Sunday, September 2, 2018

மூதில் குடி(வேட்டுவர்) வரலாறு

#மூதில் #குடி(வேட்டுவர்) #வரலாறு:

************************************************

மூதில்= முது+இல்

முது= தொண்மையான,பழமையான,மூத்த

இல்=குடி

மூதில்= தொல்குடி

பெருமலை நாட்டை பரிபாலித்து வந்த மிருகராஜன் ,பரசன்,உத்தண்டன்,அச்சுதன் ,களப்பாளன் ஆகியோர் சேர,பாண்டிய,சோழர் ஆகிய மூவரையும் பிடித்து கடற்கோட்டையில் சிறை வைத்தார்கள்.இவர்களை பொத்தப்பி நாட்டில் இருந்த வேட்டுவ குடியினர் படையுடன் வந்து மூவேந்தர்களையும் மீட்டனர் என கி.பி.1934 ல் எஸ்.வேல்சாமி கவிராயர் எழுதிய குருகுல வரலாறு எனும் நூல் கூறுகிறது.

அந்துவ,மாந்த ,வில்லி,கரைய,வெங்கச்சி,புல்லை,மூல மற்றும் பல வேட்டுவ குடிகள் கொங்குநாட்டின் பூர்வீகக் குடிகள் என்பதை கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் உறுதிபடுத்துகிறது.

கி.பி.940 களில் கோனாட்டை ஆண்ட குடுமி வேட்டுவ குடியினர் (இருக்கு வேளிர்) மற்றும் பல வேட்டுவ குடிகள் கொங்குநாடு வந்து சோழர்கள் பெயரில் கி.பி.1320 வரை கொங்குநாட்டை ஆண்டார்கள் என்பதை கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் உறுதிப்படுத்துகிறது.

கி.பி.1070 க்குப் பிறகு செம்பிய வேட்டுவ குடி மற்றும் பல வேட்டுவ குடிகள் சோழநாட்டில் இருந்து கொங்குநாட்டுக்கு வந்ததை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகிறது.

கி.பி.1220 களில் பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டி,வேம்ப மற்றும் பல வேட்டுவ குடிகள் கொங்குநாடு வந்து பாண்டியர்கள் பெயர்களில் கி.பி.1320 வரை கொங்குநாட்டை ஆண்டார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.மேலும் பாணநாடு மற்றும் மகதநாட்டை ஆண்ட மாவலி வேட்டுவ குடியினர் (சாந்தப்படை,உரிமைபடை,புன்ன,பெருமாள்,வன்னி,பூழை மற்றும் பல) கொங்குநாடு (தலையூர் நாடு, வெங்கலநாடு) மற்றும் பாண்டிய நாட்டுக்கு வந்ததை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.

திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட முன்னை வேட்டுவ குடி,பழவூர் பகுதியை ஆண்ட மயில் வேட்டுவகுடி,மாவிலங்கை பகுதிகளை ஆண்ட இலங்கை வேட்டுவ குடி மற்றும் பல வேட்டுவ குடிகள் கி.பி.13 ஆம் நூற்றாண்டுகளில் கொங்குநாட்டுக்கு வந்ததை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.

இந்த இடப்பெயர்வுகள் அரசியல் காரணங்களுக்காக நடைபெற்றது.இதுபோல களப்பிரர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்க்கு பொத்தப்பி நாட்டில் வாழ்ந்த சில வேட்டுவ குடிகளை (காளத்தி,புண்ணாடி,காணியாளர்) பாண்டிய மன்னன் அழைத்து வந்தான்.

களப்பிர ஆட்சிக்கு முன்பு வேட்டுவகுடிகளை ஐந்து பெயர்களில் அழைக்கப்பட்டனர் என்பதை சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகிறது.பொத்தப்பி நாட்டில் இருந்து அஞ்சு சாதியினர் (வேட்டுவர்,காவலன்,பூலுவர்,மாவலியர்,வேட்டம் புரிபவர்(அ)வேட்டைக்காரன்(அ)வேடர்) சேர,சோழ,பாண்டிய நாட்டுக்கு வந்தார்கள் என்று குருகுல வரலாறுகளில் கூறியிருப்பது கற்பனை புனைவுகளாகும்.

No comments:

Post a Comment