Thursday, September 6, 2018

கானவர்

சங்க இலக்கியத்தில் கானவர்

காடுகளில் வாழும் பொதுமக்களின் பொது பெயரை குறிப்பதாக

கானவர் மருதம் பாட அகவர் - பொரு 220

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

வேட்டுவ குடியை  சேர்ந்தவரை குறிப்பதாக

‘வெற்பு அயல் நண்ணியதுவே வார் கோல்
வல் வில் கானவர் தங்கை
பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரே’ குறு 335/5-7

என்ற அடிகளில் அமைந்துள்ளது
பொருள் :

மலைக்குச் சற்று அப்பால் இருக்கிறது, நீண்ட அம்பினையும்,வலிய வில்லினையும் உடைய வேட்டுவரின் தங்கையாகிய பெரிய தோளினைக்கொண்ட நம் தலைவி இருந்த ஊர்

.

கள்வர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக

கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர்
படுகளத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை
கள்ளி அம் பறந்தலை களர்தொறும் குழீஇ( அகம்  231/5-7)

என்ற அடிகளில் அமைந்துள்ளது.

குறவர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக

‘கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பிற்
றலை விளை கானவர் கொய்தனர்” - (ஐங்குறுநூறு 270)

‘கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்காட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கிழுமெனக்
கருவி வானம் தலை இ” (புறநானூறு 159)

'தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்' - (ஐங் 270/2 )

'துறு கண் கண்ணி கானவர் உழுத' - நற் 386/2

'பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை மலை'  317,318
'பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு' - குறு 379/2

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

கிழங்கு  சேகரிக்கும் தொழில் செய்பவரை  குறிப்பதாக

அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர்/கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை - ஐங் 208/1,2    

'இன்று யாண்டையனோ தோழி குன்றத்து
பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு' குறுந்  379/1,2

என்ற அடிகளில் அமைத்துள்ளது .

வேட்டை (வேட்டம்) தொழில் செய்பவரை குறிப்பதாக

'உரைமதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடு வில் கானவன் கோட்டு மா தொலைச்சி' நற்றிணை  75/5,6

'வாரற்க தில்ல தோழி சாரல்
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும்
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே '
 நற்றிணை  85/7-11

'பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின் வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்' அகம்  282/1-4

என்ற அடிகளிலும் அமைத்துள்ளது .

No comments:

Post a Comment