Tuesday, October 16, 2018

நடுகல்

நடுகல்

நடுகல் பற்றிய குறிப்புடைய பாடல்கள்:
அகநானூறு – 35, 53, 67, 131, 289, 297, 343, 365, 387
புறநானூறு – 221, 222, 223, 232, 261, 306, 314, 329
ஐங்குறுநூறு – 352
பட்டினப்பாலை – line 79
மலைபடுகடாம் – lines 388, 395

சங்க காலத்தில் வீரர்களுக்கும் மன்னர்களுக்கும், அவர்கள் இறந்த பின், நடுகல் நட்டும் வழக்கம் இருந்தது.  கோப்பெருஞ்சோழன், அதியமான் நெடுமான் அஞ்சி ஆகிய இரு மன்னர்களுக்கு நடுகல் நட்டியதை பாடல்கள் மூலம் அறிகின்றோம். தங்கள் மன்னனின் ஆநிரைகளை பிறர் கவர்ந்துச் செல்லும் பொழுது அதைத் தடுத்து நிறுத்தி உயிர் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டன.   போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கும் நடுகற்கள் நட்டப்பட்டன.  நட்டிய கற்களில் இறந்தவர்களின் பெயர்களையும் அவர்களது மறச் செயல்களைப் பற்றிய விவரங்களையும் கூர்மையான உளியால் பொறித்தனர். ஆண்களுக்கு மட்டுமே இந்தக் கற்கள் நட்டப்பட்டன.  பெண்களுக்கு நடுகல் நட்டியதாக சங்க இலக்கியத்தில் குறிப்பு எதுவும் இல்லை.

புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய சங்க நூல்களில் நடுகல் பற்றிய குறிப்புகள் பல உள்ளன.  அக நூல்களான அகநானூறு ஐங்குறுநூறு ஆகியவற்றில் பாலைத் திணைப் பாடல்களில் மட்டுமே நடுகல் பற்றிய குறிப்புகள் உள்ளன.  இந்தத் திணையில் உள்ள நிலம் வறண்டுப் போனது. அங்குள்ள மரங்களும் செடிகளும் வாடிய நிலையில் இருக்கும்.  மிருகங்கள் குடிக்க நீர் இல்லாது தவிக்கும். பயணம் செய்பவர்களின் பொருட்களைக் கைப்பற்றி அவர்களைக் கொல்லும் கள்வர்கள் அங்கு உண்டு.  தலைவன் பொருள் சேர்க்க பாலை நிலம் வழியாகச் செல்வான்.  தலைவனும் தலைவியும் உடன்போக்கில் இந்த நிலத்தைக் கடந்து செல்வார்கள்.  அங்கு இறந்தவர்களுக்காக நாட்டிய நடுகற்கள் இருக்கும்.

பழந்தமிழர்கள் நடுகற்களை மிகவும் மதித்து, அவற்றை வழிபட்டனர்.  நடுகற்களைச் சுற்றி வேலை நட்டி அவற்றில் கேடயங்களைத் தொங்க விட்டார்கள்.  நடுகற்களை மயில் இறகுகளாலும் மலர்களாலும் அலங்கரித்து,  அவற்றின் மீது கள்ளை ஊற்றி சிறப்பத்தினர்.  துடி அடித்து ஆடுகளை அவற்றிற்குப் பலியாகக் கொடுத்தனர்.

    தமிழர்கள் நடுகல்லை எந்த அளவிற்குச் சிறப்பித்தார்கள் என்பதை இந்தப் பாடலின் மூலம் நாம் அறியலாம். மாங்குடி கிழார் மிக அருமையாக இங்கு விவரிக்கின்றார்,

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு 335, 9-12)

“ஒத்துப் போகாத பகைவர்களை (தெவ்வர் = பகைவர்) எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்டிய கல்லைத் தான் நாங்கள் வழிபடுவோம் (பரவும் = வழிபடும்). நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது.”

    நோய் பாடியார் என்ற பெயரையுடைய இந்தப் புலவர் பாலை நிலப் பாதையில் கண்டதைப் பற்றிக் கூறுகின்றார்,

அரம் போழ் நுதிய வாளி அம்பின்
நிரம்பா நோக்கின் நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை  (அகநானூறு 67, 5-11)

“அரத்தால் பிளக்கப்பட்ட நுண்ணிய முனையையுடைய அம்பினால், முழுப் பார்வையுடன் நோக்காது ஆநிரையைத் திருடுபவர்கள், நெல்லி மரங்களுடைய நீண்ட பாதையில், இரவு நேரத்தில் வந்து கொன்ற நல்ல போர்களில் ஈடுப்பட்ட வில்லின் அம்பை  கொண்ட வீரர்களின் பெயரும் புகழும் எழுதப்பட்ட மயில் இறகு சூட்டிய கேடயங்கள் (பலகை = கேடயம்) தொங்கும் ஊன்றிய வேல்களால் சூழப்பட்ட, விளங்கும் நடுகற்கள் இருக்கின்றன எல்லாப் பாதைகளிலும் (அதர் = பாதை).”

    பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தலைவன் பொருள் ஈட்ட போயுள்ளான். பிரிவினால் வருந்திய தலைவி தோழியிடம் பேசுகின்றாள்.  தலைவன் கடந்து சென்ற பாலை நிலத்தைப் பற்றி இந்தப் பாடலில் சீத்தலைச் சாத்தனார் விவரிக்கின்றார்,

கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடுங்கான் முருங்கை வெண் பூத் தாஅய்
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்
விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்  (அகநானூறு 53)

சூரியனின் கடுமையான கதிர்களின் வெட்பத்தால் ஏற்பட்ட நில பிளப்புகளில் பெரிய காட்டின் முருங்கை மரங்களின் வெள்ளை மலர்கள் கொட்டிக் கிடக்கும்.  ஆளில்லாத நீண்ட வறண்ட பாதையில் கூர்மையான பற்களையுடையச் ஆண் செந்நாய் வருத்தத்துடனும் பசியுடனும் தன் துணையுடன், தனிமையான பாதையில் (இயவு = பாதை) மறவர்களின் குறி தப்பாத வில்லிடம் வீழ்ந்தவர்களுக்காக நட்டிய எழுதுக்களையுடைய நடுக்கல்லின் இனிய நிழலில் வசிக்கும். அங்கு கள்ளிச் செடியும் வாகை மரங்களும் இருக்கும் (உழிஞ்சில் = வாகை). அங்கு உட்புறம் வாடிய வளைந்த மூக்கையுடைய நத்தை (நொள்ளை நத்தை) வாகை மரத்தின் சொர சொரப்பான அடியில் பொதிந்து இருக்கும்.

    இந்தப் பாடலில், நடுகல்லுக்கு அன்றைய தமிழர்கள் தந்த மரியாதையைப் பற்றிக் கூறுகின்றார் புலவர்,

இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடுகல்லின் நாள் பலி யூட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந் நறைக் கொளீஇய
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும்  (புறநானூறு 329, 1-4)

“வீடுகளில் கள்ளைச் செய்யும் சில குடிகளையுடைய சின்ன ஊரில், நடுகல்லிற்கு தினமும் படைத்து, நல்ல நீரால் அதைக் கழுவி, நறுமண எண்ணையைக் கொண்டு விளக்கு ஏற்றுவார்கள் (நெய் = எண்ணை, நெய்).  அதன் கருமையான பெரும் புகையானது நறுமணத்தோடு தெருக்களில் கமழும்.”

    தன்னுடைய அருமையான பெண், அவளுடைய தலைவனுடன் உடன்போக்கில் பாலை நிலத்தின் வழியே சென்றதால், வருந்தி, பாலை நிலத்தில் உள்ளவற்றைப் பற்றிக் கூறுகின்றாள் ஒரு தாய்,

நடுகல் பீலி சூட்டித் துடிப் படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம்  (அகநானூறு 35)

“நடுகற்கள் மயில் தோகையால் அலங்கரிக்கப்படும்.   துடி அடித்து அரிசிக் கள்ளை அவற்றின் மீது ஊற்றுவர்.  செம்மறி ஆடுகளைப் பலி கொடுப்பார்கள் (துரூ =  செம்மறி ஆடு).  போக்குவரத்து இல்லாத வளைந்த பாதைகளை உடையது இறைச்சி நாற்றம் அடிக்கும் அரிய பாலை நிலம்.”

    ஓதலாந்தையார் யானையின் தும்பிக்கைச் சொர சொரப்பை, எழுத்துக்கள் பொறித்த நடுகல்லுடன் ஒப்பிடுகின்றார்,

விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங்கை யானை  (ஐங்குறுநூறு 352, 1-3)

“கள்வர்களுடைய வில்லினால் செலுத்திய குறித்தப்பாத அம்புகளால் உயிர் இழந்தோர்களுக்கு நட்டிய எழுத்துக்களையுடைய நடுகற்களைப் போன்று உள்ளது, யானையின் தழும்புடைய பெரிய தும்பிக்கை.”

    மலைபடுகடாம் என்ற ஆற்றுப்படை நூலில் ஒரு பாணர் இன்னொரு பாணருக்கு நன்னன் என்ற குறுநில மன்னனின் நாட்டுக்கு செல்லும் வழியைப் பற்றி கூறும் பொழுது நடுகற்களை அவர் காண்பார் என்றுக் கூறுகின்றார்,



ஒன்னார்த் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா இல்இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே

இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக … 390

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின் (மலைபடுகடாம் 386 – 391)

புறமுதுகு இட்டவர்களை ஏசி நல்ல முறையில் தம் உயிரைக் கொடுத்த    வில்லின் அம்பை உடைய  வீரர்களின் நீங்காத பெரும் புகழுடைய பெயர்களோடு நடுகற்கள் பல உண்டு வளைந்த பாதையில்.  உங்களுடைய பாட்டு இன்பத்தைத் தரும் வகையில் தாளத்தோடு பாடுங்கள். தொன்றுத் தொட்டு வழங்கும் மரபு முறைப்படி உங்கள் யாழை இயக்கி, நடுகற்களை வணங்கி விட்டு நீங்கள் செல்லுங்கள்.

    தன்னுடைய நண்பனான மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தப்பின் ஔவையார் மிகவும் வருத்திப் பாடுகின்றார்,

இல்லாகியரோ காலை மாலை
அல்லாகியர் யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளாதோனே?  (புறநானூறு 232)

“காலையும் மாலையும் இல்லாமல் போகட்டும்!  என் வாழ் நாள் இல்லாமல் போகட்டும்!  தன் நடுகல்லில் மயில் தோகையைச் சூட்டி சிறிய கிண்ணத்தில் நாரால் வடித்த மதுவை கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானா, ஓங்கிய சிகரங்களையுடைய விளங்கும் மலைகள் நிறைந்த நாட்டையே பிறர் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளாதவன்?”

    கோபெருஞ்சோழன் இறந்தப் பின் அவனுக்கு நடுகல் நட்டினார்கள். மன்னனின் நண்பரான புலவர் பொத்தியார் அப்பொழுது வருந்திப் பாடுகின்றார்,

நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே   (புறநானூறு 221, 8-13)

“ஆராய்ந்துப் பார்க்காத கூற்றுவன் அவனது இனிய உயிரை எடுத்துக் கொண்டு விட்டான்.  வருந்தும் உங்கள் குடும்பத்தை அணைத்துக் கொண்டு வாருங்கள், உண்மையைப் பேசும் புலவர்களே! நாம் கூற்றுவனைத் திட்டுவோம்.  நம்முடைய புரவலன் இறந்ததால் இந்த பெரிய உலகம் வருந்துகின்றது (அரந்தை = துன்பம்). குறையில்லா நல்ல புகழையுடையவன் (நல்லிசை = நல்ல புகழ்) நடுகல்லாகி விட்டான்.”

    மதுரை மருதன் இளநாகனார் பாலை நிலத்தில் உடைந்த நடுகல் ஒன்றைப் பற்றி விவரிக்கின்றார் இந்தப் பாடலில்,

மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப்

புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்

கண்ணி வாடிய மண்ணா மருங்குல்

கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து  (அகநானூறு 343, 47)

“உப்பு வணிகரின் (உமண்மகன் = உப்பு வணிகர்) மர மாட்டு வண்டியின் சக்கரம் வலுவான நடுகல்லின் மெல்லிய மேல் பகுதியை சிதைத்து விட்டது.  இட்ட மாலை வாடி, நடுகல் கழுவப்படாமல் உள்ளது (மண்ணா = கழுவாது).  கூர்மையான உளியால் அதன் மீது செதுக்கிய எழுத்துக்கள் அழிந்து விட்டன.”

Thursday, October 4, 2018

நடுகல் மற்றும் கொற்றவை வழிபாடுகள்

நடுகல் மற்றும் கொற்றவை  வழிபாடுகள்

வேட்டுவ குடியினர் தமிழ் மண்ணில் முதன் முதலில் நடுகல் மற்றும் கொற்றவை  வழிபாடுகளை உருவாக்கி வழிபட்டவர்கள் .காலப்போக்கில் வேட்டுவ குடியினரின் நடுகல் மற்றும் கொற்றவை வழிபாடுகளின் பழக்க வழக்கங்களை மற்ற சாதியினரும்  பின்பற்றினார்கள் .
 கொற்றவை  கடவுளை முருகன் ,சிவன் ,காளி போன்ற கடவுள்களோடு  தொடர்புபடுத்தப்பட்டது.

                                                                   
                                                    மற்போர் வீரன்

மல்லன் என்ற சொல் சாதி பெயர் கிடையாது

  மல்லன் என்ற சொல் 'மற்போர் வீரன் ' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது என்பதை

மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி - புறம் 80/2
களம் புகு மல்லன் கடந்து அடு நிலையே - புறம் 80/9

என்ற அடிகள் உறுதிப்படுத்துகிறது .

மல்லல் என்ற சொல் 'வளமை' என்ற பொருளில்  பயன்படுத்தப்பட்டது என்பதை

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் - நெடு 29
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய - நற் 73/௩
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர - புறம் 174/9
‘குரூஉக்கெடிற்ற குண்டுஅகழி
‘வான்உட்கும் வடிநீண்மதில்
மல்லல்மூதூர் வயவேந்தே!’ puram 18\10-12

Thursday, September 27, 2018

புலவர் இறையிலி காணி

புலவர் இறையிலி  காணி

ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய - புறம் 201/14
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய் - புறம் 203/11

பாண் குடியை சேர்ந்த புலவருக்கு, வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள் ,வேளிர்கள் மற்றும் வேந்தர்கள்   புலவர் இறையிலி  காணி கொடுத்து கிழார் என்ற பட்ட பெயரையும் கொடுத்தார்கள் .

 ஒன்பதாம் பத்தில் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையை  பாண் குடியை சேர்ந்த ஒரு புலவர்  பாடியுள்ளார். அதற்குப் பரிசாக முப்பத்திரண்டாயிரம் பொற்காசுகளையும், ஊரும்(பெருங்குன்றூர் ,பாலக்காடு பகுதியில் இருக்கும் எயில் குன்றம் பகுதி ) மனையும் வாழ்வதற்கு மலையும், அணிகலனும் பெற்றார். இந்த புலவர்  கிழார் என்ற பட்ட பெயரையும் பெற்றார் .இவரை பெருங்குன்றூர்கிழார் என்று அழைக்க பட்டார்.இவரது  இயற்பெயரை அறிய முடியவில்லை.

  முல்லை நிலத்தில் வேட்டுவ குடியை சேர்ந்த  சீறூர்  ஊராளி  பாண் குடியினருக்கு புலவர் இறையிலி  காணி  கொடுத்தார்கள் .

பாசறை யீரே! பாசறை யீரே!
துடியன் கையது வேலே; அடிபுணர்
வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே; காண்வரக்
 கடுந்தெற்று மூடையின் ………..
வாடிய மாலை மலைந்த சென்னியன்
வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
மூரி வெண்டோள் ……..
 சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ!
மாறுசெறு நெடுவேல் மார்புளம் போக
நிணம்பொதி கழலொடு நிலஞ்சேர்ந் தனனே.
அதுகண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து
இறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
 அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.(புறநானூறு 285)

அருஞ்சொற்பொருள்:
1. பாசறை = படை தங்குமிடம். 2. துடியன் = துடி என்னும் பறையை அடிப்பவன்; புணர் = சேர்த்த. 3. வாங்கு = வளைவு; இரு = கரிய, மருப்பு = யாழின் தண்டு; தொடை = யாழின் நரம்பு. 4. தோல் = கேடயம். 5. கடுதல் = மிகுதல்; தெற்று = அடைப்பு; மூடை = மூட்டை. 6. மலைதல் = அணிதல்; சென்னி = தலை. 7. அயர்தல் = செய்தல். 8. மொசித்தல் = மொய்த்தல். 9. மூரி = வலிமை; 10. உகு = சொரி, உதிர். 11. செறுதல் = சினங்கொள்ளுதல். 13. பரந்தோர் = பரந்த அறிவுடைய சான்றோர். 14. இறைஞ்சுதல் = தாழ்தல், வணங்குதல், கவிழ்தல்; குருசில் = குரிசில் = தலைவன்; பிணங்குதல் = பின்னுதல். 15. அலமரல் = அசைதல்; தண்ணடை = மருத நிலத்தூர். 16. இலம்பாடு = வறுமை; ஒக்கல் = சுற்றம். 17. கரம்பை = சாகுபடி செய்யக்கூடிய நிலம்; நல்குதல் = அளித்தல்.

உரை:
 பாசறையில் உள்ளவர்களே! பாசறையில் உள்ளவர்களே! தலைவனின் வேல் துடியனின் கையில் உள்ளது; அவன் கேடயம், யாழின் அடியில் இணைக்கப்பட்ட வளைந்த கரிய தண்டோடு, இனிய இசையை எழுப்பும் நரம்புகளுடன் கூடிய சிறிய யாழையுடைய பாணனின் கையில் உள்ளது. மிகவும் நெருக்கமாக அடுக்கிய மூட்டைகள் போல … வாடிய மாலை அணிந்த தலைவன், வேந்தனுக்கு வேண்டிய செயல்களைச் செய்யும் அரிய சுற்றத்தாரோடு நெடிய அரண்மனைக்கு வந்தான். பகைவர்கள் எய்த அம்புகள் மொய்த்த வலிய தோள்…. நிலத்தைச் சேறாக்கும் குருதி சொரிந்தான். ஐயோ! பகைவர்கள் சினத்துடன் எறிந்த நெடிய வேல் அவன் மார்பை ஊடுருவிப் புதைந்து நின்றது. பிணங்களிடையே நின்று போர்புரிதலால், மாமிசம் படிந்த கழலுடன் நிலத்தில் வீழ்ந்தான். அவன் வீழ்ந்ததைக் கண்டு, அங்கிருந்த சான்றோரெல்லாம், “கதிர்கள் தம்முள் பின்னிக்கொண்டு அசையும் நெற்கழனிகளையுடைய மருதநிலத்தூர்களை முன்னே இரவலர்க்குக் கொடுத்தான். இரவலராகிய சுற்றத்தின் தலைவனுக்கு எஞ்சியிருந்த, சாகுபடி செய்யக்கூடிய நிலத்தைப் பரிசாகக் கொடுத்தான்.” என்று புகழ்ந்தார்கள். அதைக் கேட்ட தலைவன் நாணித் தலைகுனிந்தான்.

             ஒன்பதாம் பத்து(பதிற்று பத்து) - பதிகம்

குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்,
வெரு வரு தானையொடு வெய்துறச்செய்து சென்று,
இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து,
பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று,
வஞ்சி மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
மந்திர மரபின் தெய்வம் பேணி,
மெய் ஊர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரை அறு கேள்விப் புரோசு மயக்கி,
அருந் திறல் மரபின் பெருஞ் சதுக்கு அமர்ந்த
வெந் திறல் பூதரைத் தந்து, இவண் நிறீஇ,
ஆய்ந்த மரபின் சாந்தி வேட்டு,    
மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்
இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்

பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு.அவைதாம்:நிழல் விடு கட்டி, வினை நவில் யானை, பல்
தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடு காண் நெடு
வரை, வெந் திறல் தடக்கை, வெண் தலைச் செம் புனல்,
கல் கால் கவணை, துவராக் கூந்தல், வலி கெழு தடக் கை.
இவை பாட்டின் பதிகம்.


பாடிப் பெற்ற பரிசில்: 'மருள் இல்லார்க்கு மருளக்
கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம்
கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப்
படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு
ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட
வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ


குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு
வீற்றிருந்தான்.

வேர்ச்சொற்கள்

வேர்ச்சொற்கள்

1,வேட்டு=வேள்வி;விரும்பி;விருப்பம்;வேட்டுவர் குடி

வேட்டு என்ற வேர்ச்சொல்லில் இருந்து வேட்டுவர் என்ற சொல் உருவானது .போரை விரும்பி (போர் வேட்டு ) செய்தவர்களை வேட்டுவர் என்று அழைக்க பட்டது .தொல்காப்பியர் இவர்களை வேட்டுவ குடியினர் என்று அழைத்தார் .சங்க காலத்தில் வேட்டுவ குடியினரை நாண்(வில்லில் இருக்கும் கயிறு ) உடை மாக்கள் ,வேள் மாக்கள்,வேந்து மாக்கள் என்றழைக்கப் பட்டது .

காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு ஆங்கு - பெரும் 43
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு - பெரும் 449
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட - முல் 26
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு/வேறு பல் பூளையொடு உழிஞை சூடி - பட் 234,235
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு - நற் 111/5
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து - நற் 165/4
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர் - நற் 205/2
கொடும் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த - நற் 211/3
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் - நற் 252/10
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு/கடும் சூல் வயவொடு கானல் எய்தாது - நற் 263/4,5
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு/வயவர் மகளிர் என்றி ஆயின் - நற் 276/2,3
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட - நற் 285/6
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு - நற் 332/2
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி - குறு 154/3
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் - குறு 178/3
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி - பரி 5/41
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி - கலி 93/16
தொல்_வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல் - கலி 118/3
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை - அகம் 3/5
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை - அகம் 144/14
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர் - அகம் 157/4
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் - அகம் 187/22
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு/எயிறு தீ பிறப்ப திருகி - அகம் 217/18,19
இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த - அகம் 238/4
நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த - அகம் 249/15
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த - அகம் 276/1
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை - அகம் 285/11
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு - அகம் 361/12
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ - அகம் 387/9
வயவு_உறு மகளிர் வேட்டு உணின் அல்லது - புறம் 20/14
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு - புறம் 52/4
வழு இன்று எய்தியும் அமையாய் செரு வேட்டு/இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி - புறம் 99/8,9
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து - புறம் 190/8
கடும் தெறல் செம் தீ வேட்டு/புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே புறம் 251/6,7
மண் நாண புகழ் வேட்டு/நீர் நாண நெய் வழங்கி - புறம் 384/15,16
வேட்டும் (1)
எண் நாண பல வேட்டும்/மண் நாண புகழ் பரப்பியும் - புறம் 166/22,23

2,வேட்டம்=வேட்டை

வேட்டம்(வேட்டை ) என்ற சொல் வேட்டை தொழிலை குறிக்கும் சொல் .
வேட்டம் என்ற வேர் சொல்லில் இருந்து  வேட ,வேடர் ,வேடுவர் போன்ற சொற்கள் பிறந்தது .
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு - பொரு 142
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் - பெரும் 111
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து - நெடு 129
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாது - பட் 92
வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்ப - நற் 38/1
கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து - நற் 49/5
எமரும் வேட்டம் புக்கனர் அதனால் - நற் 67/9
மாயா வேட்டம் போகிய கணவன் - நற் 103/7
வேட்டம் வாயாது எமர் வாரலரே - நற் 215/12
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் - நற் 331/7
நடுநாள் வேட்டம் போகி வைகறை - நற் 388/5
வீ அகம் புலம்ப வேட்டம் போகிய - கலி 46/1
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என - அகம் 70/1
கோட்டு_மீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் - அகம் 170/11
வேட்டம் போகிய குறவன் காட்ட - அகம் 182/6
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த - அகம் 193/3
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி - அகம் 196/4
பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய - அகம் 282/1
விசைத்த வில்லர் வேட்டம் போகி - அகம் 284/9
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே - அகம் 388/26
அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர் - அகம் 389/13
நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர் - புறம் 31/5
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் - புறம் 152/6

வேட்டல்=வேள்வி
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் - பதி 24/6
கபிலை கண்ணிய வேள்வி நிலையும் - பொருள். புறத்:35/6

Saturday, September 22, 2018

வேட்டு குடியினரின் வரலாறு:

வேட்டுகுடியினர் வரலாறு:

-----------☆☆☆☆☆☆☆☆☆----------

வேட்டுவ கவுண்டர் (பூலுவ வேட்டுவ குலம்,மாவலி வேட்டுவ குலம் ,காவல வேட்டுவ குலம் ,வேட வேட்டுவ குலம்,வேட்டுவ குலம்) இனத்தை பற்றிய இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள்:
ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப் பெயர். ஆ வயின் வரூஉம் கிழவரும் உளரே. (தொல்காப்பியம் 21) கி மு 300 -400 களில் தோன்றிய தொல்காப்பியத்தில் வேட்டுவ இனத்தை பற்றி கூறப்பட்டுள்ளது . கிபி 100,200,300,400 களில் தோன்றிய இலக்கியத்தில் (அகம் ,புறம் ,நற்றிணை ,ஆற்றுபடை ) வேட்டுவர் இனத்தை பற்றி கூறப்பட்டுள்ளது . கிபி 5ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் ,கிபி 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தோன்றிய சிலம்பு -வேட்டுவ வரி வேட்டுவ இனத்தை பற்றி கூறுகிறது . தமிழ் மண்ணில் கிபி 500,600,700,800,900,1000,1100,1200,1300,1400,1500,1600,1700,1800,1900 களில் கிடைத்த கல்வெட்டுகள் ,நடுகற்கள் ,பட்டயங்களில் வேட்டுவர் இனத்தை பற்றி கூறப்பட்டுள்ளது . சங்ககாலத்தில் வேட்டுவர் இனத்தை வில்லர் ,எய்னர் போன்ற சிறப்பு பெயர்களில் அழைக்கபட்டதை இலக்கியங்கள் உறுதிபடுத்துகிறது .வேட்டுவ இனத்தினர் படைதொழில் செய்ததால் வேட்டுவ போர்வீரரை மறவர் ,மழவர் ,இளையர் ,வயவர் என அழைக்கபட்டது . சில வேட்டுவ குலங்களை காவலன் என்றும் ,சில வேட்டுவ குலங்களை பூலுவர் என்றும் ,சில வேட்டுவ குலங்களை மாவலியர் என்றும் ,சில வேட்டுவ குலங்களை வேடர் அல்லது வில்வேடுவர் என்றும் அழைக்கபட்டதை கல்வெட்டுகள் மற்றும் பட்டயங்கள் உறுதிபடுத்துகிறது .
உதாரணம் : வேடர் வேட்டுவர் '..கொடுமுடிநகர் கடந்து வெஞ்சமாக் கூடத்திற்கு வந்து வேடர் வேட்டுவராகிய கம்பழத்தவரை விட்டு செடி கொடி வெட்டி வேலி பண்ணி வைத்து ..' வேடர் வேட்டுவர் -வேட வேட்டுவ குலம் . கம்பழம்-படைவீரர் குழுக்கள் '..சேரன் அந்த பூம்பாறை கோட்டை நகர் ஊர் அதிகாரத்திற்கு வேடர் குண்ணவரில் நாகப்ப மண்ணாடியை வைத்தார் ..' குண்ண -குண்ண வேட்டுவ குலம் .
(சோழன் பூர்வ பட்டயம் ). வேட்டுவர் கலிவெண்பா வேடர் வேட்டுவ குலத்தை பற்றி கூறுகிறது . வேடர் வேட்டுவரின் உட்பிரிவுகள் (குண்ண வேட்டுவ குலம்) பற்றி சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . பூலுவ வேட்டுவர் '....காசிப கோத்திரத்து பெரியசெட்டி பிள்ளனுக்கும் செட்டி கேசவனுக்கும் செட்டி சிறுகேசவனுக்கு மற்றொன்றும் ஊராள்மை பூலுவ வேட்டுவரில் கேச கன்னனுக்கொன்றும் கண்ணன் பாண்ட வதறையனுக்கும் கோவன் கள்ளைக்கும் ஊராள்மை ஓன்று ..' (1915:99,கிபி 13,திருமுருகன் பூண்டி ) '...அமர மயங்கற மன்னரையில் பூலுவர் காத்தூண் காணியில் நிலம் இரண்டு மாவும் ..' (S.I.I Vol-V,No-260, கோவை ,பேரூர் ,கிபி 13) '.... பெரும்பழனில் இருக்கும் பூலுவன் மேற்செரி வெள்ளைகளில் ராசன் நிறை உடையானான தொண்டைமான் ...' (S.I.I Vol-1,No-338,கிபி 12,பெருமா நல்லூர் )
வெள்ளை (வெள்ளாடு )- வெள்ளை வேட்டுவ குலம் 'ஆய் அம்மன் ' இன்று வெள்ளை வேட்டுவ குலத்தினரின் குல தெய்வம் ஆகும் . பல்லடம் ,பொங்கலூர் கல்வெட்டு 'பூலுவ குடுமரில் பெரிய பிளியனான கண்டிமுடையார் 'என்பவரை பற்றி கூறுகிறது . (பொங்கலூர் கல்வெட்டு, வீர பாண்டியர்,கிபி 13). குடுமி (குடுமர்)-குடுமி வேட்டுவ குலம் '...பூலுவன் சோழன் மனைக்கு வடக்கு மேற்பக்கெல்லை குடுமி சிறுவன் ..' (கரூர் ,வேட்டமங்கலம் கல்வெட்டு(South Indian Temple Inscription,Vol-2,No-736),பாண்டியர்,கிபி 13 ). சோழர் -சோழ வேட்டுவ குலம் . குடுமி -குடுமி வேட்டுவ குலம் குடுமி சிறுவன் பூலுவ வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் என்பதை இந்த கல்வெட்டுகள் மூலம் அறியலாம். .கொங்கு மற்றும் கோனாட்டு பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகளில் குடும,குடுமி என்ற சொல் குடுமி வேட்டுவ குலத்தை குறிக்கும் .
வேட்டுவர் கலிவெண்பா பூலுவ வேட்டுவ குலத்தை பற்றி கூறுகிறது . பூலுவ வேட்டுவரின் உட்பிரிவுகள் (சோழ குலம் ,குடுமி குலம் ,செய்யர் குலம் ,முட்டை குலம் ,பெரும்பற்றார் குலம் ,மயில் குலம் ,வெள்ளை குலம் ,குடதியர் குலம் ,உத்திரர் குலம் ) பற்றி கல்வெட்டுகள் கூறுகிறது . காவல வேட்டுவர் '...உத்தமசோழ சதுவேதி மங்கலத்து இருக்கும் காவலன் கரையரில் செய கங்கனான தம்பிரான் தோழன் ...' (ஈரோடு பெருந்துறை கல்வெட்டு ,கிபி 13) கரையர் -கரைய வேட்டுவ குலம் . வேட்டுவர் கலிவெண்பா காவல வேட்டுவ குலத்தை பற்றி கூறுகிறது . காவல வேட்டுவரின் உட்பிரிவுகள் (கரைய குலம் ,பட்டாலி குலம் (கள்ளிபிலர்,குறும்பிலர்),வேந்த குலம் (வளவர் ),மண்ணடி குலம் ) பற்றி கல்வெட்டுகள் மற்றும் பட்டயங்கள் கூறுகிறது . மாவலி வேட்டுவர் '...இராகுத்த மிண்டன் சொரிவன்னியர் சூரியன் புவனேக வீரன் பதினெட்டு வன்னியரை முதுகு புரங்கண்டான் காங்கேயனை வென்று கடையில் விலை கொண்டான் வேட்டு மாவலிக்கு விரிந்திடோம் பாண்டியன் ..' ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-758,திருமெய்யம் ,கி பி 15 )
வேட்டுமாவலிக்கு -வேட்டுவமாவலிக்கு. 'ஸ்ரீ மாவலி வாணகோ வலங்கை மீ .ம ..' (தமபுரி ,அரூர் ,கிபி 8) ஆனைமங்கலம் என்னும் ஊரை ஆண்ட 'வேட்டுவதி வாணகோவரையார் 'பற்றி கல்வெட்டு (செங்கம் நடுகற்கள் 1971/39) கூறுகிறது . வேட்டுவர் கலிவெண்பா மாவலி வேட்டுவ குலத்தை பற்றி கூறுகிறது . மாவலி வேட்டுவரில் உட்பிரிவுகள்( புன்னம் குலம் ,புன்னாடி குலம் ,புன்னகர் குலம் ,புன்னம்குடி குலம் ,பெருமாள் குலம் ,வெங்காஞ்சி குலம் ,இலங்கை குலம் ,உரிமைப்படை குலம் ,நல்வாள் குலம் ) பற்றி கல்வெட்டுகள் கூறுகிறது . பூலுவ வேட்டுவர்(பூலுவர்) ,காவல வேட்டுவர் (காவலன் ), மாவலி வேட்டுவர் (மாவலியர்), வேட வேட்டுவர் (வேடர் ) போன்றோர்கள் வேட்டுவர் இனத்தின் உட்பிரிவுகளாக பட்டயம் மற்றும் கல்வெட்டுகளில் கூறப்பட்டு உள்ளது . தொழில்கள் அடிப்படையில் தமிழ் மண்ணில் சாதிகள் உருவானது .கி மு 300 களில் வேட்டு தொழில் செய்தததால் வேட்டுவ சாதி உருவானது .இதனால்தான் வேட்டுவ சாதியை தொல்குடி என்று இலக்கியங்கள் கூறுகிறது . வேட்டு தொழில் (குடிகாவல் ,போர் தொழில் ) செய்தவர்கள் தங்களது உணவுக்காக மான் ,முயல் ,காட்டு கோழி போன்ற விலங்குகளையும் ,பறவைகளைவும் வேட்டையாடினார்கள் .இதனால் வேட்டுவ இனத்தவர்களை வேட்டவர் அல்லது வேடுவர் அல்லது வேடர் என அழைக்கபட்டது . தமிழ் இலக்கணம் :
வேட்டுவர் - இன பெயர் வேட்டுவன் -ஒருமை ; வேட்டுவர் -பன்மை வெ -குறில் ; வே-நெடில் வ -குறில் ;வா -நெடில் கல்வெட்டுகள் ,செப்பேடுகள் ,ஓலை சுவடிகளில் நெடிலுக்கு (வே ) பதிலாக குறில் (வெ) எழுத்தை பயன்படுத்தினார்கள். உதாரணம் : சேலம் ,ஆத்தூர் கல்வெட்டு (கிபி 13) நில வாளை வேட்டுவ கூட்டத்தை சேர்ந்த ராமன் சோழகோன் என்பவர் நீர் பாசனத்தை பெருக்க கிணறு வெட்டியதை பற்றி கூறுகிறது . அவன் திருச்சி முசிறி கல்வெட்டுகளில் (கிபி 13) 'நிலவாளை வேட்டுவார்' என்று கூறபடுகிறான் .இவன் பாண அரசரின் படை தலைவனாக இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது . முசிறி கல்வெட்டில் குறிலுக்கு (வ ) பதிலாக நெடில் (வா ) பயன்படுத்தபட்டுள்ளது . குடுமி வேட்டுவ குலத்தை 'குடுமியார் ' என்று அழைக்கபட்டதை கோனாட்டு கல்வெட்டுகள் கூறுகிறது . வில்லி வேட்டுவ குலத்தை 'வில்லியர் 'என்று அழைக்கபட்டதை கரூர் கல்வெட்டுகள் கூறுகிறது
நடுகற்கள் ,கல்வெட்டுகள் ,சோழன் பூர்வ பட்டயம் ,அப்பிச்சிமார் காவியம் ,வேட்டுவ கலிவெண்பா ,வேட்டுவ செப்பேடுகள் போன்ற ஆவணம்களில் பேசபட்ட வேட்டுவ குலத்தவர்கள் சங்க இலக்கியத்தில் பேசப்பட்டவர்கள் .சங்க இலக்கியத்தில் பேசப்பட்ட வேட்டுவ குலத்தவர்களை 'பூலுவர்' என்றும் 'காவலன் ' என்றும் 'மாவலியர்' என்றும் 'வில்வேடுவர்' என்றும் அழைக்கபட்டது. சங்க இலக்கியத்தில் பேசப்பட்ட வேட்டுவ குலத்தவர்கள் இன்று வேட்டுவ கவுண்டர் ,புன்னம் வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அறிக்கைகள் (ஆங்கிலேயர் காலத்தில் கிபி 1931 வரை சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தபட்டது . கிபி 1985 ஆம் ஆண்டு அம்பாசங்கர் அறிக்கை சாதிகள் பற்றிய பட்டியலை தருகிறது .) கூறுகிறது .

Thursday, September 20, 2018

மறவர் = வீரர்

வேட்டுவர் குடியைச் சேர்ந்த வீரருக்கும்(மறவர்), தற்கால மறவர் என அழைக்கப்பட்ட சாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை:

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சியில் பாண்டியர்களால் மறகுடி என அழைக்கப்பட்டு உருவான சாதி வரலாறு.

ஆதாரம்.

---------------☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆---------------

பாளையபட்டுகளின் வரலாறு

தொகுதி-3

தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறை.

சென்னை 1981

பொருளாசிரியர் : டாக்டர்.இரா.நாகசாமி.

பதிப்பாசிரியர் : க.குழந்தைவேலன்.

மருதப்பதேவன் வம்சாவளி டி.2847

ஊத்துமலை பாளையப்பட்டு

வங்கீஸ் வழக்கும் மறக்குல பூருவெத்திரத்துக்கும் கைபீது.

ஆதி ஆரத்தியம் எங்கள் மறகுலம் உண்டானது மலையத்துவச பாண்டியனுக்கு வெகுநாள் குழந்தை இல்லாமல் அநேக தவசுகள் யன்னி பார்வதி தேவி மும்முலைத் தடக்கை யாயி மலையத்துவச பாண்டியனுக்கு குமாரத்தியா இருந்து ராஜ்ஜிய பாரஞ் செய்து கொண்டிருக்கு நாளையில் திக்கு விசயஞ்செய்ய வேண்டிய காரணத்துக்காக பராக்கிரம வீரத்துடனே சிறிது சைனீயிங்கள் வேனுமென்று அம்மனுட திருவுள்ளதிலே தோன்றி அம்மனோட விழா பொறத்திலிருந்து அனேக சைனீயங்கள் பிறக்கிற போதே அவளை தடியும் கையுமாக வெகு பராக்கிரமாய் பிறந்தார்கள்.உடனே அவர்கள் எங்களுக்கு பணிவிடை என்னவென்று அம்மனுடனே கேட்டதற்க்கு திக்கு விசயார்த்த மாக சிருஷ்டிசோம் உங்கள் ஜாதி மறவுக்கு மறம் என்று பேர் இருக்கட்டும். நாம் சிருஷ்டித்தபடியினாலே தேவன் என்றும் பட்டப்பெயர்ஆயி அனேகம்பேருக்கு சேனாதிபத்தியமுங் கட்டளையிட்டு அந்த சுத்த வீரம் பொருந்திய மறசைனீயத்துடனே அம்மன் திக்கு விசயத்துக்கு எழுந்தருளினால் ...............................................................

..............

.............

............ அப்படிபட்ட மற வம்சத்தில் நாகராஜாவின்  மகன் திண்ணராசா ராஜ்ஜியபரபாலம் செய்யும் நாளையில் வேட்டை மார்க்கத்தில் திரு காளகஸ்தி பருவத சார்பில் வரும்போது சைனீயங்களை  விட்டு பிரிந்து மறக்குல திண்ணராஜா மட்டும் தனித்து வேட்டை ஆடுகிற போது.....................

.....................

....................அப்போதிருந்த பாண்டியராஜா இந்த பெண்ணை கேட்டு திருமுகம் அனுப்பிவிச் நாகராஜாவுடைய மனுதாரரையும் அனுப்பி விச்சார்கள்.நான் குடுக்கிறதில்லையென்று உங்கள் சூரிய வம்சத்துக்கும் எங்கள் மச்ச வம்சத்துக்கும் ஒருநாளும் சம்மந்தம்இல்லை ............
..............நாங்கள் இப்படி கொத்த மறஜாதி எங்கள் இடத்தில் தானே பாண்டியன் தானே பெண் கேட்டது என்று மாத்தரம் சொல்லி அனுப்பி விட்டார்கள்.

(கொற்றவன் தன் திருமுகத்தை கொணர்ந்த தூத குறையுடனு கோ மறவர் கொம்பை கோட்டையும் அற்றவர்சேர் திருவருங்க பெருமான் தோழன் அவதரித்த திருக்குலமென்று அறியார் போல)

........வேடுவரிடத்தில் இருக்கிற ராஜா மனுடால் திருமுகம் கொணர்ந்து குடுத்து நடந்த செய்தியை பாண்டிய ராஜாவிடத்தில் போய் கண்டு சொன்னார்கள்.

Wednesday, September 19, 2018

அகம்படி பிள்ளைகள்

#அகம்படி #பிள்ளைகள்:

(வேட்டுவரின் கோட்டை கொத்தளத்தில் அகம்படி செய்பவர்கள்)

-------------☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆--------------

பிள்ளை வாணகோவறையர்

வாணகோவறையர்,வாணதிராயர் என்பன ஒருபொருட் பெயர்களாகும்.
மாவலி வேட்டுவ மன்னனின் பட்டத்தரசி அல்லாத மற்ற மனைவியரிடத்து பிறந்தவர்களை 'பிள்ளை வாணகோவறையர்','பிள்ளை மாவலி வாணதிராயர்' என்ற அடைமொழி கொடுத்து அழைக்கபட்டது .இவர்கள் மாவலி வேட்டுவ மன்னனுக்கும் மற்ற குறுநில தலைவர்களுக்குக் இடையேய் நடந்த மணவினையால் பிறத்தவர்களாக இருக்க வேண்டும் .இவர்கள் நாட்டில் அமைதியை ஏற்படுத்த ஆங்காங்கே இருந்த சிற்றூர்களுக்கும் ,பேரூர்களுக்கும் தலைவர்களாக(பெரியான் உய்யவந்தானான விக்கிரமசிங்க தேவன்,பின்முடி தாங்கினார்,காரையூர் வேளார்,பிறவிக்கு நல்லறன அரசுவழிகண்ட தேவர்,ஏகவாசகன் குலோத்துங்கன் ) பணியாற்றினார்கள் .
மதுரை ,திருமங்கலம் ஆனையூர் கல்வெட்டு (கிபி 13) ஒன்று 'பிள்ளை மாவலிவாணதிராயர் அகம்படி முதலிகளில் பெரியான் உய்யவந்தானான விக்கிரமசிங்க தேவன் ' என்பவரை பற்றி கூறுகிறது .(அகம்படியார் என்றால் அரசகுலதினருக்கு அகம்படி செய்பவர்(சேவை செய்பவர் அதிலிருந்து வந்த சொல்லே "சேர்வை") , அகம்படியார்களுக்கு மேலும் கோட்டையை பாதுகாக்கும் பணிகளும் இருந்தன.)

கோனாடு கல்வெட்டு(கிபி 1470;PSI-715) ஒன்று 'தென்கோனாடு ஒல்லையூர் கூற்றத்து காரையூர் கிழாண்டறானான காரையூர் வேளார் னேன் பிள்ளை மாவலி வாணதிராயர் பிள்ளைகளில் ராசகெம்பிர வளநாட்டு வயலூர் காங்கையர் பிறவிக்கு நல்லறன அரசுவழிகண்ட தேவர் ' என்பவர்களை பற்றி கூறுகிறது .

கோனாடு கல்வெட்டு(கிபி 1470;PSI-815) ஒன்று 'பின்முடி தாங்கினார் ' என்பவரை பற்றி கூறுகிறது .

கோனாடு கல்வெட்டு(கிபி 13;1907:430) ஒன்று 'பிள்ளை குலசேகர மாவலிவாணதிராயர்'என்பவரை பற்றி கூறுகிறது .

பெரம்பலூர் ,கோயில்பாளையம் கல்வெட்டு (கிபி 1180:1992-93:443) ஒன்று 'துண்ட நாடுடையான் ஏகவாசகன் குலோத்து ங்கநானா பிள்ளை வாணகோவறையர்'என்பவரை பற்றி கூறுகிறது.

கேளிர்=உறவினர்கள்

கேளிர்=உறவினர்கள்

கேள் =கிளை =பங்காளி உறவு
கேள் அல் கேளிர்=மாமன் மச்சான் உறவு

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
5 மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே? புறநானூறு (74)

கிளை என்ற சொல் சேர வேட்டுவ குடியினரை குறிக்கும் .
கேள் அல் கேளிர் என்ற சொற்கள் சோழ வேட்டுவ குடியினரை குறிக்கும் .

உரை: சேர வேட்டுவ குடியில்  குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அது ஓரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள். ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம்(சோழ வேட்டுவ குடியினர் ) மன வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால் அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனே! இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?

தமிழ் மண்ணில் பல ஊர்களை வேட்டுவ குடியினர் ஆண்டு வந்தார்கள் .இவர்களுக்கு இடையில் அடிக்கடி போர்கள் நடைபெற்றது .இதை பார்த்த புலவர் பூங்குன்றனார்  வேட்டுவ குடியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக

யாதும் ஊரே யாவரும் கேளிர்/தீதும் நன்றும் பிறர் தர வாரா - புறம் 192/1,2 என்று  பாடினார் .

வேட்டுவர் குடியைச் சேர்ந்த ஊராளிகள்

வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள் (சீறூர் மன்னர்கள் மற்றும் தண்ணடை மன்னர்கள் )

சங்க இலக்கியங்களில்  முல்லை மற்றும் மருத நில ஊர்களை ஆண்டவர்களை சீறூர் மன்னர் ,தண்ணடை மன்னர் என்று அழைக்க பட்டனர் .இவர்களை கல்வெட்டுகளில் ஊராளி என்றும் ஊரும் ஊராளிகள் என்றும் அழைக்கப்பட்டனர் .

புறநானூற்றின் 285ஆம் பாடல் முதல் 335ஆம் பாடல் வரை சீறூர் மன்னர் பற்றிக் குறிப்பிடுகின்றன. சீறூர் மன்னர் ஆண்ட நிலப்பகுதி,
பருத்தி வேலிச் சீறூர் மன்னர் (புறம். 299:1)
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் (புறம் 308:4)

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,

நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர் (புறம் 302:7 )
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அம்குடிச் சீறூர் (புறம் 324:7-8)

எனவும் இவர்கள் ஆண்ட நிலப்பகுதி குறிக்கப்பட்டுள்ளது.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்த மரபில் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழுமூன்று துறைத்தே (தொல்.பொருள்.புறத்.5:19 – 21)

எனக் கல்நடும் நடைமுறையைக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர்.

சங்க இலக்கியங்களில் நடுகல் வழிபாடு குறித்த செய்திகளைப் பரவலாகக் காணமுடிகிறது.

நிரம்பா நோக்கின் நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல் அமர்க் கடந்த நாணுடைமறவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலைநடுகல்
வேல் ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் (அகம். 67: 6 – 11)

எனும் பாடலடிகள், ஆநிரைகளை மீட்க வேண்டி வெட்சி வீரருடன் போரிட்டு வென்று வீரமரணமடைந்த வீரர்களது பெயரும் புகழும் பொறிக்கப்பட்ட கற்கள் மயில் தோகை சூட்டப்பட்டு நிற்க, அக்கற்களுக்கு முன் வேலும் கேடயமும் சார்த்தி வைக்கப்பட்டிருந்த நிலையைக் குறிப்பிடுகின்றன.

வீளை அம்பின் விழுத்தொடை மழவர்
நாள்ஆ உய்த்த நாமவெஞ்சுரத்து
நடைமெலிந்து ஒழிந்த சேண்படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி, அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
வெருவரு தகுநகானம் ‘நம்மொடு
வருக என்னுதி ஆயின்
வாரேன்; நெஞ்சம்! வாய்க்கநின் வினையே (அகம் 131:6 – 15)

எனும் பாடலடிகள், ‘நாம் கடந்து செல்லும் காடோ, சீழ்க்கை ஒலி பொருந்திய அம்பினது தப்பாத தொடையினையுடைய வெட்சி சூடின மறவர்கள், விடியற்காலையில் பசுக்கூட்டத்தைக் கவர்ந்து கொண்டு போகும் அச்சம் தரும் கொடிய பாலை வழியினைக் கொண்டது. வேட்சியாருடன் போரிட்டு ஆநிரைகளை மீட்டுவரச் சென்ற கரந்தையார் அச்சுரவழியைக் கடந்து நெடுந்தூரம் நடந்து வந்தமையால் தம் தாயாருடன் செல்லமாட்டாது நடைதளர்ந்து நின்றுவிட்ட கன்றுகளின் கண்ணின் கருமணியின் கடையினின்றும் சிந்துகின்ற நீரைத் துடைத்து அவற்றின் துயரைப் போக்கினர். நிரைமீட்ட போரில் இறந்துபட்ட கரந்தையோரின் பெயரும் பெருமையும் பொறித்து, மயிற்பீலி சூட்டப்பெற்று விளங்கும் சிறப்பினைக் கொண்ட நடுகல்லின் முன் ஊன்றிய வேலும், அதன்கண் சார்த்தப்பெற்ற கேடயமும் செல்லும் வழிதோறும் வேந்தரது போர்முனையை ஒத்துக் காணப்படும் அச்சம் எழும் இயல்பினை உடையது  என விளக்கி நிற்கின்றன.

சீறூர் மன்னர் நடுகல் வழிபாட்டை முதன்மையாகக் கொண்டிருந்ததையும் நடுகல் அன்றி வேறு தெய்வங்களை வழிபடாப் பண்புடையார் என்பதையும் மாங்குடி கிழாரின் மூதின்முல்லை துறையிலமைந்த,

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறம்.335: 10 – 12)

எனக் குறிப்பிடுகிறது. இந்த அடிப்படையில்,

நடுகல் பிறங்கிய உவல் இடுபறத்தலை
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர் (புறம் 314: 3 - 4)

என நடுகற்கள் நிறைந்திருந்த சுடுகாட்டை உடையதாகச் சீறூர் சுட்டப்படுகிறது.

வேந்துவிடுதொழில்:
புன்புல வேளாண்மையால் கிடைக்கும் வரகு, தினை, அவரை முதலான தானியங்ககள் மற்றும்  வேட்டையின் வாயிலாகக் கிடைக்கும் பொருளைக் கொண்டதான சீறூர் மன்னர் சமுதாயம் வறுமை காரணமாக வேந்துவிடுதொழிலில் ஈடுபட்டமையைப் புறநானூற்றுப் பாடல்கள் விளக்குகின்றன.

வேந்து தொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு ( புறம்.285 : 7)
……… வேந்தனொடு      
நாடுதரு விழுப்பகை எய்துக (புறம்  306: 6 - 7)
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்  
வேந்துவிடு தொழிலொடு சென்றனன்(புறம்  319: 12 - 13)

என வேந்துவிடுதொழிலை மேற்கொண்ட சீறூர் மன்னர், அத்தொழிலின் வாயிலாக நெல், பொன், யானையின் முகபடாம் போன்ற பலவற்றைப் பரிசிலாகப் பெற்று வந்ததையும் பாடல்கள் காட்டுகின்றன.

பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து,தன்
புன்புறப் பெடையொடு வதியும்
யாணர்த்து ஆகும் - வேந்து விழுமுறினே (புறம்  318: 7 - 9)

எனும் பாடலடிகள் பெரிய நெல் வயல்களில் விளைந்த நெல்லை உண்ட தன்னுடைய புல்லிய முதுகுப் பகுதியையுடைய பெண் குருவியுடன் தங்குவதற்கு இடனாகிய, வேந்துவிடு தொழிலில் கிடைக்கும் புதுவருவாய் உடையதாகும் ஊர் எனக் குறிப்பிடுகின்றனர்.

சிறிய ஊரின் மன்னன், வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை ஏற்றுப் பகை மேற்சென்றனன். அவன் போரில் வெற்றியுடன் திரும்பி வந்து உன்னுடைய பாணிச்சி பொன்னரி மாலை அணிய, உனக்கு வாடாத பொன் தாமரைப் பூவினைத் தலையில் பரிசாகச் சூட்டுவான் எனப் பாணரிடம், சீறூர் மன்னனின் மனைவி குறிப்பிடுவதை,

சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்துநின்
பாடினி மாலையணிய
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே (புறம்  319: 12 - 15)

எனும் பாடலடிகள் காட்டுகின்றன.

அருஞ்சமம் ததையத் தாக்கி பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும் பரிசிலனே (
புறம்  326: 13 - 15)

எனும் பாடலடிகள் சீறூர் மன்னன் வேந்துவிடு தொழில் முடித்து யானையின் முகபடாம் பெற்று வந்ததைக் காட்டுகின்றன.

அரசனால் வென்றளிக்கப்பட்ட சிறந்த பொருள்களைத் தனக்கென வைத்துக்கொள்ளாது பரிசிலர்க்கு எந்நாளும் குறையாமல் தருகின்ற வள்ளண்மையுடைய புகழமைந்த தகுதியுடையவன் சீறூர் மன்னன் என்பதை,

வேந்து தரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரை (புறம்  320: 16 - 18)
எனும் பாடலடிகள் காட்டுகின்றன.

வேந்துவிடு தொழிலுக்காட்பட்டு, அத்தொழிலின் வாயிலாகப் பெற்றவற்றைப் பாணர்க்கும் பலர்க்கும் வழங்கிய சீறூர் மன்னரின் இத்தகைய இயல்பு அவர்தம் குடிமைப் பண்பால் விளங்கக் காணலாம்.

சீறூர் ஊராளிகள் (சீறூர் மன்னர் )வேந்துவிடு தொழில் மூலம் தண்ணடை (மருத நிலத்தை ஊர் ) பெற்று  தண்ணடை ஊராளிகளாக (தண்ணடை மன்னர் ) மாறினார்கள் .

Saturday, September 8, 2018

சங்க இலக்கியத்தில் பரதவர்

சங்க இலக்கியத்தில் பரதவர்

நெய்தல் நிலத்தில் வாழும் பொது மக்களின் பொது பெயரை குறிப்பதாக

குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட
கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல (பொரு 218-221)

என்ற அடிகளில் அமைத்துள்ளது .

பரதவர் நெய்தல் நிலத்தில் வாழ்பவராகவும் ,மீன் பிடிக்கும் தொழில் செய்பவராகவும் குறிப்பதாக

கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர்/நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ - நற் 4/1,2
மீன் எறி பரதவர் மகளே நீயே - நற் 45/3
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்/மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் - நற் 63/1,2

மீன் எறி பரதவர் மட_மகள் - நற் 101/8
மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர் - அகம் 65/11
இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர்/தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினைஇ - அகம் 366/6,7
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என - அகம் 70/1
என்ற அடிகளில் அமைத்துள்ளது .

பரதவர் குடியை சார்ந்தவரை குறிப்பதாக

பரதவர் மகளிர் குரவையோடு ஒலிப்ப - மது 97

என்ற அடிகளில் அமைத்துள்ளது .

வேட்டுவர் குடியைச் சேர்ந்த வேளிர்கள் மற்றும் வேந்தர்கள்

வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்கள் மற்றும் வேந்தர்கள்

 தொன்று முதிர் வேளிர் குன்றூர் குணாது - குறு 164/3
பொன் அணி யானை தொன் முதிர் வேளிர்/குப்பை நெல்லின் முத்தூறு தந்த - புறம் 24/21,22

வீரை வேண்மான் வெளியன் தித்தன் - நற் 58/5
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று - அகம் 36/19
நறவு_மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்/வயலை வேலி வியலூர் அன்ன நின் - அகம் 97/12,13
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் - அகம் 208/5
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் - புறம் 395/20

விளங்கு பெரும் திருவின் மான விறல் வேள்/அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் - மது 344,345
இருங்கோவேள் மருங்கு சாய - பட் 282
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர் - அகம் 208/15
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த - அகம் 372/4
ஓம்பா ஈகை மாவேள் எவ்வி - புறம் 24/18
பாரி வேள்பால் பாடினை செலினே - புறம் 105/8
தேர் வேள் ஆயை காணிய சென்மே - புறம் 133/7
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் - புறம் 135/13
அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப - வஞ்சி 25/177
வேளாவிக்கோ மாளிகை காட்டி - வஞ்சி 28/198
அழும்பில் வேளொடு ஆயக்கணக்கரை - வஞ்சி 28/205
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட - புறம் 372/8

வேளிருள் வேளே விறல் போர் அண்ணல் - புறம் 201/12
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய - அகம் 246/12
வேளிரொடு பொரீஇய கழித்த - அகம் 331/13
பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்று_மொழிந்து - பதி 30/30
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து - பதி 49/7
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து - பதி 75/4
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய - பதி 88/13
இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய - மது 55
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என் - நற் 280/8
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த - அகம் 135/12
அடு போர் வேளிர் வீரை முன்துறை - அகம் 206/13
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த - அகம் 258/2

Thursday, September 6, 2018

தொல்குடி வேட்டுவர் வரலாறு

#தொல்குடி #வேட்டுவர் #வரலாறு:

(சிலப்பதிகாரம்,மதுரை காண்டம் ,வேட்டுவ வரி)

சங்க காலத்தில் வேட்டுவர் குடியை சேர்ந்த வீரத்தையும்,வீரர்களையும் குறிக்க மறம்,மறவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

வழங்கு வில் தடகை மறகுடி தாயத்து - மது,வேட்டுவ வரி 12/6
மறகுடி தாயத்து வழி வளம் சுரவாது - மது,வேட்டுவ வரி 12/14
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற - மது,வேட்டுவ வரி 12/27

சங்க காலத்தில் வேட்டுவர் குடியை சேர்ந்த படைத்தலைவரை குறிக்க தென்னவன் மறவன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்/குழியில் கொண்ட மராஅ யானை - அகம் 13/6,7

வேட்டுவர் குடியினருக்கும் தற்க்காலத்தில் மறவர் என அழைக்கப்பட்ட சாதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

மழவர்

சங்க இலக்கியத்தில் மழவர்

சங்க இலக்கியத்தில் மழவர் என்ற சொல் குடிபெயர்  கிடையாது .

போர் வீரர்களை குறிப்பதாக

‘…………..வெம் போர்
மழவர் பெருமகன் மாவள் ஓரி’ நற் 52/8-9

வீளை அம்பின் விழு தொடை மழவர்/நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து - அகம் 131/6,7
வார் கழல் பொலிந்த வன்கண் மழவர்/பூ தொடை விழவின் தலை நாள் அன்ன - அகம் 187/7,8

குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை - பதி 21/24
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை - பதி 55/8

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

வெட்சி வீரர்களையும் ,கரந்தை வீரர்களையும் மழவர் என்று சங்க இலக்கியத்தில் பல இடங்களில் அழைக்கபட்டனர் .

                 களவு தொழில் செய்ததை குறிப்பதாக

".....இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்....."(அகம்.91)

பொருள்: கரிய நிறமுடைய இரலை மான்கள் உறங்கும் பாறாங்கற்களால் ஆன உயர்ந்த கற்குவியலில் அஞ்சாமை உடைய மழவர் பசுக்களை களவு செய்வதற்கு உதவியாய் வளர்ந்து நீண்ட அடியை உடைய ஆசினிப் பலவின் மரங்களை உடைய ஊர்.

"....கண நிரை அன்ன, பல் கால் குறும்பொறை
தூது ஒய் பார்ப்பான்.........
................
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்....."(அகம்.337)
பொருள்: உப்பு வணிகர் கூட்டமாகச் செல்லும் கழுதை வரிசை
போன்று விளங்கும் பாறைகளின் வழியே பல முறையும் தூதாகப் போகும் பார்ப்பான், வெண்மையான ஓலைச் சுருட்டுடன் வரும் இயல்பைப் பார்த்து, உண்ணாமையால் வாட்டம் கொண்ட விலாவுடைய ‘இவன் கையில் இருப்பது பொன்னாகவும் இருக்கக் கூடும்’ என்று எண்ணி, கையில் படைக்கருவியை உடைய மழவர் பயன் ஏதும் இல்லாமல் கொன்று வீழ்த்தினர்.

உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை -அகம் 121/11-12

என்ற அடிகளில் அமைந்துள்ளது.

எயினர்

சங்க இலக்கியத்தில் எயினர்

எயினர் என்ற சொல் பாலை நில பொது மக்களின் பொது பெயரை குறிக்கும் .

வேட்டுவ குடியை சேர்ந்தவர்களை குறிப்பதாக

கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் - அகம் 319/3

கடும் பரி குதிரை ஆஅய் எயினன்/நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என - அகம் 148/7,8

ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று - அகம் 181/7

வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்/அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை - அகம் 208/5,6

 ஆஅய் எயினன்/இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி - அகம் 396/4,5
வண் கை எயினன் வாகை அன்ன - புறம் 351/6

கொடு வில் எயினர் கொள்ளை உண்ட - பட் 266

கொடு வில் எயின குறும்பில் சேப்பின் - பெரும் 129

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

கள்வர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக

'கொடு வில் எயினர் கோட் சுரம் படர' அகம்  79/14

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

குறவர் குடியை சேர்ந்தவர்களையும் குறித்தது.

 புறநானூறு 157 வைத்து பாடலை பாடியவர் குறமகள் இளவெயினி. குறமகள் என்ற அடைமொழியிலிருந்து இவர் குறக்குலத்தைச் சார்ந்தவர் என்று தெரிகிறது. மலைவாழ் குறவர்கள் எயினர் என்றும் குறக்குலப் பெண்கள் எயினி என்றும் அழைக்கப்பட்டனர்.

களிறு தொடூஉ கடக்கும் கான்யாற்று அத்தம் - அகம் 137/௩

அர்த்தம் =பாலை நிலத்தில் இருந்த பாதை .கான் =முல்லை நிலம் (காடு )

கானவர்

சங்க இலக்கியத்தில் கானவர்

காடுகளில் வாழும் பொதுமக்களின் பொது பெயரை குறிப்பதாக

கானவர் மருதம் பாட அகவர் - பொரு 220

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

வேட்டுவ குடியை  சேர்ந்தவரை குறிப்பதாக

‘வெற்பு அயல் நண்ணியதுவே வார் கோல்
வல் வில் கானவர் தங்கை
பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரே’ குறு 335/5-7

என்ற அடிகளில் அமைந்துள்ளது
பொருள் :

மலைக்குச் சற்று அப்பால் இருக்கிறது, நீண்ட அம்பினையும்,வலிய வில்லினையும் உடைய வேட்டுவரின் தங்கையாகிய பெரிய தோளினைக்கொண்ட நம் தலைவி இருந்த ஊர்

.

கள்வர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக

கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர்
படுகளத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை
கள்ளி அம் பறந்தலை களர்தொறும் குழீஇ( அகம்  231/5-7)

என்ற அடிகளில் அமைந்துள்ளது.

குறவர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக

‘கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பிற்
றலை விளை கானவர் கொய்தனர்” - (ஐங்குறுநூறு 270)

‘கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்காட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கிழுமெனக்
கருவி வானம் தலை இ” (புறநானூறு 159)

'தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்' - (ஐங் 270/2 )

'துறு கண் கண்ணி கானவர் உழுத' - நற் 386/2

'பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை மலை'  317,318
'பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு' - குறு 379/2

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

கிழங்கு  சேகரிக்கும் தொழில் செய்பவரை  குறிப்பதாக

அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர்/கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை - ஐங் 208/1,2    

'இன்று யாண்டையனோ தோழி குன்றத்து
பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு' குறுந்  379/1,2

என்ற அடிகளில் அமைத்துள்ளது .

வேட்டை (வேட்டம்) தொழில் செய்பவரை குறிப்பதாக

'உரைமதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடு வில் கானவன் கோட்டு மா தொலைச்சி' நற்றிணை  75/5,6

'வாரற்க தில்ல தோழி சாரல்
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும்
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே '
 நற்றிணை  85/7-11

'பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின் வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்' அகம்  282/1-4

என்ற அடிகளிலும் அமைத்துள்ளது .

Tuesday, September 4, 2018

தொல்குடி வேளிர் வரலாறு

தொல்குடிகளின் வரலாறு:

வேட்டு என்ற சொல்லில் இருந்து வேளிர்களும் வேந்தர்களும் உருவாகினர்.வேட்டுவேளிர்களுக்கும் வேட்டுவேந்தர்களுக்கும் போரின் போது படைஉதவி செய்தவர்கள் , போரில் வெற்றி பெற்ற வேட்டு வேளிர்களும் வேட்டு வேந்தர்களும் அந்நியரான படைஉதவி செய்தவர்களான மன்பெரும்மரபினரான (மன்= ஆக்குதல்) படைத்தலைவருக்கு  ஊரையும் சிறு நாட்டையும் பரிசில் அளித்தனர்.அந்த மன்பெரும் மரபினர்களில் ஒருவன் மலையமான்.

வேட்டுவர் குடியைச் சேர்ந்த வேளிரில் ஒருவன் பாரி.

தமிழ் நாவலர் சரித்திரம் அவ்வையார்  பாரியின் மகளிர் அங்கவை,சங்கவை என்பவர்களை தெய்வீகனுக்கு மணஞ்செய்து குடுத்தார் எனக்கதைகட்டி கூறுகிறது.இது இக்காலத்தில் எழுத்தாளர் சரித்திர நாவலர் எழுதுவது போன்றது.பாரிவேள் க்கு அங்கவை சங்கவை என்பவர்கள் இருந்தார்கள் என்பது கற்பனை புனைவு.

புறநானூறு 122/8,9,10 வரி மலையமான் மனைவி பற்றி பாடப்பட்டது .இதில் எந்த ஒரு இடத்தில் பாரி மகளிர் என்று கூறப்படவில்லை.

S.I.I ,VOL. 7,NO.863  திருக்கோவிலூர் கல்வெட்டு கி.பி.1012 ல் முத்தமிழ் புலவர் கபிலர் பாரியின் அடைக்கலப் பெண்ணை மலையனுக்கு மனஞ்செய்து கொடுத்து தென்னை ஆற்றங்கரையில் தீயில் குழித்து உயிர் துறந்தார் எனவும் அவருக்கு நட்ட நடுகல்லுக்கு கபிலக்கல் எனவும் கூறப்படுகிறது.

கபிலர் கனல் புகுந்து நடுகல் ஆனார் என்பது நம்ப தகுந்ததல்ல.

இது சேக்கிழாரின் கற்பனைபுனைவுகளை  கேட்டு பின்னாலில் காளகஸ்த்தி கல்வெட்டு வரலாறு உருவானது போன்றது.


கி.பி.1(அ)2 நூற்றாண்டு களில் வாழ்ந்த வேட்டுபாரிவேள் ஐ ஆயிரம் வருடம் கழித்து கி.பி.1012 ல் கபிலர் கனல்புகுந்து நடுகல் ஆனார் என்பது நம்பதகுந்ததல்ல.

Monday, September 3, 2018

சங்க இலக்கியத்தில் மறவர்

சங்க இலக்கியத்தில்  மறவர்

சங்ககாலத்தில் மறவர் ,மறம் சொற்கள் வீரம் ,கொலை தொழில் புரிபவர் ,படை வீரர் போன்ற அர்த்தத்தில் பயன்படுத்த பட்டுள்ளது .சங்ககாலத்தில் மறவர் என்ற சொல் இனத்தை குறிக்க வில்லை .

வீரத்தை குறிப்பதாக

மறம் பாடிய பாடினியும்மே - புறம் 11/11

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

போர் வீரர்களை  குறிப்பதாக

தினை கள் உண்ட தெறி கோல் மறவர்/விசைத்த வில்லர் வேட்டம் போகி - அகம் 284/8,9

நல் இசை நிறுத்த நாண் உடை மறவர்/நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது - அகம் 387/14,15

நல் அமர் கடந்த நாண் உடை மறவர்/பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் - அகம் 67/8,9
வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர்/வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்மார் - அகம் 35/6,7
விழுதொடை மறவர் வில்இட தொலைந்தோர்
எழுத்து உடை நடுகல் அன்ன விழு பிணர்- ஐங் 352/1-2
       
       தேர்வண் கிள்ளி தம்பி வார்கோல்
     கொடுமர மறவர் பெரும (புறம் 43)

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

படைத்தலைவர்களை குறிப்பதாக

திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்/குழியில் கொண்ட மராஅ யானை - அகம் 13/6,7
வானவன் மறவன் வணங்கு வில் தட கை - அகம் 77/15
இழை அணி யானை சோழர் மறவன்/கழை அளந்து அறியா காவிரி படப்பை - அகம் 326/9,10
பெருந்தகை மறவன் போல கொடும் கழி - நற் 287/4
மீளி மறவனும் போன்ம் - கலி 104/50

என்ற அடிகளிலிலும் அமைந்துள்ளது .

சங்க இலக்கியத்தில் வெச்சி வீரர்களையும் ,கரந்தை வீரர்களையும்  மறவர் என்று பல இடங்களில் கூறப்பட்டு உள்ளது .

ஆறலை கள்வர்களை   குறிப்பதாக

அத்தம் நண்ணி அதர்பார்த் திருந்த
கொலைவெம் கொள்கை கொடும்தொழில் மறவர்
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகுறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய- அகம் 363/9-12

என்ற அடிகளிலும்

அத்தம் நண்ணி அதர்பார்த்திருந்த - காட்டினை அடைந்து அங்க வழிவருவாரைப் பார்த்துக்கொண்டிருந்த, கொலைவெம் கொள்கை கொடுதொழல் மறவர் - கொலையை விரும்பும் கோட்பாட்னையும் கொடிய தொழலையுமுடைய மறவர், ஆறு செல் மாக்கள் அருநிறத்து எறிந்த-வழிச்செல்லும் மக்களது அரிய மார்பிலே எறிந்த, எஃகு உற விழு புண் கூர்ந்தோர் எய்திய-வேலாலுற்ற சிறந்தபுண்ணை மிகக் கொண்டு பட்டோரை அடைந்த.

அத்தம் என்ற சொல் பாலை நிலத்தில் இருந்த பாதையை குறிக்கும் (ஐங் 351 /1 -3 )

‘ ……………………  என்றும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த
படு முடை பருந்து பார்த்து இருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே ‘குறு 283/4-8

என்ற அடிகளிலும்
எக்காலத்திலும் கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர் வழியில் இருந்து தங்கி வழிச்செல்வோரைக் கொன்றதனால் உண்டான அழுகியபுலாலைப் பருந்துகள் எதிர்நோக்கி இருக்கும் நீண்ட பழைய இடங்களிலுள்ள நீர் இல்லாத வழியில்

‘நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று
கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானை கானம் நீந்தி’ குறு 331/1-4

என்ற அடிகளிலும்
நெடிய மூங்கில் வாடி உலர்ந்துபோன நீரற்ற அரிய பாலைவெளியில்
வழிச்செல்லும் பயணிகள் அழியுமாறு அவரை எதிர்த்து நின்று
வளைந்த வில்லையுடைய மறவர்கள் காட்டில் கொள்ளைப்பொருளைப் பகிர்ந்துகொள்ளும்
கடுமையான யானைகள் இருக்கும் பாலைநிலத்தைக் கடந்து

‘நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில்
 துவர் செய் ஆடை செம் தொடை மறவர்
 அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை
 இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்’ நற் 33/5-8

என்ற அடிகளிலும்

நிறைந்த மழையை அறியாத, குறைந்த உணவையுடைய இரவினில்
பழுப்பேறிய ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள் வழியைப் பார்த்து அமர்ந்திருக்கும் அஞ்சத்தக்க பாதையினில் செல்ல எண்ணுகிறார் அவர் என்றால் அதை மறுப்பதற்கு

‘விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்’குறுந்தொகை-274/3,4

என்ற அடிகளிலும் அமைந்துள்ளது .
விடுவதற்கான அம்பினை வில்லோடும் கையினில் பற்றி, அந்த மரத்தின் கிளைகளில் ஏறி வழியில் வருவோரைப் பார்க்கும் கொடுமைமிக்க ஆடவர்(மறவர் ).

வேட்டுவர் குடிக்கும் குறவர் குடிக்கும் எந்த தொடர்பும் கிடையாது

வேட்டுவர் குடிக்கும் ,குறவர் குடிக்கும் எந்த தொடர்பும் கிடையாது .

    வேட்டுவர் குடிக்கும் ,குறவர் குடிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை குறிப்பதாக

'கோடு துவையா கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு
வயவர் மகளிர் என்றி ஆயின்
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம்' நற்றிணை (1-4)

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

வேட்டு என்ற சொல்லில் இருந்து வேட்டுவர் என்ற சொல் பிறந்தது .
வேட்டு வயவர் மகளிர் = வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரரின் பெண்கள் .
குறவர் மகளிரேம்= குறவர் குடியை சேர்ந்த பெண்கள் .

குன்றவர் என்ற சொல் குறிஞ்சி நில பொதுமக்களின்  பொது பெயராக குறிப்பதாக

குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் - பரி 9/67

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

குன்றவர் என்ற சொல்லில் இருந்து குறவர் என்ற சொல் பிறந்தது .

குறவர் குடியை சேர்ந்தவர்கள் மலைகளில் வாழ்ந்ததை குறிப்பதாக

மலை உறை குறவன் காதல் மட_மகள் - நற் 201/1
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்/அறியாது அறுத்த சிறியிலை சாந்தம் - நற் 64/4,5

பெரும் புன குறவன் சிறுதினை மறுகால் - குறு 82/4
குன்ற குறவன் புல் வேய் குரம்பை - ஐங் 252/1
பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில் - நற் 44/8
பெரும் புன குறவன் சிறுதினை மறுகால் - குறு 82/4
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப - அகம் 322/12
கடவுள் பேணிய குறவர் மாக்கள் - புறம் 143/3
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர் - கலி 39/17

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

குறவர் குடியை சேர்ந்தவர்கள்  மலைகளிலும்,காடுகளிலிலும் உழவு தொழில் செய்ததை குறிப்பதாக

நன்நாள் வரு பதம் நோக்கி குறவர்/உழாஅது வித்திய பரூஉ குரல் சிறுதினை - புறம் 168/5,6
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்/சில வித்து அகல இட்டு என பல விளைந்து - நற் 209/2,3

என்ற அடிகளில் அமைந்துள்ளது.

குறவர் குடியை சேர்ந்தவர்கள்  மலைகளிலும்,காடுகளிலிலும் வேட்டை  தொழில் செய்ததை குறிப்பதாக

வேட்டம் போகிய குறவன் காட்ட - அகம் 182/6
என்ற அடிகளில் அமைந்துள்ளது.

குறவர் குடியை சேர்ந்தவர்கள் பாலை நிலத்தில் வாழ்ந்தார்கள் என்பதை குறிப்பதாக

ஈர்ம் தண் பெரு வடு பாலையில் குறவர்/உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல் - ஐங் 213/2,3
என்ற அடிகளில் அமைந்துள்ளது.

குறவர் குடியை சேர்ந்தவர்கள் காடுகளில்  வாழ்ந்தார்கள் என்பதை குறிப்பதாக

கான குறவர் மட மகள் - நற் 102/8

என்ற அடிகளில் அமைந்துள்ளது.

சேக்கிழாரின் கற்பனை புனைவுகள்

சேக்கிழாரின் கற்பனை புனைவுகள்:

தஞ்சை பெரிய கோவிலில் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்ட  கண்ணப்பர் வரலாறு .

சிவன் மீது கொண்ட அதீத அன்பால் பக்தியால் சிவபரிட்சையின் போது வேடர் கண்ணப்பர் சிவலிங்கத்தில் ரத்தம் வழிவதை கண்டான் .வழியும் ரத்தம் நிர்க்காத தருணத்தில் பல வாறு முயன்றும் பயன்தாரா வண்ணம் தன் கையில் இருந்த அம்பினை எடுத்து கண்ணை பெயர்த்து சிவலிங்கத்தின் மீது பொருத்தினால் வழியும் ரத்தம் நிற்க்கும் என்ற எண்ணத்தில் தனது ஒரு கண்ணை பெயர்த்து எடுக்க அம்பினை எடுத்து கண் அருகில் கொண்டு செல்ல சிவன் கைகள் வந்து கண்ணப்பனின் கைகளை தடுத்து நிருத்தியது.இதுவே கி.பி.10 நூற்றாண்டு வரை வரலாறு..

இதனை கண்ட சேக்கிழார் மிகவும் மனம் உடைந்து என்ன செய்வது என்று அறியாமல் எதாவது செய்தாக வேண்டுமே என நினைத்து பார்த்து வேடர் கண்ணப்பர் சிவபரிட்சையை நினைவு கூறுகிறார். கண்ணப்பர் வழக்கம்போல சிவலிங்கத்துக்கு பூசை செய்கிறார்.சிவ லிங்கத்தில் ரத்தம் வழிகிறது ஓடுகிறான் கண்ணப்பன் அங்கும் இங்கும் நிலைதராத நிலையில் கண்ணப்பன் தன் கைகளில் இருந்த அம்பை எடுத்து தனது வல கண்ணை நோண்டி எடுத்து சிவலிங்கத்தின் மீது பொருத்துகிறார்.என்ன ஒரு ஆச்சர்யம் ரத்தம் நின்றுவிடுகிறது.பார்க்கிறார் சேக்கிழார் இதனை குறிப்பால் உணர்ந்த சிவன் தன் மற்றொரு கண்ணிலும் ரத்தம் கொட்ட விடுகிறார்.சேக்கிழார்க்கு ஆனந்தம்.இதனை அறிந்த கண்ணப்பன் தெய்வமே அப்பனே கடவுளே என கூறிக்கொண்டு எடுத்தான் பாருங்கள் அம்பை உடனே தன் இடக்கண்ணை பெயர்த்து எடுத்து லிங்கத்தின் மீது ரத்தம் வடியும் கண்ணில் வைத்தால் ரத்தம் நின்றுவிடும் என எண்ணி தன் இடக் கண்ணை பெயர்த்து எடுக்க முற்படுகிறான்.இதனை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த சிவன் அய்யயோ தன் பக்தனை துன்புருத்தி விட்டோமே என மனமுடைந்து கண்ணப்பனின் கைகளை பற்றி முக்தி அளிக்கிறார்.இதனை எல்லாம் கூர்ந்து கவனித்த சேக்கிழார்க்கு என்ன ஒரு பேராணந்தம்.தனது கற்ப்பனை புனைவுகளை எழுதுகிறார் சேக்கிழார்.

வரலாற்றில் புனையப்பட்ட கற்பனை புனைவுகள்

வரலாற்றில் புனையப்பட்ட கற்பனை புனைவுகள்:

**************************************************

"வங்க கடலொலி கைவர கைமாலையு யத்தோர்" என்று செப்பேட்டில் எழுதப்பட்டதை புலவர் செ.இராசு தொகுத்த வேட்டுவர் சமூக ஆவணங்கள் நூலில் "வங்க கடலொலி கைவர வாகை மாலை யுயுத்தோர்" என்று கூறியுள்ளார்.

வேட்டுவகுடியினர் போரில் வென்று சூடும் மாலை வாகை மாலை என சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்கள்  கூறுகிறது.

வேட்டுவர் குடியினர் போரில் வென்ற பிறகு சூடும் மாலை வாகைமாலை .போருக்கு முன்பு வாகை மாலை சூடினார்கள் என்று புராணங்களில் கூறியிருப்பது கற்பனை புனைவுகளாகும்.

இலைபுனை வாகை சூடி யிகன் மலைந் தலைகடற் றானை யரசட் டார்த்தன்று (புறப்பொருள் வெண்பாமாலை ,வாகை பாடல் 155)

போரில் வென்று சூடும் பூ வாகைப் பூ என்பதை புறப்பொருள் வெண்பாமாலை (கி.பி.9) உறுதிப்படுத்துகிறது.

போர்வினைக்குரிய போர் பூக்கள் சூடுதலைப் பற்றி வெட்சி முதலான திணைகளில் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

"கலவா மன்னர் கண்ணுறு நாட்பின் புல வேல் வானவன் பூப் புகழ்ந்தன்று"

"விரும்பார் அமரிடை வெல்போர் வழுதி அரும்பார் முடிமிசைப் பூப் புகழ்ந்தன்று"

"விறல் படை மறவர் வெஞ்சமம் கானின் மறப்போர்ச் செம்பியன் மலைப் பூ உரைத்தன்று"

புறப்பொருள் வெண்பாமாலை பொதுஇயல் படலத்தில் (240,241,242) சேர,பாண்டிய,சோழ மன்னர்களுக்கான பூக்கள் கூறப்பட்டுள்ளது.

"உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படை கல்லால் அரிது"(திருக்குறள் படைமாட்சி 162)

போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும் ,எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி தொல்படைக்கு அல்லாமல் வேறு எந்த படைக்கும் இருக்க முடியாது.

சேர,பாண்டிய,சோழ மன்னர்கள் தொல்படை(வேட்டுவர் குடியினர் படை) கூலிப்படை,நாட்டுப்படை,காட்டுப்படை போன்ற படைகளை வைத்திருந்தார்கள்.

சேர,பாண்டிய,சோழ மன்னர்கள் ஆட்சி முடிந்த பின்பும் போரில் வென்ற பிறகு வேட்டுவ குடியினர் வாகை மாலையை சூடினார்கள் என்பதை விசயநகர மற்றும் மதுரை நாயக்க ஆட்சியில் தோன்றிய இலக்கியங்கள் உறுதிப்படுத்துகிறது .

சேர,பாண்டிய,சோழ வேட்டுவ குடியினர் களப்பிளர் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்க்கு காளத்தி வேட்டுவ குடியினரின் உதவியை நாடினார்கள் .காளத்தி பகுதியில் இருந்து சில வேட்டுவ குடியினர்(காளத்தி வேட்டுவகுடி,புண்ணாடி வேட்டுவகுடி) சேர , பாண்டிய,சோழ வேட்டுவ குடியினருடன் சேர்ந்து களப்பிளர் ஆதிக்கத்தை ஒடுக்கினார்கள்.இதனால் காளத்தி வேட்டுவ குடியினர் ஆளுவதற்க்கு நிலங்கள் கொடுக்கப்பட்டது .இதுதான் உண்மை வரலாறு.வேட்டுவகுடியினர் (காவலன்,மாவலியர்,வேடர்,வேட்டுவர்,பூலுவர்) அனைவரும் காளகஸ்தி பகுதியில் இருந்து சேர கொங்கு மண்டலம், பாண்டிய மண்டலம்,சோழ மண்டலம் போன்ற பகுதிகளுக்கு வந்தார்கள் என வேட்டுவர் திருமண பாடலில் கூறியிருப்பது கற்பணைப் புனைவுகள் ஆகும்.

"வேடன் வேட்டுவனுக்கு காணி காளத்திபுரம் அந்த காளத்திபுரத்தில் வேடர் வேட்டுவர் பூவிலுவர் காவிலுவர் மாவிலுவர் இந்த ஐந்து வகை சாதி வேடர் கம்பளத்தவரும் காளத்திபுர நகரில் மிகுந்து தேசமெல்லாம் பரந்து கொடுவேறு பூமிகண்டு செடிவெட்டி ஊர் கட்டி வைத்தார்கள் .ஊர் கட்டின இடம் அவர்களுக்கு காணியென்றும் அவர்களுக்கு வருகை பேர் வேடனாயக்கர்களென்றும் வேட்டுவர் பூவிலுவர் காவிலுவர் மாவிலுவர் இவர்களுக்கு மண்ணாடியாரென்று பெயரும் கொடுத்து"

(சோழன் பூர்வபட்டயம் டி.1843,பட்டயத்தில் பின் வரலாறு எழுதிச் சேர்த்தது பக்-208)

மதுரை நாயக்கர் ஆட்சியில் (கி.பி16) இந்த வரலாறை எழுதி கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட சோழன் பூர்வ பட்டயத்தின் இறுதிப்பகுதியில் சேர்க்கப்பட்டது.

சோழன் பூர்வ பட்டயத்தில் கூறப்பட்ட வரலாறுகளை சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்களோடு ஓப்பீடு செய்து உண்மை வரலாறுகளை எடுத்து கொண்டு கற்பனை புனைவுகளை நீக்கி விட வேண்டும்.சோழன் பூர்வ பட்டயத்தில் கூறப்பட்ட வரலாறுகளும் ,சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் கூறப்பட்ட வரலாறுகளும் ஒன்றாக இருந்தால் உண்மை வரலாறு அல்லது முரண்பட்டு இருந்தால் கற்பனைப் புனைவுகள் ஆகும்.

பொத்தப்பி நாட்டில் இருந்து அஞ்சு சாதியினர்(காவலன்,வேட்டுவர்,மாவலியர்,பூலுவர்,வேட்டம் புரிபவர்(அ)வேட்டைக்காரன்(அ)வேடர்) சேர கொங்குநாடு ,சோழநாடு,பாண்டிய நாடு ,தொண்டைநாடு போன்ற நாடுகளுக்கு வந்தார்கள்  என்று சோழன் பூர்வ பட்டயத்தில் கூறியிருப்பது கற்பனைப் புனைவுகள் ஆகும்.

Sunday, September 2, 2018

மூதில் குடி(வேட்டுவர்) வரலாறு

#மூதில் #குடி(வேட்டுவர்) #வரலாறு:

************************************************

மூதில்= முது+இல்

முது= தொண்மையான,பழமையான,மூத்த

இல்=குடி

மூதில்= தொல்குடி

பெருமலை நாட்டை பரிபாலித்து வந்த மிருகராஜன் ,பரசன்,உத்தண்டன்,அச்சுதன் ,களப்பாளன் ஆகியோர் சேர,பாண்டிய,சோழர் ஆகிய மூவரையும் பிடித்து கடற்கோட்டையில் சிறை வைத்தார்கள்.இவர்களை பொத்தப்பி நாட்டில் இருந்த வேட்டுவ குடியினர் படையுடன் வந்து மூவேந்தர்களையும் மீட்டனர் என கி.பி.1934 ல் எஸ்.வேல்சாமி கவிராயர் எழுதிய குருகுல வரலாறு எனும் நூல் கூறுகிறது.

அந்துவ,மாந்த ,வில்லி,கரைய,வெங்கச்சி,புல்லை,மூல மற்றும் பல வேட்டுவ குடிகள் கொங்குநாட்டின் பூர்வீகக் குடிகள் என்பதை கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் உறுதிபடுத்துகிறது.

கி.பி.940 களில் கோனாட்டை ஆண்ட குடுமி வேட்டுவ குடியினர் (இருக்கு வேளிர்) மற்றும் பல வேட்டுவ குடிகள் கொங்குநாடு வந்து சோழர்கள் பெயரில் கி.பி.1320 வரை கொங்குநாட்டை ஆண்டார்கள் என்பதை கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் உறுதிப்படுத்துகிறது.

கி.பி.1070 க்குப் பிறகு செம்பிய வேட்டுவ குடி மற்றும் பல வேட்டுவ குடிகள் சோழநாட்டில் இருந்து கொங்குநாட்டுக்கு வந்ததை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகிறது.

கி.பி.1220 களில் பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டி,வேம்ப மற்றும் பல வேட்டுவ குடிகள் கொங்குநாடு வந்து பாண்டியர்கள் பெயர்களில் கி.பி.1320 வரை கொங்குநாட்டை ஆண்டார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.மேலும் பாணநாடு மற்றும் மகதநாட்டை ஆண்ட மாவலி வேட்டுவ குடியினர் (சாந்தப்படை,உரிமைபடை,புன்ன,பெருமாள்,வன்னி,பூழை மற்றும் பல) கொங்குநாடு (தலையூர் நாடு, வெங்கலநாடு) மற்றும் பாண்டிய நாட்டுக்கு வந்ததை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.

திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட முன்னை வேட்டுவ குடி,பழவூர் பகுதியை ஆண்ட மயில் வேட்டுவகுடி,மாவிலங்கை பகுதிகளை ஆண்ட இலங்கை வேட்டுவ குடி மற்றும் பல வேட்டுவ குடிகள் கி.பி.13 ஆம் நூற்றாண்டுகளில் கொங்குநாட்டுக்கு வந்ததை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.

இந்த இடப்பெயர்வுகள் அரசியல் காரணங்களுக்காக நடைபெற்றது.இதுபோல களப்பிரர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்க்கு பொத்தப்பி நாட்டில் வாழ்ந்த சில வேட்டுவ குடிகளை (காளத்தி,புண்ணாடி,காணியாளர்) பாண்டிய மன்னன் அழைத்து வந்தான்.

களப்பிர ஆட்சிக்கு முன்பு வேட்டுவகுடிகளை ஐந்து பெயர்களில் அழைக்கப்பட்டனர் என்பதை சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகிறது.பொத்தப்பி நாட்டில் இருந்து அஞ்சு சாதியினர் (வேட்டுவர்,காவலன்,பூலுவர்,மாவலியர்,வேட்டம் புரிபவர்(அ)வேட்டைக்காரன்(அ)வேடர்) சேர,சோழ,பாண்டிய நாட்டுக்கு வந்தார்கள் என்று குருகுல வரலாறுகளில் கூறியிருப்பது கற்பனை புனைவுகளாகும்.

வரலாற்றில் புனையபட்ட கற்பனை புனைவுகள்

#போருக்கு #உரிய #மலர்கள்:

#வெட்சி #பூ : ஆநிரைகளை பகைவர் நாட்டில் கவரும் போது வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

#கரந்தை #பூ : பகைவர் கவர்ந்த ஆநிரைகளை மீட்கும் போது வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

#வஞ்சி #பூ : குடியிருப்புகளைப் பாதுகாக்கும் போதும்,அழிக்கும் போதும் வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

#நொச்சி #பூ : கோட்டையை (அரண்) பாதுகாக்கும் போது வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

#உழிஞை #பூ : கோட்டையை(அரண்) அழிக்கும் போது வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

#தூம்பைப் #பூ : போர்களத்தில் பகைவரோடு போர்புரியும் போது வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

#வாகைப் #பூ : பகைவரைப் போரில் வென்றபோது வேட்டுவ குடியைச் சேர்ந்த போர் வீரர்கள் சூடும் பூ.

போருக்கு உரிய பூக்கள் போர்வீரர்களுக்கு வழங்கப்படுவதை பறம்- 289 கூறுகிறது.

மேலே சொல்லப்பட்ட அனைத்துப் போர்களையும் வேட்டுவ குடியினர் செய்தனர் என்பதைக் கல்வெட்டுகள் மற்றும் சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகிறது.

திருஞானசம்பந்தர் (கி.பி.650-கி.பி 750),சுந்தரர் (கி.பி.780-கி.பி.870), மாணிக்கவாசகர் (கி.பி.9) ,கல்லாடதேவநாயனார் (கி.பி.10) மற்றும் சேக்கிழார் (கி.பி.12) ஆகியோர் ஏறக்குறைய இந்த காலங்களில் வாழ்ந்தவர்கள்.இவர்கள் கண்ணப்ப நாயனாரைப் பற்றி கூறியுள்ளார்கள்.கண்ணப்ப நாயனார் கி.பி.7 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்.

தமிழ் மண்ணில் களப்பிரர்கள் ஆட்சி ஏறக்குறைய கி.பி.300 -கி.பி 550 வரை நடந்ததாக வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

உண்மை வரலாறுகளோடு கற்பனை புனைவுகளும் கலந்து இருப்பதுதான் புராணக்கதை.

கி.பி.10 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் கண்ணப்ப நாயனார் வரலாறு புடைப்பு சிற்ப்பங்களாக செதுக்கப்பட்டுள்ளதுதான் உண்மை வரலாறு.இந்த உண்மை வரலாறுகளோடு சேக்கிழார் தனது கற்பனைப் புனைவுகளையும் சேர்த்து கண்ணப்ப நாயனார் வரலாறுகளை கூறியுள்ளார்.

குருகுல காவியம் ,அப்பிச்சிமார் காவியம்,கொங்கு மண்டல பூர்வ வரலாறு,பஞ்சவர்ண ராஜகதை போன்ற கதைகள் புராணக் கதைகளாகும்.இந்த புராணக் கதைகள் விஜயநகர மற்றும் மதுரை நாயக்கர் ஆட்சியில் தோன்றிய புராணக் கதைகளாகும்.

வேட்டுவ குடியினரை ஐந்து பெயர்களில் சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டனர்.இதனால் புராணங்கள் வேட்டுவ குடியில் 5 சாதிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

விசயநகரம் ஆனைகுந்தி கண்ணப்ப கோத்திரத்தை வரவழைத்து என்று வடகரை நாட்டு செப்பேடு (கி.பி.14) கூறுகிறது.ஆகவே, விசயநகர வேந்தர்கள் தங்களை ஆனைகுந்தி கண்ணப்ப கோத்திரம் என்று அழைத்துக் கொண்டதை இச்செப்பேடு கூறுகிறது.

கி.பி.1529 ல் விசுவநாத நாயக்கர் ஆனைகுந்தி பகுதியைச் சேர்ந்த வேடகம்பளத்தவர்களை (தெழுங்கு பேசுபவர்கள்) தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்தான்.இவர்கள் தங்களை கண்ணப்பர் காளகஸ்தி சாதி என்று தங்களை அழைத்துக் கொண்டார்கள்.(டி.3118,3256,2851).

இதுபோல தமிழ்நாட்டை ஆண்ட தமிழ் வேட்டுவ குடியினரும் தங்களை கண்ணப்ப கோத்திரம் என்று விசயநகர மற்றும் மதுரை நாயக்கர் ஆட்சியில் அழைத்துக் கொண்டார்கள்.

வேடர் குடிகளில் கண்ணப்ப நாயனார் மிகவும் புகழ் பெற்றவர்.இதனால் வேட்டுவ குடியினர் அனைவரும் தங்களை கண்ணப்ப கோத்திரம் என்று கூறிக்கொண்டார்கள்.

கி.பி.1808 களில் கோப்பண மன்றாடியார் வம்சாவழியினர் மெக்கன்சியிடம் கொடுத்த கைபியதுகள் (கொங்கு மண்டல பூர்வ வரலாறு (டி .3133) மற்றும் பரிவிபாளையம் வரலாறு(டி.2964))

இந்த கைபியதுகளில் கூறப்பட்ட வரலாறுகளை கல்வெட்டுகள்,செப்பேடுகள்,சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்கள் ஆகிய சான்றுகளில் கூறப்பட்ட வரலாறுகளோடு ஒப்பீடு செய்து கற்பனை புனைவுகள் மற்றும் தற்புகழ்ச்சிகளை நீக்கிவிட வேண்டும்.இதுதான் உண்மையான வரலாற்று ஆய்வு.

கண்ணப்ப நாயனார் கி.பி7 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்.கி.பி.7 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு வேட்டுவ குடியினரை வேட்டுவர் என்றும் காவலன் என்றும் பாணர்கள்(மாவலியர்) என்றும் புன் பொதுவர் (பூலுவர்) என்றும் வேட்டம்(வேட்டை) புரிபவர்கள் என்றும் இந்த ஐந்து பெயர்களில் சங்க இலக்கியங்களில் அழைக்கப்பட்டனர்.சேர மன்னன் கண்ணப்ப நாயனார் செய்த செயல்களை (கி.பி. 7) கண்டு உடுப்பூருக்கு சென்று புலி வேடர்களை(வேட்டுவர்,காவலன்,மாவலியர்,பூலுவர்,வேடர்(அ)வேட்டைக்காரர்(அ)வேட்டம் புரிபவர்) கொங்கு நாட்டுக்கு அழைத்து வந்தான் என கொங்குமண்டல பூர்வ வரலாறு மற்றும் புரவிபாளையம் வரலாறுகளில் கூறியிருப்பது கற்பனைப் புனைவுகளாகும்.

கண்ணப்பர் உடுப்பூரை சேர்ந்தவராக புராணங்கள் கூறுகிறது.விசயநகர மற்றும் மதுரை நாயக்கர் ஆட்சியில் தமிழ் வேட்டுவ குடிகள் தங்களை கண்ணப்ப கோத்திரம் என்று அழைத்துக் கொண்டார்கள்.இதனால் கோப்பண மன்றாடியார் வம்சாவழியினர் தங்களது அஞ்சு சாதியும் உடுப்பூரில் இருந்து கொங்கு நாட்டுக்கு வந்தார்கள் என்று ஒரு கற்பனை புனைவுகளை உருவாக்கி உண்மை வரலாறுகளோடு சேர்த்து எழுதிக் கொண்டார்கள்.

Saturday, September 1, 2018

தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் (1973/17)

கல்வெட்டு காலம் கி.பி.600-கி.பி.700:

இடம்: தருமபுரி மாவட்டம் அரூர்,சின்னாங்குப்பம் வேடியப்பன் கோயிலுள்ள நடுகல்.(தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் 1973/17)

காலம்: கங்கர் ஆட்சி ,(கி.பி.600-கி.பி.700)

செய்தி: வீரசேனாதிபதியார் (கங்கனின் படைதளபதி) என்பவர் வேட்டுவ குடியைச் சேர்ந்த இளவரையர் என்பவனின் படையோடு போரிட்டு இறந்த செய்தி.

கல்வெட்டு:

1. .........................................

2. ............... விசையன் கங்க

3. ற்................ன்றரு மக்கள்

4. வீரச் சேனாதியாரு

5. பருவான வேட்டுவ இளவரை

6. சேனை எறிந்து பட்டார்

7. கல்

குறிப்பு:

வேட்டுவ குடியைச் சேர்ந்த இளவரையன் என்பவர் பாண மன்னனின் பங்காளி ஆவார்.இங்கு வேட்டுவ என்ற சொல் வேட்டுவ குடியைச் சுட்டும்.

செங்கம் நடுகற்கள்(1971/74)

#கல்வெட்டு #காலம் #கி.#பி.700 -#கி.#பி.800

#இடம்: செங்கம் தாழையூத்து வேடியப்பன் கோயிலுள்ள நடுகல்(செங்கம் நடுகற்கள் 1971/74)

#காலம்: இரண்டாம் நந்திவர்மனின் 2வது ஆட்சியாண்டு ;கி.பி.734.

#செய்தி: வேணாட்டில் வெண்மறுக்கோட்டு என்ற ஊரை சேர்ந்த வேட்டுவர் தாழையூரில் ஆநிரை கவர்ந்ததைப் பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.

#கல்வெட்டு:

கோவிசைய நந்திபன்றரையர்க்கு யாண்டு இரண்டாவது ஊணமிறையார் வேணாடிள வெண்மறுக்கோட்டு வேட்டுவர் தாழையூர் தொறுக் கொண்ட நான்று தாழை ஊருடைய வண்ணக்க கடையனார் தொறு மீட்டு பட்டார்.

#குறிப்பு:இங்கு வேட்டுவர் என்ற சொல் வேட்டுவகுடியை சுட்டும்.வெண்மறுக்கோட்டு ஊரைச் சேர்ந்த வேட்டுவர் பாண மன்னனின் பங்காளிகள் ஆவார்கள்.

Friday, August 31, 2018

திணை (இனக்குழு)

#திணை=#இனக்குழு=#குடி=#குலம்=#சாதி

நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகெள் பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே
இன்றியவர் என்னும் எண்ணியற் பெயரோ-
டன்றி அனைத்தும் அவற்றியல் பினவே

(தொல்க்காப்பியம்,சொல்லதிகாரம் 162)

#பொருள்:

நிலப்பெயர்சொல்,குடிப்பெயர்சொல்,குழுப்பெயர்ச் சொல்,வினைப் பெயர்ச்சொல்,உடைப் பெயர்சொல்,பண்புகொள் பெயர்சொல்,பலரைக் குறிக்கும் நிலையான முறைப்பெயர்ச் சொல்,பலரைக் குறிக்கும் நிலையான சினைப் பெயர்ச்சொல்,பலரைக் குறிக்கும் நிலையான திணைப் பெயர் சொல்,கூடி வருகின்ற பழக்கமுடைய ஆடும் இயல்புடையவர் பெயர்ச்சொல்,இவையன்றி,எண் இயல்புடைய பெயர்சொல்லுடன்,அவற்றை போன்ற பிற அணைத்தும் மேற்குறிய இயல்பை உடையன. அதாவது உயர்திணை பால்களான ஆண்பால்,பெண்பால்,பொதுபால் ஆகிய மூன்றில் ஒன்றைக் குறிக்கும்.

#எடுத்துக்காட்டு:

#நிலப்பெயர்ச் #சொல்:

கால்நடைக் கூட்டத்தை குறிப்பதற்க்கு பழந்தமிழில் "ஆயம்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.(Tamil lexicon,Vol-IV,223,Vol-IV,P-2104,2272)

ஆயம் (புறம் -230/1) என்ற சொல் சங்க இலக்கியத்திலேயே பயன்படுத்தப்பட்டது.நிலத்தை அடிப்படையாக வைத்து உருவான பெயர் "நிலப்பெயர்".

கால்நடைக் கூட்டங்கள் (ஆயம்) முல்லை நிலத்தில் இருந்தது.இதனால் முல்லை நிலத்தில் வாழ்ந்த மனிதர்களை ஆயர் என்றழைக்கப்பட்டனர்.

இது போலப் பல பெயர்கள் உருவானது.

#குடிப்பெயர்ச்சொல்:

சங்க காலத்தில் வினைப்பெயர் தொழில்பெயராக உருவானது .தொழில்பெயர் குடிபெயராக (இனக்குழு) உருவானது.

#உதாரணம்:

தொல்க்காப்பியர் காலத்துக்கு முன்பு தமிழ் மண்ணில் ஒரு மக்கள் குழுவினர் (வில்லர்) வேட்டைவினை,குடிகாவல்வினை,போர்வினை போன்ற வினைகளை (செயல்கள்) செய்தார்கள்.இந்த செயல்கள் அந்த மக்கள் குழுவினர் தினமும் செய்யகூடிய வேலையாக மாறியது(தொழில்).தொல்க்காப்பியர் அந்த மக்கள் குழுவை வேட்டுவர் என்றழைத்தார்.வேட்டுவர் என்பது திணைப்பெயர் (இனக்குழு(அ)குடிப்பெயர்) என்றே தொல்க்காப்பியர் கூறியுள்ளார்.(தொல்க்காப்பியம்,பொருள்,அகத்திணை-21).இப்படித்தான் சங்க காலத்தில் வேட்டுவர் குடி உருவானது.சங்க மற்றும் காப்பிய கால இலக்கியத்தில் வேட்டுவர்களை தொல்குடி,மூத்தகுடி,வாள்குடி,மறக்குடி,வேடர்குலம்,எயினர் குலம் என்றழைக்கப்பட்டனர்.

ஒரு மக்கள் குழு உயிர்களை கொல்லும் கருவிகளை செய்தார்கள் (வினை).இந்த செயல்கள் அந்த மக்கள் குழுவினர் தினமும் செய்யகூடிய வேலையாக மாறியது(தொழில்).அந்த மக்கள் குழுவினரை கொல்லன் என்றழைக்கப்பட்டனர்.இப்படித்தான் கொல்லர் குடி உருவானது.

ஒரு மக்கள் குழுவினர் பறை அடிக்கும் வினைகளை(செயல்) செய்தார்கள்.இது அந்த மக்கள் குழுவினர் தினமும் செய்யக்கூடிய வேலையாக மாறியது(தொழில்).அந்த மக்கள் குழுவினரை "பறையன்" என்றழைக்கப்பட்டது.இப்படித்தான் பறையர் குடி உருவானது.

குறவர் குடி,வலைபரதவர் குடி,கள்வர் குடி,உழவுக்குடி (வேளாண்மாந்தர்),வாணிககுடி,பாணன்குடி,புலையர் குடி, இதுபோல பல குடிப்பெயர்கள் உருவானது.

வேட்டுவர் குடியினர் முடிமன்னர் பரம்பரையினர்.ஆயர் குடியினரும் உயர்ந்த குடியினர். இதனால் தொல்க்காப்பியர் உயர்ந்தோர்களை(ஆயர்குடி,வேட்டுவர் குடி) மட்டும் கூறியுள்ளார்.(தொல்பொருள்,அகத்திணை -21).ஆயர்குடி மற்றும் வேட்டுவர் குடி தவிர மற்ற அனைத்து குடிகளையும் தொல்க்காப்பியர் பொருள் அகத்திணையில் 22,23,24 செய்யுளில் கூறியுள்ளார்.திணை(தொல்,பொருள் அகம் 21)என்ற சொல் குடியை (இனக்குழு) சுட்டும்.இங்கு திணை என்ற சொல் நிலம் எனப் பொருள் கொள்ளக்கூடாது.

Saturday, August 25, 2018

தொல்குடி வேட்டுவர்

வேட்டுவ குடியினர் பாலை நிலத்தில் (முல்லை ,குறிஞ்சி ) வாழ்ந்தவர்கள் .

"காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர்
செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட
மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன்புல வைப்பும்" (பதி 30/ 9-13)

#உரை :
காந்தள் பூவால் தொடுக்கப்பட்ட தலைமாலையினையும், கொலைபுரியும் வில்லினையும் கொண்ட வேட்டுவ குடியினர்
செம்மையான கொம்பினையுடைய காட்டுப்பசுவின் இறைச்சியோடு, காட்டிலுள்ள  வலிமையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களையும் எடுத்துக்கொண்டு, அவற்றைப்  பொன்னை உடைய கடைத்தெருக்களில் கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும் குன்றுகள் கூடிக்கிடக்கும் புன்புலமாகிய பாலைநில ஊர்களின் மக்களும் .

சங்க இலக்கியத்தில் தலைவர் மற்றும் தலைவியர் பெயர்கள்(#பொது #பெயர்கள்):

#குறிஞ்சி :வெற்பன் ,சிலம்பன் ,பொருநர் ,கொடிச்சி,மலை நாடன்
#முல்லை :கான நாடன்,குறும்பொறை நாடன் ,அண்ணல் ,தோன்றல்,மனைவி
#மருதம் :ஊரன் ,மகிழ்நன்
#நெய்தல் :புலம்பன் ,சேர்ப்பன் ,துறைவன் ,

சங்க இலக்கியத்தில் மக்கள் பெயர்கள் (#பொது #பெயர்கள் ):

#குறிஞ்சி :குன்றவர் ,குறவர் ,குறத்தி ,கானவர்
#முல்லை :ஆயர் ,கோவலர் ,இடையர் ,பொதுவர் ,அண்டர் ,கோபாலர்,

#பாலை :எயினர் ,எயிற்றி ,கானவர் ,ஆறலை கள்வர் , ,வம்பலர் ,வன்சொல் இளைஞர்,மீளி

#மருதம் :உழவர் ,உழத்தி,களமர்,வினைவலர்,கடையர்

#நெய்தல் :பரதவர் ,நுளையர் ,உமணர்,அளவர்

படை வீரர்களை மறவர் ,மழவர் ,வயவர்,இளையர் என அழைக்க பட்டது .

#சங்க #இலக்கியத்தில் #பேசப்பட்ட #இனங்கள்:

வேட்டுவர் இனம் (வேட்டுவ கவுண்டர் ,புன்னம் வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் ),மலையன் இனம் ( மலையமான் ,நந்தமான் ,சுரதிமான் ), இடையர் (கோனார் )இனம் ,பறையர் இனம் ,திரையர் இனம் ,கள்வர் இனம் (கள்ளர் ) மற்றும் வேளாண் இனம் ( வெள்ளாளர் ),குறவர் இனம் ,கொல்லர் இனம் ,வண்ணன் இனம் ,குயவர் இனம் மற்றும் பல

சங்க உவமைகள்(பாலை நில வேட்டுவர் குடியினர்)

புலவர் உலேச்சனார் புன்னை மரத்தின் கரிய கிளைகளுக்கு இரும்பினையும்,அதன் பசிய இலைகள் நீலத்திற்க்கும் ,மலர்களுக்கு வெள்ளையையும் ,மலரின் மகரந்த துகள்களுக்கு பொன்னையும் உவமையாக உவமிக்கிறார் .(நற் -249/1-4)

காட்டில் வாழும் கானவரின் (வேட்டுவரின்) உரம் பெற்ற கைகள் வடித்த இரும்புக்கு உவமைப்படுத்தப்பட்டுள்ளது.(அகம்-172/6)

ஒரு நிலத்தில் காணப்படும் பொருள் மற்றொரு நிலத்துக்கு உவமையாதல் இல்லை என்பது கிடையாது.காட்டில் வேட்டையாடும் தொழில் கடலில் மீன் பிடித்தலுக்கு உவமிக்கப்படுகிறது.

மரன்மேற் கொண்டுமான் கணம் தகைமார்
வேந்திறல் இளையவர் வேட்டெழுந்து தாங்குத்
திமிழ்மேற் கொண்டு வரைச்சுரம் நீந்தி.(நற்-111/4-6)

எனத் திணை மாறி வந்துள்ளது.பாலை நில மக்களின் வேட்டுவ வாழ்வு கடற்கரை வாழ்வாரோடு உவமிக்கப்பட்டுள்ளது.

சங்க இலக்கியத்தில் உவமைகள் எனும் நூலில் பேராசிரியர் டாக்டர் .ரா. சீனிவாசன் எம்.ஏ.,எம்.லிட்.,பிஎச்.டி.,இடர்சார்பொடு பொருந்திய உவமைகள் பற்றி தனது நூலில் கூறியுள்ளார்.

இது போல பாலை நிலத்தைச் சேர்ந்த வேட்டுவ குடியினரின் வாழ்வு நெய்தல் நிலத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வோடு உவமைப்படுத்தப்பட்டுள்ளது.(மதுரைக்காஞ்சி 116,அகம்-36/6,270/3)

தொல்குடி வேட்டுவர் வரலாறு

#தொல்குடி #வேட்டுவர் #வரலாறு:

**************************************************

ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த
வேல்கெழு தானை வெருவெரு தோன்றல்
ஆனிரைகளையுடைய  கொங்கரது நாட்டை
தன் நாட்டோடு அகப்படுத்திக் கொண்ட
(பதி.22/15-16)

வில் வேட்டுவ குடியைச் சேர்ந்த சேர மன்னன் ஆநிரைகளையுடைய வெங்கச்சி வேட்டுவ குடியைச் சேர்ந்த தலைவனின் (#கொங்கர்) நாட்டை வென்று மழ கொங்கு நாட்டை ஆண்ட புல்லை வேட்டுவ குடியைச் சேர்ந்த கொல்லிமழவனை வென்று சேர கொங்கு நாட்டோடு இணைக்கப்பட்டு இருக்கிறது.

முல்லை நிலத்தில் ஆயர்கள் ஆடு மாடுகளை வளர்த்தல்,மேய்த்தல்,பால் கறத்தல் போன்ற தொழில்களை செய்தனர்.அப்பகுதிகளை ஆண்ட வேட்டுவ குடியைச் சேர்ந்த மன்னனுக்குத் தான் அந்த முல்லை நிலப்பகுதிகளும் ,கால்நடைகளும் சொந்தம்.

சங்க இலக்கியத்தில் வேட்டுவர் என்று அழைக்கப்பட்டவர்கள் கல்வெட்டுகளில் வேட்டுவர் என்று அழைக்கப்பட்டனர்.

சங்க இலக்கியத்தில் காவலர்(அ) காவலன் என்று அழைக்கப்பட்ட வேட்டுவ குடியினரை கல்வெட்டுகளில் காவலன் என்று அழைக்கப்பட்டனர்.

வேட்டுவ குடியினர் வேட்டம்(வேட்டை) புரிந்ததை சங்க இலக்கியங்கள் கூறுகிறது.இதனால் இவர்களை கல்வெட்டுகளில் வேட்டைக்காரன்(அ) வேடர்(அ)வேடுவர் என்று அழைக்கப்பட்டனர்.

முல்லை நிலத்தை ஆண்ட வேட்டுவ குடியினரைப் பற்றி புறப்பொருள் வெண்பாமாலை ,வாகைப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.

செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல்
இருநிலம் காவலன் இயல்பு உரைத்தன்று
(171.#அரச #முல்லை)

#உரை:
பெரும் பகையை வருத்தும் சிவந்த சோதியாற் பொலிந்த நெடிய வேலினையுடைய பெரிய நிலத்தை (#முல்லை) ஆளுகிற காவலன்(#வேட்டுவன்) தன்மையை கூறியது.

தவழ்திரை முழங்குந் தண்கடல் வேலிச்
கமழ்தார் மன்னவன் காவன் மிகுத்தன்று
(178.#காவன் #முல்லை)

#உரை:

ஊருந்திரை ஆரவாரிக்கும் குளிர்ந்த கடலை வேலியாக உடைய நிலத்து கமழ்தார்யுடைய மன்னன் பாதுகாத்தலை சிறப்பித்தது.

அடல்வேல் ஆடவர்க்கு அன்றியும் ,அவ் இல்
மடவரால் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று
(175.#மூதில் #முல்லை)

#உரை:

மூதில் முல்லை என்பது புறத்திணைக்குரிய ஒரு துறையாகும் .புறத்திணையில் ஒன்றான வாகைதிணையில் வரும் துறை.மூதில் என்பது மூத்தகுடி .மூத்த முல்லை குடி .அது மேம்பட்ட குடி.

வேட்டுவ குடியைச் சேர்ந்த பெண்களை (#வேட்டுவச்சி) சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்களில் "#மூதிற் #பெண்டிர்" "#மூதில் #மகளிர்" என அழைக்கப்பட்டனர் (புறம் 19/15,279/2)

மூதில் மகளிரைப் பற்றி புறநானூறு கூறுகிறது.(புறம்.326,333)

முல்லை நிலத்தில் "சிலைவில் பகழிச் செந்துவர் ஆடைக்  கொலைவில் எயினர் தங்கை" (ஐங் -363) தலைவியாக கூறப்படுகிறது.

முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினியர்
(#சிலம்பு #காடுகாண் #காதை ,64-66)

முல்லையும் ,குறிஞ்சியும் பாலை வடிவத்தை (படிவம்) எடுத்துள்ளன என சிலப்பதிகாரம் கூறுகிறது. மழை பெய்ததும் இப்பாலை வடிவம் முல்லை,குறிஞ்சி வடிவமாக மாறும்.

முல்லை பாலையாக மாறும் (அகம்-111).குறிஞ்சி பாலையாக மாறும் (கலித்தொகை 2 வது பாடல்) .பாலை வீரர்களின் #கொற்றவை நிலை,துடிநிலை என்பன குறிஞ்சியின் ஒரு பகுதியாக குறிப்பிடப்படுகின்றன(புறத்திணையில் -4)

திருமுருகாற்றுப்படையில் #முருகனை #கொற்றவை #சிறுவ (258),#பழையோள் #குழவி (259) என்னும் தொடர்களால் குறிப்பிடப்படுகிறது.

தொல்குடி வேட்டுவ வேளிர்

வேளிர்:

***********************************************

வேட்டு மாந்தர்=வேள் மாந்தர்                       வேட்டு என்ற வேர் சொல்லில் இருந்து வேள் என்ற சொல் பிறந்தது.                        வேள் என்பது ஒருமை வேளிர் என்பது பன்மை சொல்                           சங்க காலத்தில் போர் தொழில்
 செய்தவர்களை வேட்டுவர் என்று அழைக்கப்பட்டனர் .வேளிர்கள் வேட்டுவ குடியை சேர்ந்தவர்கள்.

வேட்டுவர் =வேளிர்

சங்க காலத்தில்  வில்லர் (வில் எயினர் ) என்று அழைக்கபட்ட குலகுழுக்கள் (இனக்குழு ) மண்ணையும் ,மக்களையும் பாதுகாக்க  போரை விரும்பி (போர் வேட்டு வினை ) செய்தார்கள் .இவர்களை தொல்காப்பியர் வேட்டுவர் என்று அழைத்தார் .வேட்டுவர் என்ற சொல்லில் இருந்து வேள் என்ற சொல் பிறந்தது .வேட்டுவர் என்ற சொல் போர் வினையை(போர் தொழில் ) சுட்டும் சொல் .வேட்டுவர்  போர் தொழில்  செய்தவர்கள் .வேட்டுவ குடியில் இருந்துதான் வேளிர்களும் ,வேந்தர்களும் உருவானார்கள் .

                          வேட்டு =வேள்
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை - அகம் 144/14
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர் - அகம் 157/4
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு/வேறு பல் பூளையொடு உழிஞை சூடி - பட் 234,235

அரும் படை தானை அமர் வேட்டு கலித்த - வஞ்சி 26/48
செரு வேட்டு புகன்று எழுந்து - வஞ்சி 29/14
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் - கலி 23/9

                       வேட்டு =வேட்டுவர்
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட - முல் 26
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு/வயவர் மகளிர் என்றி ஆயின் - நற் 276/2,3
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ - அகம் 387/9
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு/வேய் பயில் அழுவத்து பிரிந்த நின் - அகம் 318/13,14
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர் - அகம் 208/15
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த - அகம் 372/4

                   வேட்டம் =வேட்டை

சங்க காலத்தில்  வேட்டை தொழிலை குறிக்க வேட்டம் ,வேட்டை போன்ற சொற்கள் பயன்படுத்தபட்டது .

பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே - குறு 123/5
பெரும் கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர் - அகம் 140/1
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் - பெரும் 111
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து - நெடு 129
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாது - பட் 92
வேட்டம் போகிய குறவன் காட்ட - அகம் 182/6
விசைத்த வில்லர் வேட்டம் போகி - அகம் 284/9
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் - புறம் 152/6
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என - அகம் 70/1
வேட்ட கள்வர் விசி உறு கடும் கண் - அகம் 63/17
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என - மணி 18/168

                                                                        வேட்டவர்=விரும்பியவர்                  


வேட்டவர் பெறாது வீதி வெறு நிலம் கிடந்த அன்றே - சிந்தா:13 2972/4
நிலை இலா உலகில் நின்ற வண் புகழை வேட்டவன் நிதியமே போன்றும் - சிந்தா:10 2107/1