட்டில் எழுதப்பட்டதை புலவர் செ.இராசு தொகுத்த வேட்டுவர் சமூக ஆவணங்கள் நூலில் "வங்க கடலொலி கைவர வாகை மாலை யுயுத்தோர்" என்று கூறியுள்ளார்.
வேட்டுவகுடியினர் போரில் வென்று சூடும் மாலை வாகை மாலை என சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்கள் கூறுகிறது.
வேட்டுவர் குடியினர் போரில் வென்ற பிறகு சூடும் மாலை வாகைமாலை .போருக்கு முன்பு வாகை மாலை சூடினார்கள் என்று புராணங்களில் கூறியிருப்பது கற்பனை புனைவுகளாகும்.
இலைபுனை வாகை சூடி யிகன் மலைந் தலைகடற் றானை யரசட் டார்த்தன்று (புறப்பொருள் வெண்பாமாலை ,வாகை பாடல் 155)
போரில் வென்று சூடும் பூ வாகைப் பூ என்பதை புறப்பொருள் வெண்பாமாலை (கி.பி.9) உறுதிப்படுத்துகிறது.
போர்வினைக்குரிய போர் பூக்கள் சூடுதலைப் பற்றி வெட்சி முதலான திணைகளில் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
"கலவா மன்னர் கண்ணுறு நாட்பின் புல வேல் வானவன் பூப் புகழ்ந்தன்று"
"விரும்பார் அமரிடை வெல்போர் வழுதி அரும்பார் முடிமிசைப் பூப் புகழ்ந்தன்று"
"விறல் படை மறவர் வெஞ்சமம் கானின் மறப்போர்ச் செம்பியன் மலைப் பூ உரைத்தன்று"
புறப்பொருள் வெண்பாமாலை பொதுஇயல் படலத்தில் (240,241,242) சேர,பாண்டிய,சோழ மன்னர்களுக்கான பூக்கள் கூறப்பட்டுள்ளது.
"உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படை கல்லால் அரிது"(திருக்குறள் படைமாட்சி 162)
போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும் ,எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி தொல்படைக்கு அல்லாமல் வேறு எந்த படைக்கும் இருக்க முடியாது.
சேர,பாண்டிய,சோழ மன்னர்கள் தொல்படை(வேட்டுவர் குடியினர் படை) கூலிப்படை,நாட்டுப்படை,காட்டுப்படை போன்ற படைகளை வைத்திருந்தார்கள்.
சேர,பாண்டிய,சோழ மன்னர்கள் ஆட்சி முடிந்த பின்பும் போரில் வென்ற பிறகு வேட்டுவ குடியினர் வாகை மாலையை சூடினார்கள் என்பதை விசயநகர மற்றும் மதுரை நாயக்க ஆட்சியில் தோன்றிய இலக்கியங்கள் உறுதிப்படுத்துகிறது .
சேர,பாண்டிய,சோழ வேட்டுவ குடியினர் களப்பிளர் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்க்கு காளத்தி வேட்டுவ குடியினரின் உதவியை நாடினார்கள் .காளத்தி பகுதியில் இருந்து சில வேட்டுவ குடியினர்(காளத்தி வேட்டுவகுடி,புண்ணாடி வேட்டுவகுடி) சேர , பாண்டிய,சோழ வேட்டுவ குடியினருடன் சேர்ந்து களப்பிளர் ஆதிக்கத்தை ஒடுக்கினார்கள்.இதனால் காளத்தி வேட்டுவ குடியினர் ஆளுவதற்க்கு நிலங்கள் கொடுக்கப்பட்டது .இதுதான் உண்மை வரலாறு.வேட்டுவகுடியினர் (காவலன்,மாவலியர்,வேடர்,வேட்டுவர்,பூலுவர்) அனைவரும் காளகஸ்தி பகுதியில் இருந்து சேர கொங்கு மண்டலம், பாண்டிய மண்டலம்,சோழ மண்டலம் போன்ற பகுதிகளுக்கு வந்தார்கள் என வேட்டுவர் திருமண பாடலில் கூறியிருப்பது கற்பணைப் புனைவுகள் ஆகும்.
"வேடன் வேட்டுவனுக்கு காணி காளத்திபுரம் அந்த காளத்திபுரத்தில் வேடர் வேட்டுவர் பூவிலுவர் காவிலுவர் மாவிலுவர் இந்த ஐந்து வகை சாதி வேடர் கம்பளத்தவரும் காளத்திபுர நகரில் மிகுந்து தேசமெல்லாம் பரந்து கொடுவேறு பூமிகண்டு செடிவெட்டி ஊர் கட்டி வைத்தார்கள் .ஊர் கட்டின இடம் அவர்களுக்கு காணியென்றும் அவர்களுக்கு வருகை பேர் வேடனாயக்கர்களென்றும் வேட்டுவர் பூவிலுவர் காவிலுவர் மாவிலுவர் இவர்களுக்கு மண்ணாடியாரென்று பெயரும் கொடுத்து"
(சோழன் பூர்வபட்டயம் டி.1843,பட்டயத்தில் பின் வரலாறு எழுதிச் சேர்த்தது பக்-208)
மதுரை நாயக்கர் ஆட்சியில் (கி.பி16) இந்த வரலாறை எழுதி கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட சோழன் பூர்வ பட்டயத்தின் இறுதிப்பகுதியில் சேர்க்கப்பட்டது.
சோழன் பூர்வ பட்டயத்தில் கூறப்பட்ட வரலாறுகளை சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்களோடு ஓப்பீடு செய்து உண்மை வரலாறுகளை எடுத்து கொண்டு கற்பனை புனைவுகளை நீக்கி விட வேண்டும்.சோழன் பூர்வ பட்டயத்தில் கூறப்பட்ட வரலாறுகளும் ,சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் கூறப்பட்ட வரலாறுகளும் ஒன்றாக இருந்தால் உண்மை வரலாறு அல்லது முரண்பட்டு இருந்தால் கற்பனைப் புனைவுகள் ஆகும்.
பொத்தப்பி நாட்டில் இருந்து அஞ்சு சாதியினர்(காவலன்,வேட்டுவர்,மாவலியர்,பூலுவர்,வேட்டம் புரிபவர்(அ)வேட்டைக்காரன்(அ)வேடர்) சேர கொங்குநாடு ,சோழநாடு,பாண்டிய நாடு ,தொண்டைநாடு போன்ற நாடுகளுக்கு வந்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயத்தில் கூறியிருப்பது கற்பனைப் புனைவுகள் ஆகும்.

No comments:
Post a Comment